சப்பிப்போட்ட மாங்கொட்டை

நவம்பர் 8, 2017

குஞ்சுமணியும், குடிகாரனும் ஒரே நச்சரிப்பு. ’ஏண்டா தொல்லை பண்றீங்கன்னு’ சலிச்சுக்கிட்டாலும் அடங்கவே மாட்டேங்கிறாங்க. வேறு வழி இல்லாமல் ஹோட்டலில் இருந்து அவர்களுடன் கிளம்பினேன்.

அனாதிக் குழுமத்தில் மிகவும் பிரபலம் ஆண்ட்ரியா. அவரின் கண்களும், சிறிய உதடுகளும், நெடு நெடுவென உயரமும்,  வளைவு நெளிவுகளும் ரசிக்கத்தக்கவை.

”ஏம்பா, உறிஞ்சே தள்றானாம், போய் ஒரு எட்டுப் பாத்தாத்தான் எனக்குத் தூக்கம் வரும்” என்று கதறிக் கொண்டிருந்தான் குஞ்சு.

”யாருடா அது?” என்றேன்.

”அதான்பா, பிஞ்சிலேயே பழுத்தானே ஒரு ஹீரோப்பயல், சித்தார்த் அவன் தானப்பா” என்று எரிச்சலில் குமைந்தான் குஞ்சு. எனக்குச் சிரிப்பு வந்தது. ”சரிடா அது அவர்கள் தொழில், பலபேர் இருக்கச்சே முத்தம் கொடுப்பது தொழில்டா” என்றேன்.

”முத்தம் மட்டும் கொடுப்பானேன், பேசாமால் முதலிரவையும் நடத்திட்டா நல்லாயிருக்குமே” என்றான் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு குஞ்சு.

”முதலிரவா? ஆண்டிரியாவுடன் சித்தாத்தா? ஆஹா! ஆஹா!” என்றான் குடிகாரன்.

குஞ்சு அவனை ”டேய் பேசாமல் இரு. கொலை வெறியில இருக்கேன்” என்றான்.

”ம்ம்ம்.. அந்த அனிருத் பய வச்சு உறிஞ்சானே அப்போ எங்கேடா போனே?” என்றான் குடிகாரன்.

”என் வயித்தெரிச்சல் தாண்டா அவன் என்னா பு….க்கு பாட்டைப் போட்டு சிக்கி சீரழிஞ்சான்” என்றான் குஞ்சு கடுகடுப்புடன்.

எனக்குப் புரியவே இல்லை. ஆண்ட்ரியாவை ரசிக்கலாம். ஆனால் உரிமை கொண்டாட இந்தக் குஞ்சுப் பயலுக்கு என்ன உரிமை இருக்குன்னு தெரியவில்லை.

”ஏண்டா குஞ்சு, ஆண்ட்ரியா மேலே உனக்கு அவ்வளவு லவ்வாடா? ” என்றேன்,

“கனவுக்கன்னிடா அனாதி” என்றான் சோகத்துடன்.

ஏதோ ட்ரைப் பண்ணிக் கொண்டிருப்பான் போல. யாருக்குத் தெரியும் எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குனு.

தியேட்டருக்குள் சென்றோம். படத்தின் ஆரம்பத்திலேயே ஆண்டிரியாவை உறிஞ்ச ஆரம்பித்தார் சித்தார்த். நல்ல நடிப்பு. குஞ்சுவின் முகத்தைப் பார்க்கலாம் என்று திரும்பினால், குஞ்சு அவன் வேலையை ஆரம்பித்திருந்தான். யாரோ ஒரு சிட்டுக்குருவியைக் கரெக்ட் செய்திருந்தான் போலும். அந்தச் சிட்டுக்குருவி சிக்குன்னு இருந்தது. சிகுருவியின் மார்பில் “for you only” என்ற டெக்ச்ட் மினுத்தது சில்வர் கலரில். குடிகாரன் வோட்காவை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

நானோ வெண் திரையில் சித்தார்த் ஆண்ட்ரியாவை உறிஞ்சுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பச்சைக்கிளி முத்துசரத்தில் ஆண்டிரியாவின் புகைப்படத்தையும், அவள் திரைப்படத்தின் புகைப்படத்தையும் பாருங்கள்.

Andrea_jeremiah5

andrea2

குஞ்சு சிட்டுக்குருவியுடன் எஸ்கேப் ஆகையில் “சப்பிப்போட்ட மாங்கொட்டை” என்றான் ஆண்ட்ரியாவை. அவன் காதல் இப்போதைக்கு அந்தச் சிட்டுக்குருவியுடன் ஆரம்பித்து விட்டது. இனி ஹோட்டலாவது ஒன்றாவது? படம் முடிந்து நானும் குடிகாரனும் கிளம்பினோம்.

எந்த ஹோட்டலோ? எங்கே இருக்கானோ தெரியவில்லை. போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டான் படுபாவி.

– அனாதி


மானாட மயிலாட நவீன வெர்சன்

மே 13, 2016

இரண்டு பெண்களுடன் லாட்ஜில் ஆட்டம். இன்னும் எத்தனை எத்தனை பெண்களோ யாருக்குத் தெரியும்? ஒரு மாவட்டமே இப்படி என்றால் அனைத்து மாவட்டங்களும்?

மக்கள் சேவை என்றால் இதுவல்லவோ சேவை? பெண்களின் உடம்பின் மீது இருக்கும் கொழுப்பைக் கரைக்க ஆட்டம், எடையைக் குறைக்க ஆடை அவிழ்ப்பு. எனர்ஜிக்கு குச்சி ஐஸ். குச்சி ஐஸ் சாப்பிட்டால் உடம்பு அழகு கூடுமாம்.

ஒவ்வொரு மாவட்டங்களும் அழகு நிலையம் வைத்திருக்கிறார்கள் என்பது மிகத் தாமதமாகத்தான் தெரிய வந்தது என்று பல்வேறு மகளிர்கள் வருத்தத்துடன் இருப்பதாகக் கேள்வி.

குஷியுடன் குஜாலுடன் குஞ்சு


42 – ஜாக்கிரதை

மே 3, 2016

தமிழர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஒரு சில இருக்கின்றன.

தமிழர்களுக்கு தமிழ் மொழி போல இசை என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி தமிழ் சமூகங்களில் வாழ்பவர்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தைகளுக்கோ ஏதாவது தெரியுமா?

தமிழர்களின் இசை என்றால் அது தியாகராஜ பாடல்களில் இருந்து ”பு” என்று பாட்டுப் போடும் சுனிருத் போன்ற வேகாதா வேக்காடுகள் போடும் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.

தேவாரமும், திருவாசகமும் கர்நாடக இசைப்பாணியிலே தான் பாடப்படுகிறது. நாசமாப் போன சினிமாப் பாடல்களில் குஞ்சாமணி போன்ற எப்போதும் பு.சு நினைவிலிருப்போருக்கு வேண்டுமெனில் சுகமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்ன?

சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்து.

அது சரி! அடுத்த படம் 41க்கு வசூலைக் குவிக்க டிவிக்களில் ஆஹா ஓஹோ என்று பேட்டிகள் வலம் வர ஆரம்பித்து விட்டன. குசு விட்டதைக் கூட பேட்டியில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களிக்கு தங்களின் வரலாறு தெரிகிறதோ இல்லையோ சினிமாவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதனால் படம் பார்க்கும் தமிழர்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டால் பொழுது போக்கு என்கிறார்கள்.

தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை நிறுத்தினால் நடக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. டிவி பார்ப்பதை நிறுத்தினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

– குடிகாரன்


ஒரு ஒப்பீடு

ஒக்ரோபர் 9, 2015

PTI10_3_2015_000193B

முகேஷ் அம்பானியால் எண்ணற்றோர் வேலை செய்கிறார்கள். சம்பாதிக்கின்றார்கள். வாழ்கிறார்கள்.

நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

நாமெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது கொஞ்சமாவது உங்களுக்குப் புரிய வேண்டும். ஒவ்வொருத்தனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் போனால் கூட பரவாயில்லை. ஆனால் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம். இந்த நொடி உங்களிடமிருந்து போய் விட்டது. மீண்டும் கிடைக்குமா?

விஜய் டிவியில் டிடி இதை அருமையாகச் சொன்னார். ”விலையே இல்லாத அருமையான உங்களின் நேரத்தினால் தான் நாங்கள் இந்த அவார்டுகளைப் பெறுகிறோம் என”

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரம்! மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு பெரிய சொத்து. எத்தனை பேரின் மூன்று மணி நேரம்? அளவிருக்கிறதா அதற்கு? விலை இருக்கிறதா அதற்கு?

பிறருக்காக நீங்கள் காசைக் கொடுத்து செலவிடும் அந்த ஒவ்வொரு மணித்துளியையும் பலரின் பாக்கெட்டுக்குள் செல்கிறது. அந்த நன்றிக்கடனுக்காவது ஒரு வாய் தண்ணீராவது கொடுத்தார்களா? என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்பமும், நீங்களும் உருப்படுவீர்கள்.

– பஞ்சரு பலராமன்


உங்கள் குஞ்சுவின் ஸ்பெஷல் தீபஒளி வாழ்த்துக்கள்

நவம்பர் 1, 2013

Diwali-sexy-images

 

அன்பு நண்பர்களே !

அதிக வேலைப்பளுவினால் அனாதியும் நண்பர்களும் பிளாக் எழுத முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறோம்.

உங்களின் மனம் கவர் குஞ்சான அடியேனின்  தீபஒளி  நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தீபாவளிக்குள் ஆண்கள் அதாவது அனாதி பிளாக்கின் ரசிகர்களின் சீக்ரெட் லிஸ்ட்டில் மேலே படத்தில் இருக்கும் மேட்டர் போன்ற சிலபல பெயர்கள் ஏறட்டும் என வாழ்த்துகிறேன்.

– குஞ்சு


உரசல்

ஏப்ரல் 7, 2013

எண்ணெயில் விழுந்து பொறித்த நான்கு பணியாரங்கள் அது (அங்கே) உப்பலான பணியாரங்கள் உரசும் உரசலைப் பார்த்து விட்டு, குஞ்சு குஷியாகி கும்மாளமிடுகிறான். இதோ உங்களுக்காக ஒரு பாடல். உரசல்னா உரசல் அப்படி ஒரு உரசல். என்னமா தேய்க்கிறாய்ங்கன்னு பாருங்க. ஃப்ளோர் கொதிக்குதுல்ல.

https://www.youtube.com/watch?v=NrDoSkEXZ8U

இப்போதும் தான் படமெடுக்கின்றான்கள் லூசுப் பசங்க.

பாக்கியராஜ் மாதிரி எவனாது படம் எடுக்கின்றானா? எல்லாம் தொங்கிப் போன பயலுக படமெடுத்தா உருப்படுமா? குஞ்சலி அம்மா, இப்போது அதிகாரமுள்ள ஆள் ஒருவரின் மொத்த குத்தகையில் இருக்கின்றாராம். நான் தான் அடுத்த அந்த அமைச்சர் என்கிறாராம். எனது ஃப்ரண்ட் ஒருத்தன் சீரியசா லவ்வடித்து காசைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஞானயுபதேசத்தை அனாதியின் பங்களா அருகில் குஞ்சலியும் அதிகாரமும் அடித்த ரகசியக் கூத்தைக் காட்டி உபதேசத்தை வழங்கினான் அனாதி. நண்பன் அதிரிபுதிரியாகி பேயடித்தது போல திரிந்து கொண்டிருக்கிறான். விரைவில் பத்திரிக்கைகளில் தொழிலதிபரின் மகன் திருமணம் என்ற புகைப்படம் வெளிவரும்.

பசங்களா ! சொல்லுவதைச் சொல்லி விட்டேன். புரிஞ்சுக்கோங்க.

குஞ்சுகளா, குட்டிகளா படம் பார்த்து இளித்து விட்டுச் சென்று விடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும்…

– குஞ்சு


வெகு விரைவில் பதிவுகள் தொடரும்

ஜனவரி 28, 2013

அனாதியும் நண்பர்கள் வட்டாரமும் வேலைகளில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால் பதிவு எழுத நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எவ்வளவோ விஷயங்களை பகிர்ந்து கொண்டு, நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், நேரமின்மை தடுக்கிறது. விரைவில் எழுதுகிறோம். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

– அனாதி மற்றும் நண்பர்கள்.


%d bloggers like this: