கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


சுயநலமே பொதுவாழ்க்கையின் தத்துவம்

ஒக்ரோபர் 24, 2011

மேற்கண்ட தலைப்பைப் படித்தவுடனே உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் நான் யாரைச் சொல்கிறேன் என்று. அதற்கு ஒரு உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.

தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக மாதம் 100 கோடி வருமானம் வரும்படி செய்திருக்கிறது. அதாவது கேபிள் இணைப்பிற்கு 20 ரூபாயும், லோக்கல் சானல்களுக்கு மாதம் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் கட்டணம் வசூல் செய்கின்ற வகையிலும் மேற்படி வருமானம் வருகிறது என்றுச் சொல்கின்றார்கள்.

20 ரூபாய்க்கு 100 கோடி என்றால் மாதம் 500 கோடி ரூபாய் பணத்தை வாரிச் சுருட்டி வந்திருக்கின்றனர் தமிழர்களின் தலைவரின் குடும்பத்தார். அது மட்டுமல்லாமல் சினிமாத்துறை மூலமாக அடைந்த பலன் கொஞ்சமல்ல.

அம்மாவின் ஆகச் சிறந்த சாதனை இது என்று சொல்லி ஆக வேண்டியிருக்கிறது. தமிழர்களுக்காக உழைக்கின்றேன் பேர்வழி என்றுச் சொல்லி இத்தனை காலம் தமிழர்களின் தலைவர் குடும்பம்(த.த.கு) அடித்த கொள்ளையை தடுத்த பெருமை அம்மாவிற்கு சாரும். கொள்ளை அடி, அதை கொஞ்சமாக அடி என்கிறது ஜன நாயகம். ஆனால் த.த.குவினரோ கொள்ளைதான் எங்கள் குலத்தொழில், ஊழல் தான் எங்கள் கொள்கை என்று ஆடியிருப்பதற்கு இது ஒன்றே சான்று. மக்களுக்கு சென்று சேர வேண்டிய பணம், தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு மட்டும் சென்று கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என்று மனம் கூசாமல் பேசுவதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இனி அம்மா செய்ய வேண்டியது தமிழக மக்களிடமிருந்து திருடிய பணத்தை மீட்க வேண்டும். அதை கஜானாவில் சேர்க்க வேண்டும். இது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. திருடியே பழக்கப்பட்டவர்கள் ஜெகஜ்ஜால கில்லாடிகளாய் இருப்பார்கள். அவர்களிமிருந்து சொத்துக்களை எடுப்பதற்கு பெரிய போராட்டமே நடத்த வேண்டும். தமிழக மக்கள் அம்மாவிற்கு துணை இருப்பார்கள். இருக்க வேண்டும். இல்லையெனில் திருடப்பட்ட மக்களின் சொத்துக்களினால் சுக போகங்களில் திளைப்பார்கள்.

பொதுவாழ்க்கையில் தன் குடும்ப நலனே முக்கியம் என்று நினைத்து வாழ்ந்தவர்களின் கடைசிக் காலங்கள் என்ன் ஆனது என்பதை நாமெல்லாம் அறிவோம்.

தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும். மக்களுக்கு மறதி இருக்கும் வரை, தீயசக்திகள் மக்களை ஏமாற்ற முற்படும். திருட்டுக்கூட்டத்தாரின் வாய்ச்சாலங்களில் மயங்காமல் வெகு ஜாக்கிரதையாக தமிழ் நாடு இருக்க வேண்டியது அவசியம்.

– பஞ்சு


தோல்வி பயத்தில் திமுகவினர்

ஓகஸ்ட் 5, 2010

ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும் திமுக ஜெயிப்பதற்கு என்று சொல்கின்றார்கள்.

 • தொடர் மின் வெட்டு
 • தொழிற்சாலைகள் முடக்கம்
 • தொழிலாளிகள் வேலை இழப்பு
 • எண்ணெய், பருப்பு விலைகள் உயர்வு
 • மின் கட்டண உயர்வு
 • பெட்ரோல், டீசல் விலை உயர்வு
 • உலகமே காணாத 60,000 கோடி ஊழல்
 • அரசு கேபிள் டிவி முடக்கம்
 • குடும்பச் சண்டைகள்
 • செட் போட்டு செம்மொழி விழா நடத்தி அரை குறை வேலைகள்
 • பஸ் கட்டணங்கள் மறைமுக உயர்வு
 • ஓட்டுக்கு காசு கொடுத்து ஜன நாயகப் படுகொலை
 • கொலை, கொள்ளை அதிகரிப்பு

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். திமுக ஆண்ட இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்கள் தங்கள் பொருள்களை இழந்தது தான் மிச்சம் என்கின்றார்கள். ஏன் அதிமுக ஆண்ட போது எந்த ஊழலுமே நடக்க வில்லையா என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் தமிழக மக்கள் திமுக குடும்பத்தினரின் மீது வெறுப்பில் இருக்கின்றார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாகி விட்டது. அதற்கு கட்டியம் கூறுவது போல ஜெயலலிதாவிற்கு கூடிய கூட்டத்தைச் சொல்கின்றார்கள்.

இதுவரை தமிழக இளைஞர்களால் விரும்பப்பட்ட திரு ஸ்டாலின் தான் நடத்திய போராட்டத்தால் தானும் ஒரு நார்மலான அரசியல்வாதிதான் என்று அறிவித்திருக்கிறார். இளைஞர்கள் அவர் மீது எரிச்சலில் இருக்கின்றார்கள் என்றும் சொல்கின்றார்கள்.

ஜெயலலிதா வாய்தா வாங்குவது அவரது தனிப்பட்ட பிரச்சினை மற்றும் உரிமை. அதற்கு சட்டம் இடம் அளிக்கிறது என்கிற போது திமுகவினர் நடத்திய இந்தப் போராட்டம் சட்டத்திற்கு எதிரானது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் திமுக, மத்தியிலும் ஆட்சியில் பங்கு வகிக்கின்ற போது இந்தப் போராட்டம் தங்களின் ஆட்சியை தாங்களே எதிர்த்துக் கொள்வதாகும்.

சுருங்கச் சொல்லின் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குத் திமுக தள்ளப்பட்டிருக்கிறது என்று பெரும்பாலானோர் சொல்கின்றார்கள். அதற்கு இன்னொரு காரணமாய் ஜெயலலிதா கோவையில் கூட்டிய கூட்டத்திற்கு, போட்டிக் கூட்டம் நடத்தியதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.  இதற்கிடையில் ஆட்சியில் பங்கு என்ற நிலைக்கு திமுக ஒத்துக் கொண்டால் தான் கூட்டணி என்று காங்கிரஸ் சொல்கிறது என்று பேசிக் கொள்கின்றார்கள்.இளங்கோவனின் பேச்சும், கார்த்தி சிதம்பரத்தின் சமீபத்திய பேச்சும் மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றன. எது எப்படியோ விரைவில் ஒரு முடிவு ஏற்படத்தான் போகிறது.

– அரச்சான்.


காஞ்சி சங்கராச்சாரியார் கைது – கலைஞர்

ஓகஸ்ட் 4, 2010

காஞ்சிபுரம் கோயிலில் ஒரு கொடூரக் கொலை நடைபெற்று பல நாட்கள் ஆகியும் கொலைக்குத் தூண்டிய குற்றவாளியும், கொலை செய்த குற்றவாளிகளும் இன்னமும் “யாமறியோம் பராபரமே” என்ற பல்லவியைத்தான் பாடிக்கொண்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு அவர்களை போலீஸ் விட்டு வைக்கப் போகிறது – கலைஞர் (முரசொலி 10.11.2004)

சங்கராச்சாரியாரை டீல் செய்வது டூ மச் ஆக இருக்கிறது. பிரதமரும் இதைக் கூறியிருக்கிறார். அதே கருத்து தான் என் கருத்தும். சங்கராச்சாரியாரை கைது செய்து வழக்கு போடப்பட்டதை பாராட்டியிருக்கிறோம். ஆனால், இதற்குப் பின்னால் சில விஷயங்கள் இருக்கிறது என்று தெரிய வருகிறது. இதில் ஜெயலலிதாவின் பழி வாங்கும் பின்னணி இருக்கிறது – கலைஞர் (முரசொலி 23.11.2004)

கலைஞர் அன்று பேசியது பற்றி 3.1.2005 குமுதத்தில் 2004 இல் இப்படியெல்லாம் பேசினாங்க. 2005ல் எப்படியெல்லாம் பேசுவார்களோ என்ற தலைப்பில் வெளியான தொகுப்பு.

இன்று ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் திரு வைகோவின் கூற்று இது.

ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஜன நாயகம் தான். ஜெயலலிதாவை எதிர்ப்பதே முற்போக்குதான் – வைகோ

நாளைய பிரதமராக வர வாய்ப்பு இருக்கும் காணும் ராகுல் காந்தி சொன்னதாக வெளியாகியிருந்த கருத்து.

மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வேறு விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நான் மக்களின் எதிர்பார்ப்புகளின் படி நடந்தால் பைத்தியமாகி விடுவேன் – ராகுல் காந்தி.

லாலு பிரசாத் யாதவ் சொல்லிய ஒரு கருத்தை படியுங்கள். சுவாரசியமாய் இருக்கிறது.

இந்திய ரயில்வே, கடவுள் விஸ்வகர்மாவின் பொறுப்பில் இருக்கிறது. பயணிகள் பாதுகாப்பும் அவர் கையில் தான். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்தான்; நானில்லை – லாலு பிரசாத் யாதவ்

பின் ஏன் இவர் அமைச்சரானார். சம்பளம் வாங்கினார் என்று தெரியவில்லை.

அரசியல் கட்சிகளின் தலைவர்களின் லட்சணத்தைப் பாருங்கள்.

– அரச்சான்

நன்றி : 3.1.2005 குமுதம் இதழ்


அரசியல் நாகரீகம் – ஒரு பார்வை

ஜூலை 29, 2010

அரசியலில் நாகரீகம் என்பது மருந்துக்குக் கூட தமிழகத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஜெயலலிதாவை எப்படி எல்லாம் அழைப்பார் என்பது உலகிற்கே தெரிந்த ஒன்று. ஏனென்றால் இதே ஜெயலலிதாவிற்கும் இவ்ர் தான் ஐந்து வருடங்களுக்கு முதல்வர் என்பதையும் மறந்து விடுகிறார். ஒரு முதல்வரை எவ்வாறு அழைக்க வேண்டுமென்பது கூட தெரியாமல் மூச்சுக்கு மூச்சு பெயர் சொல்லி அழைத்து வருவது முன்னாள் முதல்வரின் அரசியல் நாகரீகம்.

படித்த, பண்பட்ட, அரசியல்வாதிகளில் மூத்தவருமான, மதிப்பிற்குரிய தலைவருமான முதல்வர் அவர்கள், அரசியல் நாகரீகத்தை கிஞ்சித்தும் கடைபிடிக்க வில்லை என்பதும் இதே நாகரீகத்தை முன்னாள் முதல்வரும் கடைபிடிப்பதைக் கண்டு நாம் எப்படிப் பட்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து வேதனை தான் ஏற்படுகிறது.

ஒரு தடவை திரு நேரு அவர்கள் தன் ஆட்சியைப் பற்றி தானே விமர்சித்து புனை பெயரில் கட்டுரை வெளியிட்டாராம். அந்தளவுக்கு மக்களின் மீதும், ஜன நாயகத்தின் மீது அபிமானமும், இந்தியாவின் வளர்ச்சியின் மீது அக்கறையும் கொண்ட தலைவர்கள் இருந்த இந்தியாவில், இப்போது இருக்கும் தலைவர்களின் யோக்கியதையை என்னவென்று சொல்வது.

கக்கன் என்ற உள்துறை அமைச்சரைப் பற்றி பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றினைப் படித்தேன். அரசுப் பதவியில் இருந்து இறங்கிய அடுத்த நாள், பஸ்ஸில் சென்றாராம் அவர். இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளில் எவராவது இத்தகைய தூய உள்ளத்தோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்களா என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?

தமிழக அரசியலைப் பொறுத்தவரை தலைவர்களைப் பார்த்து தான் பிறரும் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை ஆணித்தரமாய் சொல்லலாம். அதிமுக முன்னாள் அமைச்சர்களும், திமுக அமைச்சரும் பேசிய் பேச்சுக்களே அதற்கான ஆதாரங்கள்.

”தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசுன்னு சொல்ற ஜெயலலிதா இன்னும் மேஜராகலையா? அந்த அம்மாவை எப்படி கன்னித்தாய்னு கூப்பிடுறாங்க? குழந்தை கிழந்தை பெத்து இருந்தாதானே அதுக்கு குடும்பத்தோட அருமை தெரியும்…”

–  திரு மு.க. அழகிரி – திமுக மத்திய அமைச்சர்

”கருணாநிதி பிறந்த நாளுக்கு நைட்டு ரெண்டரை மணிக்கு கனிமொழி வாழ்த்து சொல்லுறார். அடுத்து கட்சியில புதுசா சேர்ந்த குஷ்பு வாழ்த்து சொல்லுறார். இதுல என்னாச்சு தெரியுமா… குஷ்பு வீட்டுல பிரச்னையாகிடுச்சு. (கண்ணடித்து ஜாடை காட்ட… அவர் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை!) அவங்க குடும்பத்துல மட்டுமில்ல… கருணாநிதியால பல குடும்பத் துலயும் பிரச்னைதான். அழகிரி ஒரு அமாவாசை. அவர் ஆட்டம் இன்னும் ஆறு மாசத்துக்குத்தான். அதுக்கு அப்புறம் அம்மா ஆட்சிதான்!”

– திரு ராம ராஜன் – அதிமுக

”டேய், போலீஸ்காரங்களா… என்னாங்கடா நினைச் சிட்டு இருக்கீங்க. நான் தேனியில் ரூம் போட்டு இருந்தேன். ஒரு போலீஸ்காரன் உள்ளே வந்து, ‘கூட்டத்துல நீங்க அப்படிப் பேசணும்… இப்படிப் பேசணும்… என்ன பேசப் போறீங்கன்னு எழுதிக் கொடுங்க…’னு எனக்கே கிளாஸ் எடுக்குறான். நான் என்ன உன்னைப் பெத்த அம்மாவையா தாக்கிப் பேசப் போறேன்? சரிதான் போடா… எங்க அம்மா பரம்பரை பணக்காரங்க. ஆனா அவங்க மதுரையில திருட்டு சி.டி., பழைய துணி வித்துட்டு திரிஞ்சாங்க. அவங்களுக்கு என்ன பாரம்பரியம் இருக்கு? அவங்களுக்கு எப்படி நாகரிகம் தெரியும்? தா.கிருஷ்ணனை கொலை செஞ்சவன் யாரு? தினகரன் பத்திரிகையை எரிச்சு ரவுடித்தனம் பண்ணினது யாரு? எங்க அம்மாவுக்கு 10 மொழி தெரியும். உனக்குத் தமிழும் ஒழுங்கா வராது. இங்கிலீஷ§ம் தெரியாது. உனக்கு எல்லாம் ஒரு மத்திய மந்திரி பதவி… அதான் மொழி தெரியாம பயந்துட்டு நாடாளுமன்றத்துக்குப் போகாம மாலத்தீவுல போயி படுத்துக்கிற…”

– முன்னாள் அமைச்சர் திருமதி வளர்மதி – அதிமுக

(இதே முன்னாள் அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினரைப் பற்றி அமைச்சரின் பேச்சு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஏதோ இந்தியாவில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகம், இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் சில நீதிபதிகளும், நேர்மை தவறாத காவல்துறை அதிகாரிகளும் இருக்கின்றார்கள் என்பதே சாட்சி. அவர்களையும் முன்னாள் அமைச்சர் ஏகத்துக்கும் பேசியிருப்பதை வைத்து, என்ன எழுதுவது என்றே புரியவில்லை)

”கருணாநிதி குடும்பத்து ரகசியம் எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். அதையும் சொல்லுறேன் கேளுங்க. (பல வார்த்தைகள் இங்கு பிரசுரிக்க முடியாதவை…) கருணாநிதி வீட்டுத் திண்ணையில் யார் யாரெல்லாம் படுத்துக் கிடந் தாங்கனு எனக்குத் தெரியும். ..”

– ராஜ்யசபா எம்பி திரு எஸ். எஸ். சந்திரன், அதிமுக

நன்றி : செய்தி வழங்கிய ஜூவி

: அரச்சான்


ஊர்க்குருவி பருந்தாகுமா?

ஜூலை 19, 2010

சோ ராமசாமியின் நடிப்பும், எழுத்தும் எழுத்தை வாசிக்கும் எவராலும் மறக்கமுடியாத ஒன்று. அவரின் துக்ளக் பத்திரிக்கைகளில் வெளிவரும் கேள்வி பதில்கள் படித்தே நான் என்னை வளர்த்துக் கொண்டேன் எனலாம்.  சொற்களால் அம்பு எய்தும் தன்மையும், கிச்சு கிச்சு மூட்டும் பாணியும் அவருக்கே உரித்தான வகையில் எழுதுவார்.

அவரின் சமீபத்திய பதிலும் கேள்வியும்.

கலைஞர் கருணா நிதியை போர் குற்றவாளி என்கிறாரே ஜெயலலிதா! சரியா? – நித்யா பாலாஜி, சென்னை 14.

சோவின் பதில் : தன்னைப் பற்றி தானே பேசிப் பேசி, கலைஞர் இப்போதெல்லாம் ரொம்ப ’போர்’ அடிக்கிறார். இந்த மாதிரி ’போர்’ அடிப்பதால், அவர் ஒரு போர் குற்றவாளி என்று ஜெயலலிதா நினைக்கிறார் போலிருக்கிறது.

சுஜாதாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனந்த விகடனில் எழுதும் போது அவருக்கு எழுதும் வாசகர்களின் கடிதங்களையும், கவிதைகளையும் அவருக்கே உரிந்தான மகிழ்ச்சி ததும்பும் வகையில் வெளியிட்டு மகிழ்வார். எழுதியவரின் எந்த வித பிரதிபலனும் பாராமல் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒன்று.

ஆனால் பாருங்கள் ஆனந்த விகடனில் என் கண்ணில் பட்டுத் தொலைத்தது ஒருத்தரின் தொடர். முன்பே அவரின் தொடர் பற்றி விமர்சித்து எழுதியிருந்தேன். இனிமேல் அதைப் பற்றி தொடரக்கூடாது என்ற சங்கல்பமும் எடுத்துக் கொண்டேன். ஆனால் பாருங்கள் அவர் தொடர்ந்து இன்னொரு வலையினை வாசகர்களை நோக்கி வீசுகிறார். அத்தொடரின் இறுதியில் ஒரு ஃப்ளாக்கரின் கவிதையை சுட்டிக்காட்டி என் மனம் கவர்ந்தது இது என்று எழுதுகிறார்.

சுஜாதா இறந்தாலும் இறந்தார், அதையொட்டிப் பலர் நானும் இன்னொரு சுஜாதா தான் என்று சொல்லிக் கொண்டு எழுத துவங்கி விடுகிறார்கள்.

ஊர்க்குருவி என்றைக்கும் பருந்தாகாது என்பது என்றைக்குத்தான் புரியப்போகின்றதோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜ நாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜ நாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.

– பஞ்சரு பலராமன்


%d bloggers like this: