விவேகம் – நுண்ணிய அரசியல்

ஓகஸ்ட் 26, 2017

ப்ளூ சட்டை போட்டவர் ஒருவர் யூடியூப்பில் விவேகம் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பதிவேற்றினார். அவருக்கு வரும் கமெண்ட்களும், அதைத் தொடர்ந்து வரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களும் கொடுமையானவை. அவர் அவற்றை தாண்டி வரட்டும்.

நீ யாருடா விமர்சனம் செய்ய? என்று கேட்கின்றார்கள். நல்லபடியாக விமர்சிப்பவர்களை நீ ஏன் விமர்சிக்கின்றாய் என்று எவரும் கேட்கவில்லை. நீ என்ன பிலிம் இன்ஸ்டியூட்டிலா படித்தாய் என்று ஒருவர் கேட்க, அஜித் ஹீரோவாவதற்கு எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார் என்று ஒரு குரல் கேள்வி கேட்கிறது. சினிமா ஹீரோவிற்காக எவரோ எதற்கோ அடித்துக் கொள்கிறார்கள். ஒரு படம் நன்றாக இல்லை என்றுச் சொன்னால் கூட கோபம் வருகிறது. ஏன் கோபம் வருகின்றது என்று கேட்டால் என் ஆதர்ச ஹீரோ என்கிறார்கள். அந்த ஹீரோவிற்கு சாப்பாடு போடுவது இவர்கள். கொடுமையாக இருக்கிறது.

ஸ்ருதி ஹாசனும், அக்சரா ஹாசனும் அஜித் படங்களில் நடிக்கின்றார்கள் என்பதன் அரசியலைத் தெரிந்து கொள்ளாதவரைக்கும் இவர்கள் இப்படித்தான் சண்டையிட்டு எவருக்காகவோ அடித்துக் கொண்டு அலறுவார்கள். இதன் நுண்ணிய அரசியலைப் புரிந்து கொள்ள முயலுங்கள். சினிமா என்றால் என்னவென்று தெரியவரும். ஜாக்கிரதையாகி விடலாம். புரிந்து கொள்வார்களா தமிழர்கள்????

– அனாதி


2,48,436 கோடி வங்கிக் கடனாளிகள்

ஓகஸ்ட் 9, 2017

பிசினஸ் டுடேயில் இந்த மாதம் வெளி வந்திருக்கும் அதிர்ச்சிக்கட்டுரையினைப் படித்தீர்கள் என்றால் மூளை சூடாகி விடும்.

ஒரே ஒரு டிராக்டர் வாங்கியர் ஒரு மாதம் கடன் கட்டவில்லை என்றவுடன் வங்கியாளர்கள் காவல்துறையை வைத்து மிரட்டி அடித்து சிறைக்குக் கொண்டு சென்றார்களே அந்த கட்ஸ் இரண்டு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து நானூற்று முப்பத்தாறு கோடி ரூபாய் கடன் செலுத்தாவர்களிடம் செல்லுபடியாகுமா?

ஏழையிடம் செல்லுபவர்கள் இந்த கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் செல்ல முடியுமா? அந்தளவுக்கு தைரியம் உண்டா?

இந்த வருடம் 12 கம்பெனிகளின் வாராக்கடன் 2,48,436 கோடி ரூபாய். இதற்காக வங்கிகள் முழு வீச்சாக கடன் வசூலிக்க அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அந்தப் பணம் அடுத்த ஆண்டுகளில் வாராக்கடன் லிஸ்டில் சேர்க்கப்பட்டு விடும் அல்லவா?

டெபிட் கார்டுக்கு வருடம் ஒரு தடவை பணம், எஸ்எம்எஸ்க்குப் பணம், செக் புத்தகத்திற்குப் பணம், ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கமிஷன் என்று மக்களிடம் வசூல் செய்கின்றன. வீட்டில் பணத்தை வைக்கக் கூடாது என்று அரசு சட்டம் போடுகிறது. இவர்களை என்ன செய்யப் போகின்றார்கள் என்று எவருக்கும் தெரியாது.விஜய் மல்லையா இந்தியாவிற்கு வந்து தண்டனை அனுபவிப்பதற்குள் ஆண்டர்சன் கதையாகி விடும் போல.

மற்றொமொறு மேட்டர். இந்த வருடம் மார்ச் வரை ஏழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் அக்கவுண்ட் மூலம் முடக்கப்பட்டிருக்கிறது என்கிறது பிசினஸ் டுடோ.

அதுமட்டுமல்ல 70 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் தனியாருக்கு கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த எந்தக் கம்பெனிகள் கடனை ஒழுங்காகக் கட்டப் போகின்றன? எந்தெந்தக் கம்பெனிகள் மூடப்படப்போகின்றன என்பது அவனுக்குத்தான் வெளிச்சம்.

இரண்டு இலட்ச ரூபாய்க்கு பேப்பரில் நியூஸ் போடும் வங்கிகள் இவர்களைப் பற்றி டிவியிலும், நியூஸ் பேப்பரிலும் செய்திகளை வெளியிட்டாலென்ன? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள். பிசினஸ் டுடே எத்தனை பேர் படிக்கப் போகின்றார்கள்?

அரசாங்கம் இப்படி மக்கள் பணத்தை வைத்து விளையாடும் இத்தகைய கம்பெனிகளின் போக்குகளை கவனித்து அலெர்ட் செய்யக்கூடாதா?

பாவம் இந்தியா? அதன் மக்கள்!!

– அனாதி

( நன்றி பிசினஸ் டுடே)


படம் சொல்லும் உண்மை – ஏமாளி இந்தியர்கள்

ஓகஸ்ட் 8, 2017

கடந்த மாதமே படித்து விட்டேன். தற்போதுதான் நேரம் கிடைத்தது அப்லோடு செய்ய. இந்தக் கடன்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்பது விஜய மல்லையா போன்று சம்பவங்கள் நடந்தால் தெரிய வரலாம். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது எவருக்கும் தெரியாது. முடங்கப் போகும் பணம் மக்களிடமிருந்து கிடைத்தவை என்பதை மட்டும் உண்மை.  இந்த இதழில் அனில் அம்பானியின் ஆர் காம் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. ஒரே திகில் தான். ஒரு வேளை சோறு கிடைக்காமல் சாகின்றார்கள் இந்தியர்கள். ஒரே ஒருவர் செய்யும் நஷ்டம் லட்சம் கோடிகளில்.  ஜனநாயகம் என்பது இதுதானோ??? – அனாதி

15021840916611502184171501

நன்றி : பிசினஸ் டுடே.


கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


உங்கள் குஞ்சுவின் ஸ்பெஷல் தீபஒளி வாழ்த்துக்கள்

நவம்பர் 1, 2013

Diwali-sexy-images

 

அன்பு நண்பர்களே !

அதிக வேலைப்பளுவினால் அனாதியும் நண்பர்களும் பிளாக் எழுத முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறோம்.

உங்களின் மனம் கவர் குஞ்சான அடியேனின்  தீபஒளி  நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தீபாவளிக்குள் ஆண்கள் அதாவது அனாதி பிளாக்கின் ரசிகர்களின் சீக்ரெட் லிஸ்ட்டில் மேலே படத்தில் இருக்கும் மேட்டர் போன்ற சிலபல பெயர்கள் ஏறட்டும் என வாழ்த்துகிறேன்.

– குஞ்சு


இரக்கமற்ற வங்கிகளும் அதன் கொள்ளைகளும்

திசெம்பர் 29, 2010

அன்பார்ந்த அனாதி வாசகர்களே,

இதோ ஒரு பதிவர் எழுதிய ஒரு கட்டுரையை படித்துப் பாருங்கள். மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல், தனி மனிதனின் பொருளாதாரத்தை மட்டுமே உயர்த்தக்கூடிய வங்கிகள் செய்யும் அக்கிரமச் செயல்களை உதாரணத்துடன் பட்டியலிட்டுள்ளார் இந்த வாசகர். உலகத்திற்கே அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த வங்கிகளை உலக நாடுகள் உடனடியாக மூட வேண்டும். மக்கள் பணத்தை திரும்ப ஒப்படைத்து, வங்கிகள் நடத்தும் இந்த வகையான பிசினஸ்ஸை இழுத்து மூட வேண்டும். செய்யுமா உலக நாடுகள் ????? மக்களா இல்லை தனி மனிதனா என்பதை உலக நாட்டுகளின் தலைவர்கள் முடிவு செய்யவேண்டும்.

http://tamilfuser.blogspot.com/2010/12/blog-post_27.html

– பஞ்சரு பலராமன்


தொட்டுக்கொள்ள – 1

ஒக்ரோபர் 22, 2010

அரசியல் தொடர்புகள் உடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொல்லிய சில சம்பவங்கள் ஆச்சரியமாய் இருந்தது.

பதிமூன்று வயதிலேயே மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் துவக்கியவர் கலைஞர் என்றார். ஒவ்வொரு அப்பாக்களும் தன் மகன் கலெக்டராக ஆக வேண்டும், எஞ்சினியராக வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் திரு முத்துவேலர் அவர்கள் தன் மகனை எப்படி வளர்த்திருக்கிறார் பாருங்கள் என்றுச் சொன்னார்.  ஆக முத்துவேலர் அவர்கள் வெகு தெளிவாக திட்டமிட்டு கலைஞரைத் தலைவராக வர,வளர்த்திருக்கிறார் என்றும் சொன்னார். ஆச்சரியம்தான்.

தமிழக காவல்துறையில் போஸ்டிங் பிரச்சினை இப்போது உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று விட்டது. ஆட்சிக்கு வேண்டியவர், விரும்புவர், விரும்பாதவர் என்று ஆரம்பித்தால் சீனியாரிட்டி என்ற விதி இல்லாமல் போய் விடும். இது அதிகாரிகள் மட்டத்திடையே மன உளைச்சலைக் கொடுத்து விடும். ஆட்சியாளர்கள் இது பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டும். பாகுபாடு தேவையில்லை.

படிக்காதவர்களால் ஆக்சிடெண்டுகள் ஏற்படுகின்ற என்றுச் சொல்லி, எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் தான் டிரைவிங் லைசென்ஸ் என்ற சட்ட திருத்தம் தேவையற்றது. படித்தவர் மட்டும் தான் டிரைவராக வேண்டுமென்றால் இதே போல டிகிரி படித்தவர் மட்டுமே அரசியல்வாதியாக வர வேண்டுமென்று சட்டம் கொண்டு வரலாம். சாதாரண கார் ஓட்டுவதற்கே படிப்புத் தகுதி வேண்டுமென்றால், ஆட்சி செய்ய நல்ல படிப்பு அல்லவா வேண்டும். யாராவது பொது நல வழக்கு வாதிகள் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தட்டி விடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.  படித்தவர்கள் செய்யும் ஆக்சிடெண்டுகள் தான் அதிகம். அதிலும் குடிபோதையில் மிக அதிக ஆக்சிடெண்டுகள் நடக்கின்றன. இது ஒரு துக்ளக் சட்டம்.

அறக்கட்டளை என்பது மக்களுக்கு சேவை செய்ய துவக்குவது. பொது மக்கள் சேவைக்கென்று துவக்கப்பட்டு, அதன் கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அது எப்படி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றே தெரியவில்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுச் சொல்லி இருக்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக தகவல் உரிமைச் சட்டம் திகழ ஆரம்பிக்கிறது.  ஜன நாயகத்தின் குரல்வளையை அதிகாரம் நெறிக்கின்றது போலும்.

காமன் வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழலை பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கிறார்கள். பத்திரிக்கைகள் சொல்லவில்லை என்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். சாதாரண ஊழலுக்கே கைது நடவடிக்கைகள் பாயும். கோடிக் கணக்கில் ஊழல் செய்தவர்களை ஒப்புக்கேனும் கைது செய்யவில்லை.  இன்னும் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்த பணம் வேறு அவர்கள் கையில் இருக்கிறது. சாட்சிகளைக் கலைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். மேற்படிச் சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்த ஊழல் பிரச்சினை ஊற்றி மூடப்படும் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் மைல்கல் இது என்றே தோன்றுகிறது.

– பஞ்சரு பலராமன்


%d bloggers like this: