அதிமுக பொதுச்செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

திசெம்பர் 30, 2016

முதன் முதலாக ஒரு பேரியக்கத்திற்கு தமிழ் பெண் ஒருவர் தலைமை ஏற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.  அதிமுகவினர் தங்கள் இயக்கம் ஒரு இரும்புக் கோட்டை என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அரசியல் செய்தவர்களுக்கும், அரசியலில் ஊறியவர்களுக்கு மட்டுமே அதிமுகவின் தற்போதைய உண்மை நிலமை புரியவரும். பூனை கையில் கிடைத்த பன் போல பிரித்து விடலாம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அம்பி பத்திரிக்கைகள் விடாது புரளிகளையும், புரட்டுகளையும் எழுதி எழுதி தள்ளிக் கொண்டிருந்தன. ஒரு தமிழச்சி தலைமைப் பொறுப்புக்கு வருவதா என்ற எரிச்சல் மட்டுமே காரணம்.

போயஸ் தோட்டத்திலே தன்னந்தனியாக இருந்த ஜெ-வைப் பாதுகாத்து அவருக்கு அரண் அமைத்து இது நாள் வரையிலும் கூடவே இருந்து பாதுகாத்து வந்தவரைப் பற்றி வாய் கூசாமல் பலரும் பல வார்த்தைகளில் விமர்சித்து எழுதுகின்றார்கள். எத்தனை முறை ஜெயிலில் கிடந்திருக்கிறார் அவர். எத்தனை முறை ஜெ-வால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்? காருக்காக காட்டிக் கொடுக்கும் வேலை செய்தவர்களைப் போல ஒரு நாளாவது வாய் திறந்திருப்பார்களா? எதிராக ஒரு வார்த்தைப் பேசியிருப்பார்களா? பதவி இல்லையென்றால் அடுத்த கட்சி தாவி ஓடும் பதர்களைப் போலவும், பதவி கிடைக்கவில்லை என்றால் ஏசும் அரசியல் பதர்களைப் போலவுமா அவர்கள் இருந்தார்கள். உறவினர்கள் சிறையிலடைக்கப்பட்டனரே அப்போதாவது ஜெ-வுக்கு எதிராக ஒரு வார்த்தைப் பேசினாரா?

முதன் முதலாக மன்னார்குடியில் அரசியல் கூட்டத்தைக்கூட்டி அம்மாவுக்கு அரசியலில் நுழைவு ஏற்படுத்திக் கொடுத்தபோது இப்போது வீராவேசம் பேசிக் கொண்டிருந்தவர்கள் எங்கே இருந்தார்கள் அப்போது?

இதோ அப்பாவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை அறிவித்தவர் எல்லாம் அரசியலுக்கு வரலாம். ஆனால் சின்னம்மா வரக்கூடாதாம். என்னே ஒரு சிந்தனை?

எங்கிருந்தோ வந்த மொழிக்கு பதவி கொடுத்ததும் ஒரு வார்த்தை பேசாத வாய்ச்சொல் வீரர்கள், திடீரென்று எம்பி பதவி பெற்று அமைச்சராகி பின்னர் தன் கட்சிக்கே வேட்டு வைத்து விட்டு மீண்டும் அரசியலுக்கு வந்து கூசாமல் மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கும் நிதிகள் எல்லாம் அரசியலில் பிழைக்கிற போது வார்த்தைகள் எல்லாம் எங்கே போயின?

ஆனால் இவர் வரக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

பத்திரிக்கைகள் அனைத்தும் உண்மையையே எழுதுகின்றன என்று எவரெல்லாம் நம்புகின்றார்களோ அவர்கள் தான் கைவலிக்க எழுதிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அனாதி தளத்தினைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். தேவையற்ற விஷயங்களை நாம் எழுதுவதில்லை என்பது.

அதிமுகவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

– அனாதி நண்பர்கள் குழாம்.

குறிப்பு : – அரசியல் = ஊழல், அயோக்கியத்தனம். இந்த கணக்கை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இது இரண்டும் இல்லையென்றால் அரசியலும் இல்லை. அரசாங்கமும் இல்லை.


%d bloggers like this: