மந்தாகினியும் மசரெட்டியும்

மே 23, 2017

மசுரு ரெட்டி என்று எழுத வேண்டியதை மசரெட்டி என்று எழுதி இருக்கிறார் என்று நினைக்காதீர்கள். சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கஸ்டம் பில்டு காரின் பெயர் தான் மசரெட்டி. சொகுசுக்கார். உள்ளே கொஞ்சம் கூட உறுமல் சத்தம் கூட கேட்காத, அதிராத கார். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து தரப்படுபவை இவைகள். உலகின் அதி பணக்காரர்கள் என்பதை விட பெண்களின் மீதும், உணவின் மீதும்,
வித்தியாசமான வாழ்க்கையின்மீதும் அதீத பற்றுக் கொண்ட ரசனையாளர்களின் தேர்வு தான் மசரெட்டி கார். உல்லாச உலகம் சாலையில் வலம் வருவது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு சிலர் தன் பிறந்த நாளைக் காரின் எண்ணாக வைப்பர். அதாவது எனது பிறந்த நாளான 4.7.1986ஐ 4786 என்று வைக்கலாம். தங்கள் வைத்திருக்கும் காரினைக் கூட தன் ஆளுமைக்குள் வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட ரசனையான மனிதர்கள் உலகில் அனேகம்.

பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. பிச்சைக்காரன் கூட சம்பாதிக்கிறான். ஆனால் வாழத் தெரிய வேண்டும். அதன் தாத்பரியம் தெரிய வேண்டும். நம்ம குஞ்சு இருக்கின்றானே, அவன் அப்படித்தான். ஹோட்டலில் வேலை செய்வான், திடீரென்று ஃபார்ச்சூனர் காணாமல் போய் இருக்கும். போன் செய்தால் கூட பேசமாட்டான். அவன் யார் கூடப் பேசிக் கொண்டிருப்பான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சமீபத்தில் தினமலர் வாரமலரில் அந்துமணி ஒரு காரின் முன்பு நிற்பது போன்ற புகைப்படத்தினைப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

நன்றி : வாரமலர், தினமலர், அந்துமணி

மேலே இருக்கும் கார் தான் மசரெட்டி கார். குட்டிப்பையன் சூப்பரா இருக்கான் பாருங்க. சினிமா ஹீரோவாக ஆகலாம்.

– அனாதி


கொக்கி

திசெம்பர் 20, 2015

பெண்ணியவாதிகள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் ‘மரப்பசு’ என்கிறார் சாரு.

மரப்பசு அம்மணி ஒரு விதமான கேரக்டர். சுய ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் செல்லும் என்பதைத்தான் ஜானகிராமன் எழுதி இருக்கிறார். ஆணோ பெண்ணோ அவர்களின் கடைசிக்காலத்தைப் பற்றி சிறிதும் நினைப்பதில்லை. இப்போது வாழ்கிறோம் என்பதை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

சாரு பெண்ணியவாதிகள் எல்லோரும் அம்மணி போல இருக்க வேண்டுமென நினைக்கின்றாரா என்பதை அவரின் முடிவுக்கே விட்டு விடலாம்.

இளையராஜாவிடம் கேள்வி கேட்டால் என்ன? பதில் சொல் இல்லையென்றால் வீட்டுக்கு வரச்சொல்லி பதில் சொல், ஏன் பொது வெளியில் அப்படித்திட்டுகின்றீர்கள் என்கிறார் சாரு.

ரகசியமாய் எழுதப்படும் மெயிலை பட்டவர்த்தனமாக வெளியிட்டு திட்டு திட்டு என்று திட்டும் சாருவிற்கு இளையராஜாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது என்பதை அவரிடமே விட்டு விடலாம்.

இளையராஜா இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் இசைக்க வேண்டுமென்று சொல்வதற்கு யாருக்குமிங்கே அருகதையே இல்லை. அவர் யாரிடம் எப்படி பேச வேண்டுமென்று பதிவுகள் எழுதியும் கமெண்டுகள் எழுதியும் வசைபாடுபவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று அவர்கள் தனக்குள்ளாகவே யோசித்துக் கொள்ள வேண்டும்.

அவர் இப்படிப் பேசிவிட்டார், இவர் இப்படிப்பேசி விட்டார் என்று கமெண்டுகள் எழுதுவதிலும், விமர்சதிப்பதிலும் என்ன பயன் கிடைத்து விடப்போகிறது என்று புரியவில்லை. செலவுதான் மிச்சம். நேரமிழப்புத்தான் ஏற்படும்.

இருக்கிற காலத்தில் மகிழ்ச்சியாய் இருந்து விட்டுப் போவதை விட்டு விட்டு ஏன் இந்த லொள்ளு.

– அனாதி


பீப் சாங்க் – சிம்பு அனிருத்

திசெம்பர் 12, 2015

எனது அபிமானத்துக்குரிய சாருவின் பிளாக்கில் சிம்புவுக்கும், அனிருத்துக்கும் கடுமையான எதிர்வினையை(ஹா…!) தெரிவித்திருக்கிறார்.

மிஸ்டர் சாருவிற்கு அந்த எதிர்வினையினால் டிவி விவாதம் வேறு கிடைத்திருக்கிறது. எப்படியானாலும் அறுவடை செய்வதில் சாருவிற்கு  நிகர் சாருதான் (இதற்குப் பெயர்தான் எதிர்வினை).

சாதாரண ஆண்மகனுக்கு 18 வயதில் ஆரம்பிக்கும் செக்ஸ் உணர்வு நாற்பது வயதில் ஒரு வித இயல்பு நிலைக்கு வந்து விடும். ஆனால் இரண்டு வயதிலேயே ஆரம்பித்தால் பதினெட்டாவது வயதில் நரம்புகள் எல்லாம் நிலைகுலைந்து ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விடும் அல்லவா? அப்போது என்ன செய்வார்கள்? எத்தனை பேரைக் காதலித்தால் தான் என்ன? கிளைமேக்ஸில் சொதப்பி விட்டால் காதலாவது கன்றாவியாவது? உடனடி பிரேக்கப் தான்.

வேறு வழியே இல்லை. எது ஆகாததோ அதைப் பற்றி கடுமையாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். பொட்டைக்கோழிகள் கிடைத்தும் வறுவல் செய்ய இயலாத காரணத்தால் தான் இப்படியெல்லாம் பீப் சாங்குகளைப் போட்டு வயித்தெரிச்சலை ஆற்றிக் கொள்கிறார்கள் என்பது உங்களின் அபிமான குஞ்சாமணியின் அபிப்பிராயம்.

எனது அபிப்பிராயம் சரிதானே ரசிகக் குஞ்சுகளே?

ஆகவே இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று அபிமான சாருவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் சாருவைப் பற்றி எழுதவில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சாருவின் “பாம்புக் கதைகளின்” ரசிகன்.

– குஞ்சாமணி


அராத்துவும் சாருவும்

ஜனவரி 4, 2014

அனாதி சாரு அராத்து என்ன விஷயம் ? – ஒரு வாசகர்

அராத்து சாருவைப் பயன்படுத்திக் கொள்கிறார். அல்லது சாரு அராத்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார். சாரு வாசக வட்டத்தினர் அராத்துவுக்காக வேலை செய்கின்றனர்.

இதை இரண்டைத் தவிர வேறொன்றும் புதிதாக இல்லை. 

அராத்துவின் புத்தகங்களுக்கான ஒரு விமர்சனம் :

நீங்கள் தொலைக்காட்சித் தொடரை ஒரு நாள் பார்த்திருந்து மீண்டும் மற்றொரு நாள் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அது மறு ஒளிபரப்பாகவே இருக்கும். – மர்பி விதி

புரிகிறதா?

– அனாதி


கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


ஸ்ரீலஸ்ரீ சாரு நிவேதிதா சுவாமிகள்

நவம்பர் 16, 2011

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்களே, அதேதான் சாரு செய்திருக்கிறார். ஏதோ எக்சைல் விற்பனைப் பற்றி பேசினோமா, எழுதினோமா என்று இல்லாமல் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவைப் போட்டார் சாரு. தமிழ் உலகில் வடிவேலு இல்லாத குறையை சாரு போக்கி வருவது கண்டு சீரியஸ் இலக்கியவாதிகள் “ரகசிய சிரிப்புகள் சிரித்து வருகின்றார்கள்”. அதான்யா நமுட்டுச் சிரிப்பு. இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் என்ன தான் படிக்கின்றீர்களோ தெரியவில்லை.

http://charuonline.com/blog/?p=2620

குமுதம் ஜோதிடம் மற்றும் இன்ன பிற ஆன்மீக பத்திரிக்கைகள் தான் எந்திரம், தந்திரம் எல்லாம் இலவசமாய் கொடுப்பார்கள். சாருவின் எந்திரம் எந்தளவுக்கு வேலை செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே நித்தியானந்தா ரேஞ்சுக்கு ஆடிப் பார்த்து, பாயிடம் வயாக்கரா மருந்தெல்லாம் வாங்கி பின்பு இருட்டில் என்னென்னவோ நடந்து இப்போது வேறு பப்ளிஷரைத் தேடி ஓட வேண்டிய பிரச்சினை வந்து விட்டது. ராயல்டி கொடுக்கவில்லை என்பதெல்லாம் சும்மா, ஏதாவது பொண்ணு பிரச்சினையாக இருக்கும் என்று பார்க் ஷெரட்டன் கோழி ஒன்று கூவியது. அந்தப் பொண்ணு “மேற்படி” சமாச்சாரத்தைத் தட்டி விட்டால் போட்டு விடுவோம் அனாதியில் பதிவாய்.

சாருவின் “எக்ஸைல்” நாவல் விற்க போட்டிருக்கும் திட்டமெல்லாம் ஓகே. சாருவின் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னது “ உலகத்தில் ஏமாளிகளுக்குப் பஞ்சமில்லை”.

ஏண்டா இப்படித் திட்டுகிறாய் அவரை, உனக்கு வம்பிழுக்கு ஆளே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் எல்லோரையும் வம்பிற்கு இழுப்பதை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிறான் குஞ்சு. அதுமட்டுமா, அவரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் திட்டலாம் என்று அனுமதி கொடுத்து விட்டதால், இனி அவரைத் திட்டிக் கொண்டே இருப்போம். எங்களுக்கும் தினமலர் அந்துமணிக்கு சாரு இருக்கிற மாதிரி ஒரு காமெடி பீஸ் வேண்டுமல்லவா?

– பஞ்சு


நந்தலாலா – சாரு நிவேதிதாவின் முகத்திரை கிழிகிறது

நவம்பர் 28, 2010

எந்த வித சமரசமும் இல்லாமல் எழுதுபவர் என்று தன்னைத் தானே சொரிந்து கொண்டு, எழுத்தாளர் என்று கூவிக் கொண்டிருக்கும் சாருவைப் பற்றி கீழே இருக்கும் பதிவரின் பதிவை படித்து விடுங்கள்.

சாருவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

கிகிஜூரோ படத்தினை ஆன்லைனில் பார்க்க விருப்பமா? இதோ கீழே கிளிக் செய்யவும்.

கிகிஜூரோ

– பஞ்சரு பலராமன்.


%d bloggers like this: