அனாதிக்கு மேகாவின் வேண்டுகோள்

ஜனவரி 4, 2017

அன்பு நண்பா அனாதி,

எப்போதாவது வந்து ஏதாவது எழுதி வைத்து விடுகிறாய். நமக்கு அரசியல் எல்லாம் செட்டாகாது அனாதி. அரசி இயல் தான் நமக்குச் செட்டாகும்.

சதா இப்போது விஜய் டிவியில் உதட்டைச் சுழித்துக் கொண்டு கிக்காட்டிக் கொண்டிருக்கிறாரே அதைப் பார்ப்பதை விடவா நமக்கு இந்த அரசியல் முக்கியம்?

உன் ரகசிய சினேகிதிகளின் கதைகளை அவிழ்த்து விடு நண்பா? தயவு செய்து இனி அரசியல் பதிவுகளை எழுதாதே. கிளுகிளுப்பாகவே இல்லை.

– மேகா, சென்னை


அம்பிகளின் சூழ்ச்சி வலையில்

திசெம்பர் 22, 2016

தலைப்பே காரணத்தைச் சொல்லும். விஷயம் அவ்வளவு தான்.

மேலும் மேலும் சின்னப்பிள்ளைகளுக்கு சொல்லுவது போல விவரிக்கமுடியாது. சூழ்ச்சிகளில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டாம் என்பதை விவரம் தெரிந்தவர்கள் உணர்வார்கள்.

எல்லாம் அம்பிகளின் வேலை. அவ்வளவு தான் மேட்டர்.

– குஞ்சு

 


ஆத்மா சாந்தியடையட்டும்

திசெம்பர் 8, 2016

முன்னாள் முதல்வரும் மனம் கவர்ந்த சிறந்த நடிப்புத் தேவதையும், மனிதாபிமானமிக்கவருமான ஜெ அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

அனாதிக்கும் குஞ்சுவுக்கும் ஒரு உரையாடல்:

”ஏம்பா அனாதி நாளிதழ்களில் ஒருவர் கூட ஆபிச்சுவரி விளம்பரம் கொடுக்கவில்லையே பார்த்தாயா?”

”ஆமாம் அதற்கென்ன?”

”என்னப்பா இப்படி பட்டென்று சொல்லி விட்டாய். அதற்குள்ளாவாகவா மறந்து விட்டார்கள்?”

“அரசியலில் அதிகாரத்துக்கு மட்டுமே மரியாதை குஞ்சு?”

– அனாதி மற்றும் குஞ்சு


பெரியமனிதர்களின் ரகசியக் கல்யாணங்கள்

மே 27, 2016

சென்னையில் குடி, குட்டி, சாப்பாடு இதைத்தவிர வேறு ஏதும் பொழுது போக்கும் அம்சங்கள் இல்லை. சினிமாவோ குண்டியாட்டிகளின் ஒரே மாதிரியான ஆட்டங்களையும், கிழட்டு ஹீரோக்கள் இளம் கதா நாயகிகளை புணர நடிப்பதையும் கண்டு வெறுத்துப் போய்விட்டது.

சென்னையின் மிக உயர்ந்த பாரில் நானும் அனாதியும் அமர்ந்திருந்தோம். அருகிலிருந்து ஒரு டேபிளில் கரை வேட்டிக் கூட்டமொன்று அமர்ந்திருந்தது. அவர்களின் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்குத் தலை சுற்றியது.

தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அண்ணன் புதியதாக ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாராம். அந்தப் பெண்ணுடன் இவர் ஒரு மாதம் குடும்பம் நடத்துவாராம். அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்று ஜோசியக்காரர்கள் சொல்லிய பிறகுதான் கல்யாணம் செய்து கொண்டாராம். இப்போது அவர் எம்.எல்.ஏவாம்.

இதுதான் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த செய்தி. உண்மையா பொய்யா என்பதெல்லாம் தெரியவில்லை.

அமைதிப்படையில் நாகராஜ சோழனின் கதை தான் இதுவோ என்று நினைத்தேன். நடக்காத சம்பவத்தையா திரைப்படத்தில் காட்டப்போகின்றார்கள் என்றான் அனாதி.

எனக்கு எரிச்சல் ஏற்பட்டதால் எழுந்து வந்து விட்டேன். பணமும், பதவியும், அதிகாரமும் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது என்பதை நினைக்கும் போது, மனிதன் அணுகுண்டை விட அதிபயங்கர மிருகம் என்றே நினைக்கத் தோன்றியது. பாவம் அந்த இளம் பெண். யார் பெற்ற பெண்ணோ? அந்தப் பெண்ணுக்கு என்னென்ன கனவுகள் இருந்தனவோ? அவளின் நிலையை நினைத்து என்னால் அந்த இரவு தூங்கக் கூட முடியவில்லை. மனது பாரம் தாங்காமல் கண்களில் கண்ணீர் துளிர்த்து நின்றது.

அந்தப் பெண் எதற்காக இந்த ஒரு முடிவிற்கு ஒப்புக் கொண்டாளோ தெரியவில்லை. அவளின் சூழல் எப்படி இருந்ததோ தெரியவில்லை. அவளுக்காக எனது கண்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.

– குஞ்சு


42 – ஜாக்கிரதை

மே 3, 2016

தமிழர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஒரு சில இருக்கின்றன.

தமிழர்களுக்கு தமிழ் மொழி போல இசை என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி தமிழ் சமூகங்களில் வாழ்பவர்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தைகளுக்கோ ஏதாவது தெரியுமா?

தமிழர்களின் இசை என்றால் அது தியாகராஜ பாடல்களில் இருந்து ”பு” என்று பாட்டுப் போடும் சுனிருத் போன்ற வேகாதா வேக்காடுகள் போடும் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.

தேவாரமும், திருவாசகமும் கர்நாடக இசைப்பாணியிலே தான் பாடப்படுகிறது. நாசமாப் போன சினிமாப் பாடல்களில் குஞ்சாமணி போன்ற எப்போதும் பு.சு நினைவிலிருப்போருக்கு வேண்டுமெனில் சுகமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்ன?

சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்து.

அது சரி! அடுத்த படம் 41க்கு வசூலைக் குவிக்க டிவிக்களில் ஆஹா ஓஹோ என்று பேட்டிகள் வலம் வர ஆரம்பித்து விட்டன. குசு விட்டதைக் கூட பேட்டியில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களிக்கு தங்களின் வரலாறு தெரிகிறதோ இல்லையோ சினிமாவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதனால் படம் பார்க்கும் தமிழர்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டால் பொழுது போக்கு என்கிறார்கள்.

தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை நிறுத்தினால் நடக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. டிவி பார்ப்பதை நிறுத்தினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

– குடிகாரன்


கனிமொழியைத் தூக்கிப்பிடிக்கும் தினமலர்

திசெம்பர் 22, 2015

சங்கமம் நிகழ்ச்சியினைப் பற்றி செய்தி வெளியிட்டதிலிருந்து கனிமொழியைப் பற்றியச் செய்திகள் தினமலரில் அடிக்கடி வெளிவருவதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

எனது நெருங்கிய ஜோசியக்காரர் கனிமொழியின் எதிர்காலம் ரொம்பப் பிரகாசமாய் இருக்குமென்று வேறு கையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

இந்தியாவையே அசைத்துப் பார்த்த 2ஜி ஊழலில் துவங்கி தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் ஒரு சில பத்திரிக்கை நண்பர்கள். எந்த ஒரு தலைவருக்கும் இத்தனை வெளிச்சம் நிச்சயம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவர்கள். ஆக இவர் உலகப் புகழ் பெறும் தலைவராகக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன என்கிறார்கள். அவர் பாட்டுக்கு கவிதை எழுதிக் கொண்டிருந்தார். விதி அவரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

தமிழகத்தின் அடுத்த அசைக்கமுடியாத அரசியல் சக்தியை உருவாக்க ஒரு குழு முனைந்திருக்கிறது. எல்லாம் வல்ல அந்த அவனுக்கே வெளிச்சம்.

அண்ணன் குமேஷுக்கே  வெளிச்சம் !

– பஞ்சர் பலராமன்


கொக்கி

திசெம்பர் 20, 2015

பெண்ணியவாதிகள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் ‘மரப்பசு’ என்கிறார் சாரு.

மரப்பசு அம்மணி ஒரு விதமான கேரக்டர். சுய ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் செல்லும் என்பதைத்தான் ஜானகிராமன் எழுதி இருக்கிறார். ஆணோ பெண்ணோ அவர்களின் கடைசிக்காலத்தைப் பற்றி சிறிதும் நினைப்பதில்லை. இப்போது வாழ்கிறோம் என்பதை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

சாரு பெண்ணியவாதிகள் எல்லோரும் அம்மணி போல இருக்க வேண்டுமென நினைக்கின்றாரா என்பதை அவரின் முடிவுக்கே விட்டு விடலாம்.

இளையராஜாவிடம் கேள்வி கேட்டால் என்ன? பதில் சொல் இல்லையென்றால் வீட்டுக்கு வரச்சொல்லி பதில் சொல், ஏன் பொது வெளியில் அப்படித்திட்டுகின்றீர்கள் என்கிறார் சாரு.

ரகசியமாய் எழுதப்படும் மெயிலை பட்டவர்த்தனமாக வெளியிட்டு திட்டு திட்டு என்று திட்டும் சாருவிற்கு இளையராஜாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது என்பதை அவரிடமே விட்டு விடலாம்.

இளையராஜா இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் இசைக்க வேண்டுமென்று சொல்வதற்கு யாருக்குமிங்கே அருகதையே இல்லை. அவர் யாரிடம் எப்படி பேச வேண்டுமென்று பதிவுகள் எழுதியும் கமெண்டுகள் எழுதியும் வசைபாடுபவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று அவர்கள் தனக்குள்ளாகவே யோசித்துக் கொள்ள வேண்டும்.

அவர் இப்படிப் பேசிவிட்டார், இவர் இப்படிப்பேசி விட்டார் என்று கமெண்டுகள் எழுதுவதிலும், விமர்சதிப்பதிலும் என்ன பயன் கிடைத்து விடப்போகிறது என்று புரியவில்லை. செலவுதான் மிச்சம். நேரமிழப்புத்தான் ஏற்படும்.

இருக்கிற காலத்தில் மகிழ்ச்சியாய் இருந்து விட்டுப் போவதை விட்டு விட்டு ஏன் இந்த லொள்ளு.

– அனாதி


%d bloggers like this: