விவேகம் விமர்சனம்

ஓகஸ்ட் 28, 2017

அஜித்தை அக்கிரமமாகச் சுடுகின்றார்கள். வெகு சரியாக மலையிலிருந்து கீழே விழுகிறார். மிகச் சரியாக ஒரு மரத்தினைப் பிடித்துக் கொள்கிறார். அப்போது போன் வருகிறது. அஜித்தின் மனைவி காஜல் போனில் துப்பாக்கி சத்தத்தையும், அஜித்தின் சத்தத்தையும் கேட்கிறார். அழுகை வர அஜித்திடம், நீங்கள் திரும்பவும் வருகிறேன் என்றுச் சொல்லுங்கள் என்று கேட்க அஜித் என்ன சொல்வார் என்று படம் பார்க்கும் ஒருவனுக்கும் தெரியாது என்று நினைத்துப் படம் எடுத்து இருக்கும் இயக்குனரின் திறமையைப் பார்த்து வியந்து விட்டேன்.

கிளைமேக்ஸில் காஜல் அகர்வால் பேசும் வசனத்தைக் கேட்டு சொரி சொரின்னு சொரிந்து கொண்டேன். சாமி படத்தில் ஆயா பாடியது மாதிரி காஜல் வேறு பாட அஜித்துக்கு வெறி ஏறி விவேக் ஓபராயைப் பிளந்து கட்டுகிறார்.

இதில கொடுமை என்னான்னா  ஹீராதான் ஜெயிப்பாரு என்றும் தெரிந்தும் முழு படத்தையும் பார்த்து விட்டு வருகிறேன்.

நாமெல்லாம் அந்தளவுக்கா மொக்கையாக இருக்கிறோம் என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். நாமெல்லாம் மொக்கையை விட மொக்கை என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்ப்பவரை மொக்கையாக்கிய இயக்குனரின் திறமைக்கும், அஜித் குமாரின் நடிப்புக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்க வேண்டும்.

அவர்கள் உழைத்திருக்கிறார்கள். கடுமையாக அதுவும் இரண்டு வருடங்கள். ஆகவே ஆளாளுக்கு தியேட்டருக்குப் போய் படம் பார்த்து விட்டு வாருங்கள். அதுதான் அஜித் குமார் ரசிகனாக இருக்க தகுதி. பெரிய நடிகர்களின் படம் என்றால் பொச்ச மூடிக்கிட்டு படம் பார்த்துட்டு வர வேண்டும். மொக்கையாகிக் கொண்டே இருந்தால் தான் சுகம். அதுதான் ரசிப்பு. மொக்கையாக மாறி முட்டாளாக மாறி நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொண்டு போய் தியேட்டரில் கொடுத்து விட்டு வந்தால் தான் உண்மையான ரசிகன்.

தமிழகத்தில் ரசிகர்கள் அப்படித்தான் இருப்பார்கள். எவனாவது அது சரியில்லை இது சரியில்லை என்று பேசிக் கொண்டு திரியாதீர்கள். ஊரே அம்மணமா திரியும் போது நீங்க மட்டும் ஏன் உடை உடுத்துகின்றீர்கள்? பெரும்பான்மைக்கு மட்டும் தான் இங்கு மரியாதை. சிறுபான்மையினருக்கு மரியாதை இல்லை என்பதைப் புரிந்து கொள்க.

மற்றபடி அஜித்குமாரின் விவேகம் திரைப்படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்றுச் சொல்லத்தான் வேண்டும். கடைசி வரை தியேட்டரில் உட்கார்ந்திருந்தேன் அல்லவா?

– பஞ்சரு பலராமன்

போதையில் உளாறுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் எப்போதுமே ஸ்டெடியாகத்தான் இருப்பேன்.


விவேகம் – நுண்ணிய அரசியல்

ஓகஸ்ட் 26, 2017

ப்ளூ சட்டை போட்டவர் ஒருவர் யூடியூப்பில் விவேகம் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பதிவேற்றினார். அவருக்கு வரும் கமெண்ட்களும், அதைத் தொடர்ந்து வரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களும் கொடுமையானவை. அவர் அவற்றை தாண்டி வரட்டும்.

நீ யாருடா விமர்சனம் செய்ய? என்று கேட்கின்றார்கள். நல்லபடியாக விமர்சிப்பவர்களை நீ ஏன் விமர்சிக்கின்றாய் என்று எவரும் கேட்கவில்லை. நீ என்ன பிலிம் இன்ஸ்டியூட்டிலா படித்தாய் என்று ஒருவர் கேட்க, அஜித் ஹீரோவாவதற்கு எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார் என்று ஒரு குரல் கேள்வி கேட்கிறது. சினிமா ஹீரோவிற்காக எவரோ எதற்கோ அடித்துக் கொள்கிறார்கள். ஒரு படம் நன்றாக இல்லை என்றுச் சொன்னால் கூட கோபம் வருகிறது. ஏன் கோபம் வருகின்றது என்று கேட்டால் என் ஆதர்ச ஹீரோ என்கிறார்கள். அந்த ஹீரோவிற்கு சாப்பாடு போடுவது இவர்கள். கொடுமையாக இருக்கிறது.

ஸ்ருதி ஹாசனும், அக்சரா ஹாசனும் அஜித் படங்களில் நடிக்கின்றார்கள் என்பதன் அரசியலைத் தெரிந்து கொள்ளாதவரைக்கும் இவர்கள் இப்படித்தான் சண்டையிட்டு எவருக்காகவோ அடித்துக் கொண்டு அலறுவார்கள். இதன் நுண்ணிய அரசியலைப் புரிந்து கொள்ள முயலுங்கள். சினிமா என்றால் என்னவென்று தெரியவரும். ஜாக்கிரதையாகி விடலாம். புரிந்து கொள்வார்களா தமிழர்கள்????

– அனாதி


ஏமாளித்தமிழர்கள் – பிக்பாஸின் சோதனை

ஓகஸ்ட் 4, 2017

இன்றைக்கு திடீரென விகடனைத் திறந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நிலை பற்றிய கட்டுரையை எழுதி இருந்தது. விகடன் ஏன் வேலி ஓணாணை எடுத்து ஜட்டிக்குள் போட்டுக் கொள்கிறது என்றொரு கேள்வி எழுந்தது.

மீடியாக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று கண்ணுக்குத் தெரியாத இணைப்பை தங்களுக்குள் வைத்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். விகடனுக்கும் விஜய் டிவிக்கு ஒரு ரகசிய பிணைப்பு இருக்கிறது போலும். விஜய் டிவியின் முதலாளி அமெரிக்கா, விகடனுக்கு அம்பி முதலாளி. விஜய் டிவியில் தோன்றுவது அம்பி. மீறன் பிரதர்ஸால் கொண்டு வரப்பட்ட சட்டம் மட்டும் இல்லையென்றால் விஜய் டிவியின் செய்தி சானல் தமிழகத்தைக் கபளீகரம் செய்திருக்கும். அது நடக்கவில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிச்சு இருக்கிறது.

தமிழக வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால் அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா போன்றவர்கள் சினிமா மூலம் கிடைத்த புகழை வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்தவர்கள். சினிமா தமிழக மக்களின் மீது இதுவரௌ உருவாக்கிய தாக்கம் அத்தகையது. ஆனால் விஜயகாந்தால் அந்தளவுக்கு மக்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. தமிழகமக்கள் சினிமாக்காரனுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரியவருகிறது.

சமீபகாலமாக ரஜினி,கமல், விஜய், அஜித் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வுகின்றன. பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று நினைத்துப் படம் எடுத்தவர்கள் கோடிகளில் இழந்திருக்கின்றார்கள். கமலை வைத்துப் படம் எடுத்தால் என்ன ஆகும் என்று அவரின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். சினிமாவின் தாக்கம் தமிழக மக்களிடம் குறைந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

இந்தச் சூழலில் பத்தாண்டுகளாக இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் திடீரென்று தமிழகத்தில் ஒளிபரப்ப என்ன காரணம் என்று யாராவது சிந்தித்தீர்களா?

எவிக்சன் போது பரணிக்கு ஒரு கோடிக்கும் மேல் ஓட்டுக் கிடைத்திருக்கிறது என்பதும் ஓவியாவிற்கு கோடிக்கும் மேல் ஓட்டுக் கிடைக்கிறது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. தமிழக பெரும் கட்சிகள் பெறுவதும் ஒரு கோடி ஓட்டுதான். பிக்பாஸில் உலகெங்கிலிருந்தும் ஓட்டுப் போடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் தமிழக மக்களிடையே பரணிக்கும், ஓவியாவிற்கும் கிடைக்கும் ஆதரவு கவனிக்க வேண்டியதாகும். கமலின் சமீபத்திய அரசியல் பேட்டிகள் பல கதைகளை என் முன்னால் விரிக்கின்றன.

இனி தமிழ் சினிமாவினால் சாதிக்க முடியாது என்பதை சினிமாக்காரர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்தாலும் சிறிய கூட்டமொன்று தான் கைதட்டும் என்றும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இனி சினிமாவால் பிரயோஜனம் இல்லை என்றும் புரிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா ஆசை உள்ளவர் எவரானாலும் அழகான சினிமாவை எடுக்கும் அளவுக்கு டிவிக்கள் பாடம் நடத்தி இருக்கின்றன. டெக்னாலஜியும் வளர்ந்திருக்கின்றன. ஹீரோயிசம் இனி எடுபடாது என்பது சுய நலச் சிந்தனைவாதிகளான சினிமாக்காரர்களுக்குப் புரிந்திருக்கின்றது.

அதனால் தான் தமிழக மக்களை மூளைச் சலவை செய்ய டிவிக்கள் சரியானவதானா என்றொரு தேர்வினை நடத்துகின்றார்கள். அந்தத் தேர்வின் மூலம் அடுத்து அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகளை அவர்கள் உருவாக்குவார்கள். பிக்பாஸ் அதற்கான ஒரு களம்.

மக்கள் தான் இவர்களிடமிருந்து வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மணி ரத்னம் படங்கள் தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்களாகவே இருக்கின்றன. பாலச்சந்தரின் படங்கள் மட்டும் விதி விலக்கல்ல. விஜய் டிவியின் தொடர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவையாக இருந்து வருகின்றன.

விஜய் டிவியை வைத்து நன்றாகக் கொழுத்த சம்பாத்தியத்தைச் செய்பவர் ஆர்ஜே செந்தில் மட்டுமே. மதுரையில் மீனாட்சியைக் காதலித்துக் கரம் பிடித்தார். சரவணன் மீனாட்சியில் மீனாட்சியைக் காதலித்து திருமணம் செய்தார். மாப்பிள்ளையில் மீனாட்சியைக் காதலித்து சற்றே குடும்பம் நடத்துகிறார். இனி பேரப்பிள்ளைகள் பற்றிய தொடரும் வரும். ஒரே பெண், ஒரே ஆண். கரு – காதல். சலிக்காமல் எப்படித்தான் பார்க்கின்றார்களோ தெரியவில்லை.

கொழுத்த குட்டி யானை சைசுக்கு இருப்போருக்கு திருமணம் என்கிறார்களே அதையெல்லாம் சகித்துக் கொள்கிறார்களா தமிழக மக்கள். அதாவது பரவாயில்லை, குட்டியானைக்குட்டிக்குக் குட்டிப்பாவாடை போட்டு விடுகின்றார்களே அது என்ன தான் ரசனையோ தெரியவில்லை.

இந்தளவுக்கு கேனத்தனமான இளிச்சவாய் மக்கள் தமிழ் நாட்டைத் தவிர வேறெங்கும் இருக்க மாட்டார்கள். வீட்டுக்குள் இருக்கும் சைத்தானிடம் வெகு ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையென்றால் மீண்டும் ஏதோ ஒரு அம்பியிடம் தமிழகம் அடிமையாகக் கிடக்கக் கூடிய சூழல் உருவாகி விடும். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்.

– குடிகாரன்

குறிப்பு : தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுகொள்கிறார்கள் பிக் பாஸின் நடிகர்கள். முதன்மைப் பாதிப்பு ஜூலிக்கு மட்டுமே! தெருவில் இறங்கி நடக்க முடியுமா அந்தப் பெண்ணால் என்பது தெரியவில்லை. என்ன ஆகுமோ?


மந்தாகினியும் மசரெட்டியும்

மே 23, 2017

மசுரு ரெட்டி என்று எழுத வேண்டியதை மசரெட்டி என்று எழுதி இருக்கிறார் என்று நினைக்காதீர்கள். சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கஸ்டம் பில்டு காரின் பெயர் தான் மசரெட்டி. சொகுசுக்கார். உள்ளே கொஞ்சம் கூட உறுமல் சத்தம் கூட கேட்காத, அதிராத கார். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து தரப்படுபவை இவைகள். உலகின் அதி பணக்காரர்கள் என்பதை விட பெண்களின் மீதும், உணவின் மீதும்,
வித்தியாசமான வாழ்க்கையின்மீதும் அதீத பற்றுக் கொண்ட ரசனையாளர்களின் தேர்வு தான் மசரெட்டி கார். உல்லாச உலகம் சாலையில் வலம் வருவது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு சிலர் தன் பிறந்த நாளைக் காரின் எண்ணாக வைப்பர். அதாவது எனது பிறந்த நாளான 4.7.1986ஐ 4786 என்று வைக்கலாம். தங்கள் வைத்திருக்கும் காரினைக் கூட தன் ஆளுமைக்குள் வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட ரசனையான மனிதர்கள் உலகில் அனேகம்.

பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. பிச்சைக்காரன் கூட சம்பாதிக்கிறான். ஆனால் வாழத் தெரிய வேண்டும். அதன் தாத்பரியம் தெரிய வேண்டும். நம்ம குஞ்சு இருக்கின்றானே, அவன் அப்படித்தான். ஹோட்டலில் வேலை செய்வான், திடீரென்று ஃபார்ச்சூனர் காணாமல் போய் இருக்கும். போன் செய்தால் கூட பேசமாட்டான். அவன் யார் கூடப் பேசிக் கொண்டிருப்பான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சமீபத்தில் தினமலர் வாரமலரில் அந்துமணி ஒரு காரின் முன்பு நிற்பது போன்ற புகைப்படத்தினைப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

நன்றி : வாரமலர், தினமலர், அந்துமணி

மேலே இருக்கும் கார் தான் மசரெட்டி கார். குட்டிப்பையன் சூப்பரா இருக்கான் பாருங்க. சினிமா ஹீரோவாக ஆகலாம்.

– அனாதி


காஸ்ட்லின்னா காஸ்ட்லி இது தான் காஸ்ட்லி

நவம்பர் 17, 2016

இரும்புத்தாது ஜனார்த்தன ரெட்டியாரின் திருமண வைபோகத்தின் புகைப்படங்கள் நெட்டில் உலாவிக் கொண்டிருக்கின்றன. எல்லோருக்கும் பிரமிப்பு தீரவில்லை. ஆனால் எனக்குத்தான் சரியான தூக்கம் வரவில்லை.

திருமணம் நடத்துவதற்கே 500 கோடி செலவு செய்தவர்களுக்கு அதுக்கு என்னென்ன ஸ்பெஷல் அயிட்டங்கள் வாங்கி இருப்பார்கள்? அதற்கு எத்தனை கோடி செலவு செய்திருப்பார்கள்? என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

அதுக்குன்னா என்னான்னு கேட்கிறவர்கள் இங்கேயிருந்து ஓடிப்போயிடுங்க.

கட்டில் என்ன விலைக்கு வாங்கி இருப்பாங்க?

கட்டில்ல போடுற ச்சீ பூவை என்ன விலைக்கு வாங்கி இருப்பாங்க? பூ எந்த நாட்டிலிருந்து வந்திருக்கும்? இப்படி இன்ன பிற செலவுகளையும், அதற்கு என்று ஏதாவது ஸ்பெஷல் சமாச்சாரம் இருக்குமா? என்றும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். தெரிந்த அம்மணிகள் தனியாக மெயில் அனுப்பவும். தெரியாதவர்கள் என்னைப் போல குழம்பிக் கொள்ளவும். கர்நாடகா பெண்மணிகள் கொஞ்சம் விசாரித்து மெயில் அனுப்பினால் புண்ணியமாகப் போகும். செய்வார்களா?

இப்படிக்கு,

உங்களை எப்போதும் மகிழ்விலே வைத்திருக்கும்

உங்கள் குஞ்சு


தமிழ் சினிமாவின் சூப்பர் ஜோடி

செப்ரெம்பர் 25, 2016

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஜோடிக்குப் பிறகு ஒரு ஜோடிதான் பார்க்கையில் அழகு. அப்படி ஒரு அழகு. அன்னியோன்யமாகத் தெரியும்.

தனுஷ், அமலா பால் ஜோடி – சூப்பர் ஜோடி. உயரமும், அழகும் தனுஷ்ஷுக்கும் அமலாபாலுக்கு ஆஹா ஆஹா. பார்க்கையில் உண்மையான காதலர்கள் போலத் தெரிவார்கள். அமலாபாலின் முகம் இருக்கிறதே அது கோடிக்கணக்கான கதைகளைப் படித்திடும் முகம். முகமா அது. கலைகள் கொட்டிக் கிடக்கும் அற்புதச் சுரங்கம். அமலாபாலின் கண்கள் இரக்கமும் கருணையும் கொண்டவை. அமலாபால் உண்மையில் பிரபஞ்ச அழகி.

தனுஷ் ஒரு நல்ல சிற்பி. சிற்பியும் அவன் படைத்த அழகியும் இணைந்திருப்பதுதான் பார்க்க அழகாய் இருக்கும். படத்தில் சொல்கிறேன். அள்ளும் அழகி அமலாபால். அருகில் தனுஷ். ஆஹா! ஆஹா!!!!!

இதோ அவர்களின் படங்கள். பார்த்து ரசியுங்கள்.

Dhanush, Amala Paul in VIP Telugu Movie Stills

amala-paul-dhanush_141821427890

அசத்தலாக இருக்கின்றார்கள் இல்லையா?

– குடியுடன் கும்மாளத்துடன் குடிகாரன்


தொடரி – குடிகாரனின் விமர்சனம்

செப்ரெம்பர் 23, 2016

சமையலறையில் வேலை செய்யும் தனுஷ் அந்த இரயில் வரும் நடிகையின் டச்சப் கேள் (கிழவின்னு சொன்னா சரியாக இருக்கும்) மீது காதல் கொள்கிறார். அதே ட்ரெயினில் மத்திய சாண எரிவாயு துறை அமைச்சரும் வருகிறார். அவரின் பாதுகாவலர் ஒருவரும் வருகிறார். அவருக்கும் தனுஷுக்கும் சண்டை நடக்கிறது.

அந்தப் பாதுகாவலர் படு டென்சன் பார்ட்டி. பாகிஸ்தானை விட்டு விட்டு கேரளாக்காரர்களை வம்பிழுக்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர். அது சரி ரஜினியின் மருமகனுக்கு பக்கத்து மாநிலமே போதும் என பிரபு நினைத்திருப்பார் போல. இல்லையென்றால் இன்னொரு கிக்களே என்று மைக் பிடித்து ஆரம்பித்து விட்டால். தாங்குமா தமிழ்நாடு?

இதற்கிடையில் பிழைக்க முடியாத இடத்திலிருந்து இந்தியாவெங்கும் பிழைக்கச் செல்லும் பீகாரிகளை வம்புக்கு இழுத்திருக்கிறார் இயக்குனர். ஆறு பேர் ட்ரெயின் பெட்டியில் புகுந்து கொள்ளை அடிக்கின்றார்கள்

சாண மினிஸ்டரால் எரிச்சலாகும் பாதுகாப்பு அதிகாரி தனுஷ்யையும் டச்சப்பையும் கொல்ல முயற்சிக்கிறார். தனுஷை பெட்டியில் அடைத்து வைத்து விட்டு டச்சப்பை துரத்த அது ட்ரெயின் எஞ்சின் அருகில் இருக்கும் பாதையில் உட்கார்ந்து கொள்கிறது.

அடுத்து இஞ்சின் ட்ரைவருக்கும் அசிஸ்டெண்டுக்கும் சண்டை வர இஞ்சின் டிரைவர் ரிட்டயர்ட் ஆகும் வயதில் ஹார்ட் அட்டாக்கோ என்ன எழவோ வந்து செத்துப் போய் ட்ரெயின் கண்ட்ரோல் மீது விழ இஞ்சின் படுவேகத்தில் செல்ல ஆரம்பிக்கிறது.

ட்ரெயின் படுவேகத்தில் செல்கிறது. அதை நிறுத்தி அனைவரையும் காப்பாற்றி டச்சப்பின் உதட்டில் ஒரு உம்மா கொடுத்து பேட்டி கொடுக்கிறார் தனுஷ். அவர் பாட்டுப் பாடும் போது இடுப்புக்குள் பெரிய மூட்டையாகத் தெரிகிறது. அது என்னான்னு தான் எனக்கு விளங்க மாட்டேங்குது. குஞ்சுக்கிட்டே கேட்டா சொல்வான்.

எஞ்சின் ரயிலுக்கு அடுத்தப் பெட்டி தீயில் எரிகிறது. அங்கு டூயட் வைத்திருக்கும் பிரபுசாலமனின் இயக்கம் புல்லரிக்கின்றது.

டிவி விவாத நிகழ்ச்சிகளை கிண்டலடிப்பது போல இயக்குனர் காட்சிகளை வைத்து இடுப்பில் சொரிந்து விட்டிருக்கிறார். மீடியா இல்லைன்னா பிரபுசாலமன் பிழைப்பு நடக்குமா என்பதெல்லாம் அவரிடம் விட்டு விடலாம். சினிமா டிவியை கிண்டலடிக்கிறது. என்ன ஒரு இயக்கம்? பிரபு சார் அடுத்த விஜய் டிவி விருது உங்களுக்கு இல்லை.

தம்பி ராமையா சிரிப்பூட்டுகின்றாராம். அவரே சிரிப்பாரா என்று அவருக்கே வெளிச்சம்.

படம் பார்க்கின்றவர்களை கேபின்னு நினைக்கிற இயக்குனர்கள் இருக்கும் வரை, கேப்பின்னா கேன்னாப்பூன்னான்னு நினைக்காதீங்க. கலா ரசிகப் பெருமக்கள் என்று நினைக்க வேண்டும் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

கலா ரசிகப் … சாரி சாரி பெருமக்களுக்கு இது ஒரு நல்ல வீ…………………….ருந்து.

– குடிகாரன்

சாரிப்பா ஏதோ உளறிட்டேன். சீக்கிரமா டாஸ்மாக்குகளை மூடிடுங்க. இல்லைன்னா போதையில இப்படித்தான் எழுத வேண்டி வரும்? அடுத்த எலக்சனுக்குள் மூடி விடுவாங்களா? இல்லை அடுத்த எலக்சனில் இதுவும் ஒரு கொள்கையா?


%d bloggers like this: