“ நந்தலாலா” விமர்சனம்

திசெம்பர் 8, 2010

எனது நெருங்கிய தோழியும் நானும் நந்தலாலா சினிமா பார்க்கச் சென்றிருந்தோம். கிட்டத்தட்ட தியேட்டரே காலியாய் இருந்தது. நமக்கு வசதிதான் என்று கருதிக் கொண்டு உள்ளே சென்றோம். தோழியோ நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தாள்.

பாரு நிவேதிதா – குயமோகன் இருவரும் தமிழ் எழுத்தாளர்களில் பிழைக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் என்பதை நந்தலாலா பார்த்து முடித்ததும் புரிந்து கொண்டேன். இவர்களின் புத்தகங்களை வாசிப்போர் நிச்சயம் மன நோயாளிகளாய் மாறி விடுவர்.

மிஷ்கின் : தமிழர்கள் எந்தளவுக்கு பைத்தியக்காரர்கள் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். இன்னும் தமிழ் இயக்குனர்கள் பெண்களின் கவட்டிக்குள் இருந்து வெளியே வரவில்லை என்பதில் மிஷ்கினும் அடக்கம்.  நல்ல கதையமைப்புக் கொண்ட நந்தலாலாவை, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் மாற்றி விட்டார் மிஷ்கின்.

இளையராஜா : பின்னனி இசையும், பாடலும் படு மட்டம். இவரின் இசை படத்தில் இழையோடிய மெல்லிய சோகத்தை காணாமல் ஆக்கி விட்டது. சரக்கு தீர்ந்து விட்டது போலும். இளையராஜாவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

காட்சி அமைப்புகள் : வித்தியாசமான கோணம் என்றுச் சொல்லி, வாந்தி வரக்கூடிய காட்சிகளை படம் முழுதும் வைத்திருக்கிறார் மிஷ்கின். படம் முழுவதும் தொனிக்க வேண்டிய சோகம் இழையோடும் கதையமைப்பை, தன் காட்சி அமைப்பால் கொத்துக் கறியாக்கி விட்டார்.

கதை : நல்ல கதை, ஆனால் சொல்லிய விதமோ நல்ல சைவச் சாப்பாட்டில் நட்ட நடுவே கோழிக்கால் வறுவலை வைத்தது போல இருக்கிறது.

பைத்தியம் என்றால் ஹீரோயிச மனப்பான்மை, ஷூக்களை மாற்றிப் போடுதல், காச் மூச் என்று கத்துதல்,  முழித்தல், உடைகளை காமாச் சோமா என்று அணிதல் ( ரேமெண்ட் ஷூட் பேண்ட் ஒவ்வொரு காட்சியிலும் புத்தம் புதிதாக தெரிகிறது ) என்று முத்திரை குத்தி வைத்திருக்கின்றார்கள்.

சோகம் என்றால் அம்மா, விபச்சாரம் என்றாகி விட்டது. பாலியல் கொடுமை, சாதிச் சண்டைகளை பெரும் பிரச்சினைகள் என்றுச் சொல்கிறது சினிமா.

இதோ தமிழ் நாட்டில் வீதி தோறும் சாதிச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் சாதி பேசப்படுகிறது. விபச்சாரத்தைப் பற்றிச் சிந்திக்காத ஆண்களே கிடையாது. மிஷ்கின் இருக்கும் சினிமாவினால் தான் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மிஷ்கின் 90 சீன்களில், கதைக் காவியத்தையே படைக்கலாம் என்பதை நன்கு அறிந்திருக்கும் தாங்கள், ஏன் இன்னும் இந்த தமிழர்களின் கமர்ஷியல் விஷயங்களை முன்னிறுத்தி, உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கின்றீர்கள்? மிக நல்ல படைப்பாளியாய், சினிமா வரலாற்றில் பெயர் பதிய முனையுங்கள். பணமும், புகழும் நாளை உங்களை விட்டு விலகும். ஆனால் சாதனையோ உங்கள் சந்ததிகளையும் தொடரும்.

குப்பையில் மாணிக்கங்களை தேட முயலுங்கள்.

வாழ்த்துக்கள்

– பஞ்சரு பலராமன்

 


நந்தலாலா – சாரு நிவேதிதாவின் முகத்திரை கிழிகிறது

நவம்பர் 28, 2010

எந்த வித சமரசமும் இல்லாமல் எழுதுபவர் என்று தன்னைத் தானே சொரிந்து கொண்டு, எழுத்தாளர் என்று கூவிக் கொண்டிருக்கும் சாருவைப் பற்றி கீழே இருக்கும் பதிவரின் பதிவை படித்து விடுங்கள்.

சாருவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

கிகிஜூரோ படத்தினை ஆன்லைனில் பார்க்க விருப்பமா? இதோ கீழே கிளிக் செய்யவும்.

கிகிஜூரோ

– பஞ்சரு பலராமன்.


%d bloggers like this: