வைத்தியா கேசவ அய்யரின் பசிதம்பரத்தின் ஊழல் மற்றும் சிதம்பர ரகசியம்

மே 26, 2017

தேடித் தேடிப் பார்த்தேன். எந்தப் பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை. டிவியிலும் கூட இல்லை. இது உண்மையா பொய்யா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் ப.சிக்குத் தெரியாத விஷயம் இல்லை. அவர் ஒரு வக்கீல். போதாதற்கு அவரின் மனைவியும் வக்கீல். இத்தனைச் சொத்துக்களுக்கு உரிமையாளர்கள் என்றால் அதையும் சட்டப்படிதான் செய்திருப்பார்கள். இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் வரக்காரணம் கேசவ அய்யர் என்ற வார்த்தைகள் தான். ஏதோ ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் அந்த கட்டுரையைப் படித்து விடுங்கள். இது அத்தனையும் உண்மையாக இருந்தால் அப்பப்பா?

http://postcard.news/p-chidambaram-biggest-corrupt-man-india-ever-saw-will-shocked-know-amount-looted/

அடுத்து சிதம்பர ரகசியம் என்றொரு தலைப்பில் வெளியான கட்டுரை கீழே.

https://www.pgurus.com/chidambara-rahasya-details-of-huge-secret-assets-foreign-bank-accounts-of-chidambaram-family/


மந்தாகினியும் மசரெட்டியும்

மே 23, 2017

மசுரு ரெட்டி என்று எழுத வேண்டியதை மசரெட்டி என்று எழுதி இருக்கிறார் என்று நினைக்காதீர்கள். சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கஸ்டம் பில்டு காரின் பெயர் தான் மசரெட்டி. சொகுசுக்கார். உள்ளே கொஞ்சம் கூட உறுமல் சத்தம் கூட கேட்காத, அதிராத கார். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து தரப்படுபவை இவைகள். உலகின் அதி பணக்காரர்கள் என்பதை விட பெண்களின் மீதும், உணவின் மீதும்,
வித்தியாசமான வாழ்க்கையின்மீதும் அதீத பற்றுக் கொண்ட ரசனையாளர்களின் தேர்வு தான் மசரெட்டி கார். உல்லாச உலகம் சாலையில் வலம் வருவது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு சிலர் தன் பிறந்த நாளைக் காரின் எண்ணாக வைப்பர். அதாவது எனது பிறந்த நாளான 4.7.1986ஐ 4786 என்று வைக்கலாம். தங்கள் வைத்திருக்கும் காரினைக் கூட தன் ஆளுமைக்குள் வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட ரசனையான மனிதர்கள் உலகில் அனேகம்.

பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. பிச்சைக்காரன் கூட சம்பாதிக்கிறான். ஆனால் வாழத் தெரிய வேண்டும். அதன் தாத்பரியம் தெரிய வேண்டும். நம்ம குஞ்சு இருக்கின்றானே, அவன் அப்படித்தான். ஹோட்டலில் வேலை செய்வான், திடீரென்று ஃபார்ச்சூனர் காணாமல் போய் இருக்கும். போன் செய்தால் கூட பேசமாட்டான். அவன் யார் கூடப் பேசிக் கொண்டிருப்பான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சமீபத்தில் தினமலர் வாரமலரில் அந்துமணி ஒரு காரின் முன்பு நிற்பது போன்ற புகைப்படத்தினைப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

நன்றி : வாரமலர், தினமலர், அந்துமணி

மேலே இருக்கும் கார் தான் மசரெட்டி கார். குட்டிப்பையன் சூப்பரா இருக்கான் பாருங்க. சினிமா ஹீரோவாக ஆகலாம்.

– அனாதி


ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறாரா?

ஜனவரி 19, 2017

தன் புதுப்பட வெளியீட்டு நெருங்குகிற வேளைகளில் ரஜின் தன் திருவாய் மலர்ந்தருள்வது வாடிக்கை. தமிழகத்தில் அசாதரண நிலை நிலவுகிறது. குடும்ப ஆட்சிகள் நடைபெறுகின்றன என்று அரசியல் பேசி இருக்கிறார்.

குடும்ப ஆட்சி நடந்த போது அவர்களின் திரைப்படத்தில் நடித்தார். கோடிகளில் சம்பளம் வாங்கினார். அப்போது குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று தெரியவில்லையா? அவர்கள் கொடுத்த சம்பளம் குடும்ப ஆட்சியிலிருந்து வந்தது என்று தெரியவில்லையா?

சினிமாவில் மகள்கள், மருமகன்கள், சம்பந்திகள், சம்பந்திகளின் உறவினர்கள் என்று தங்களுக்குள்ளே படம் தயாரிப்பார்கள், விற்பார்கள், லாபம் சம்பாதிப்பார்கள். அது மட்டும் சரி. சினிமாவில் புதியவர்களை நுழைய விடுகின்றீர்களா? கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒழித்துக் கட்டுகின்றார்கள்.

தாங்கள் ஒரே குடும்பத்துக்குள் செய்தால் எங்களுக்கு சினிமா தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்று பேசுவார்கள்.

அதே போலத்தான் அரசியலும். அரசியல் செய்தவர்களுக்கு அரசியல் தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்பார்கள். சினிமாவில் குடும்பமே இருக்கலாம் என்கிற போது அரசியலில் இருந்தால் என்ன தவறு? ஏனிந்த எரிச்சல் உங்களுக்கு?

இனி உங்கள் பேச்சை சுத்த தமிழர்கள் எவரும் நம்பி ஏமாற மாட்டார்கள்.

கிமலரும் குகடனும் வரிந்து கட்டிக் கொண்டு அதிமுகவிற்கு எதிராக எழுதுகின்றார்கள். கூபா அரசியலுக்கு வரும் போது வேறு எவரும் வரக்கூடாதா? என்னங்க சார் உங்க பத்திரிக்கை தர்மம்?

ஒருவர் எழுதி இருக்கிறார் மணி அடித்தவர் வாத்தியார் ஆகலாமா? என. ஆரிய தர்மத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் தமிழர் சமூகத்தில் அப்படி இல்லை. தமிழர்களுக்குள் சிண்டு முடிந்து விட்டு குளிர்காய்வதிலும் தமிழகத்திற்கு தமிழர் அல்லாது ஆரியரோ அல்லது வேறு ஆட்களோ தலைவராகத்தான் வர வேண்டுமென்று நினைத்து சூதுகளைச் செய்து செய்திகளைப் பரப்பி வரும் கெடுமதியாளர்கள் தின்று கொண்டிருப்பது ஒவ்வொரு தமிழனும் கொடுக்கும் காசுதான். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்கும் சில ஆரியப்பத்திரிக்கைகளை அடையாளம் கண்டுகொண்டு தமிழர்கள் நடத்தும் பத்திரிக்கைகளை வாங்கிப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இத்தகைய சூதுக்களை இப்போதெல்லாம் வெகு தெளிவாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் சூதும் வாதும் நிறைச் செய்திகளை தினம்தோறும் வெளியிடுகிறார்கள்.

ஒரு தமிழச்சி தலைவராக ஆவதா என்று வயித்தெரிச்சலில் தினம்தோறும் அதிமுக உடைப்பு என சில்வண்டுகளின் ரீங்காரத்தை செய்திகளாக்கி பொய்யுரைப் பரப்பி வருகின்றார்கள்.

அதற்கு ஒரு சில கபாலிகளும் துணை போகின்றார்கள். ஒவ்வொரு தமிழனும் கொடுத்த காசில் தின்று கொழுப்பெழுத்து செய் நன்றி மறந்து தீங்கு செய்ய நினைத்திடும் தீய சக்திகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

காமராஜர் என்ற தமிழர் ஆட்சியில் இருந்த போது நடந்த மக்கள் நல திட்டங்களைப் போல சுத்த தமிழரான அதிமுக செயலாளரும், தற்போதைய முதன் மந்திரியும் செய்வார்கள் என நம்பலாம்.

தேமுதிகவிலிருந்து பிரிந்து போனவர்களின் தற்போதைய நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். இதே நிலைதான் சுய நலசக்திகளுக்கு துணை போகும் புரியாதவர்களுக்கு ஏற்படும். சக்தி நிறைந்த அதிமுகவை உடைக்க ஆசைப்படும் குள்ள நரிக்கூட்டத்தாரின் நயவஞ்சக சிந்தனைகளைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

ஜெயலலிதாவை அடித்து உதைத்து சேலையைக் கிழித்து எரிந்தபோது இன்றைக்கு அரசியல் பேசி, தர்மம் நியாயம் பேசும் எவரும் சென்று காப்பாற்றவில்லை. வேஸ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கார்டனின் கேட்டில் விடிய விடிய கண் விழித்து பாதுகாத்து நின்றவர்கள் இன்று பேசுகிறார்கள். கேட்பதற்கு எரிச்சல் வருகிறது. அய்யோ அய்யோ என்று அலருகின்றார்கள்.

அதிமுக ஆதரவாளன் என்று நினைக்கலாம். ஆனால் அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டினை தமிழர் ஆள வேண்டும் அவ்வளவுதான். அரசியலில் ஊழல் துஷ்பிரயோகம் என்பதெல்லாம் நமக்குள்ளே இருப்பது.

இத்தனை நாள் ஏமாந்தது போதும். சூது செய்யும் பகல் வேஷக்காரர்களையும், தன் இனத்தை மட்டுமே உயர் பொறுப்பில் வைத்திட நினைத்திடும் கூட்டத்தாரையும் புரிந்து கொள்ள வேண்டும்.

என் சாமியைக் கும்பிட எனக்கெதுக்கு ஒரு ஆள் என என்று தமிழர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றார்களோ அன்று ஆரம்பிக்கும் தமிழர்களுக்கான விடியல். வட இந்தியாவில் ஒவ்வொருவரும் தானே பூஜை செய்யலாம். அங்கிருக்கும் கடவுள் அதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் தென்னிந்தியாவில் அந்தக் கடவுள் ஒத்துக் கொள்ள மாட்டாரா?

– அனாதி


பொங்கல் வாழ்த்துக்கள்

ஜனவரி 13, 2017

அனாதி தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

– பஞ்சரு பலராமன்


திமுக செயல்தலைவருக்கு வாழ்த்துக்கள்

ஜனவரி 4, 2017

கடந்த மாதமாகவே திமுகவினர் பலரும் எதிர்பார்த்த நிகழ்வு நடந்து விட்டது. வேறு வழியே இல்லை. ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும். கலைஞரின் கைவண்ணத்தில் உருவான அற்புதமான கதையின் ஹீரோ இப்போது வந்து விட்டார். அண்ணாவினால் உருவாக்கப்பட்டு எம்.ஜி.ஆரினால் வளர்ந்த திமுக எனும் இயக்கத்தின் தலைமை மாறி இருக்கிறது.

ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நாஞ்சில் சம்பத் வகையறாக்கள், இன்டர்னெட் போராளிகள் இந்த நிகழ்வை எப்படிப் பார்ப்பார்கள் என்று கவனிக்க வேண்டும்.

இனிமேல் உதயநிதி ஸ்டாலின் ஹாலிவுட் கதா நாயகிகளுடன் ஜோடி போடுவார். தியேட்டர்கள் எங்கும் உதயநிதி ஸ்டாலின் படமாக வெளிவரும். அனைத்து ஹீரோக்களின் படங்களையும் இவரே தயாரிப்பார். சினிமாவில் பணப்பிரச்சினை தீர்ந்தது. ஹீரோக்கள் இனி 100 கோடி சம்பளம் வாங்குவார்கள். தியேட்டர்களில் இனி டிக்கெட் விலை 1000 ரூபாயாக உயரும். ரஜினியின் படத்தை 5000 கோடியில் தயாரித்து ஹாலிவுட்டிலும் வெளியிடுவார்கள். தன்மானம் மிக்க இளம் தமிழர்கள் புளகாங்கிதம் அடையும் நிகழ்வுகள் இனி நடக்கும்.

சன் டிவி வகையறாக்கள் வானத்தில் பறக்கும் கப்பல்களை வாங்குவார்கள். உலகப் பணக்காரர்களில் சன் குடும்பத்தார் இணைவர். தமிழர்களில் பெரும்பாலானோருக்கு வேலைகள் கிடைக்கும்.

ஆனால் கனிமொழி மற்றும் அழகிரி வகையறாக்கள் தான் என்ன செய்யப்போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆஹா..ஆஹ்ஹாஅ…

உதயநிதி ஸ்டாலின் பாசறை உருவாக்கப்படும். இளைஞர்கள் கூட்டம் படையெடுத்து பாசறையில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். இனி எல்லாம் சுகமே.

அட நொய்யாலே குடிகாரப்பயலே, ஏண்டா இப்படி குறுக்கே புகுந்து ஆட்டத்தைக் கலைக்கிறே ஓடிப்போய்டு..

இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறதடா சொல்லிட்டுப் போயிடுறேண்டா குஞ்சு.

சொல்லித்தொலை… !

மனுஷ்யபுத் வகையறாக்கள் தமிழகத்தின் அதிகாரமிக்க இருவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவர். சாரு வகையறாக்கள் இனி 2000 ரூபாய் ஜட்டி போடுவார்கள். டாப் அப்புகள் இனி லட்சக்கணக்கில் நடைபெறும்

லூசுக்கம்னாட்டி குடிகாரப்பயலே ஓடிப்போயிடு…

குடிகாரன் டாஸ்மாக்கு போயிட்டான். குஞ்சு வாயில ஜொள்ளு ஒழுக …. வேண்டாம் விட்டு விடலாம்.

என்ன மேகா அரசியலுக்கு அரசியலும் ஆச்சு குஷிக்கு குஷியும் ஆச்சு. ஓகே வா!

– அனாதி


அனாதிக்கு மேகாவின் வேண்டுகோள்

ஜனவரி 4, 2017

அன்பு நண்பா அனாதி,

எப்போதாவது வந்து ஏதாவது எழுதி வைத்து விடுகிறாய். நமக்கு அரசியல் எல்லாம் செட்டாகாது அனாதி. அரசி இயல் தான் நமக்குச் செட்டாகும்.

சதா இப்போது விஜய் டிவியில் உதட்டைச் சுழித்துக் கொண்டு கிக்காட்டிக் கொண்டிருக்கிறாரே அதைப் பார்ப்பதை விடவா நமக்கு இந்த அரசியல் முக்கியம்?

உன் ரகசிய சினேகிதிகளின் கதைகளை அவிழ்த்து விடு நண்பா? தயவு செய்து இனி அரசியல் பதிவுகளை எழுதாதே. கிளுகிளுப்பாகவே இல்லை.

– மேகா, சென்னை


அதிமுக பொதுச்செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

திசெம்பர் 30, 2016

முதன் முதலாக ஒரு பேரியக்கத்திற்கு தமிழ் பெண் ஒருவர் தலைமை ஏற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.  அதிமுகவினர் தங்கள் இயக்கம் ஒரு இரும்புக் கோட்டை என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அரசியல் செய்தவர்களுக்கும், அரசியலில் ஊறியவர்களுக்கு மட்டுமே அதிமுகவின் தற்போதைய உண்மை நிலமை புரியவரும். பூனை கையில் கிடைத்த பன் போல பிரித்து விடலாம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அம்பி பத்திரிக்கைகள் விடாது புரளிகளையும், புரட்டுகளையும் எழுதி எழுதி தள்ளிக் கொண்டிருந்தன. ஒரு தமிழச்சி தலைமைப் பொறுப்புக்கு வருவதா என்ற எரிச்சல் மட்டுமே காரணம்.

போயஸ் தோட்டத்திலே தன்னந்தனியாக இருந்த ஜெ-வைப் பாதுகாத்து அவருக்கு அரண் அமைத்து இது நாள் வரையிலும் கூடவே இருந்து பாதுகாத்து வந்தவரைப் பற்றி வாய் கூசாமல் பலரும் பல வார்த்தைகளில் விமர்சித்து எழுதுகின்றார்கள். எத்தனை முறை ஜெயிலில் கிடந்திருக்கிறார் அவர். எத்தனை முறை ஜெ-வால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்? காருக்காக காட்டிக் கொடுக்கும் வேலை செய்தவர்களைப் போல ஒரு நாளாவது வாய் திறந்திருப்பார்களா? எதிராக ஒரு வார்த்தைப் பேசியிருப்பார்களா? பதவி இல்லையென்றால் அடுத்த கட்சி தாவி ஓடும் பதர்களைப் போலவும், பதவி கிடைக்கவில்லை என்றால் ஏசும் அரசியல் பதர்களைப் போலவுமா அவர்கள் இருந்தார்கள். உறவினர்கள் சிறையிலடைக்கப்பட்டனரே அப்போதாவது ஜெ-வுக்கு எதிராக ஒரு வார்த்தைப் பேசினாரா?

முதன் முதலாக மன்னார்குடியில் அரசியல் கூட்டத்தைக்கூட்டி அம்மாவுக்கு அரசியலில் நுழைவு ஏற்படுத்திக் கொடுத்தபோது இப்போது வீராவேசம் பேசிக் கொண்டிருந்தவர்கள் எங்கே இருந்தார்கள் அப்போது?

இதோ அப்பாவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை அறிவித்தவர் எல்லாம் அரசியலுக்கு வரலாம். ஆனால் சின்னம்மா வரக்கூடாதாம். என்னே ஒரு சிந்தனை?

எங்கிருந்தோ வந்த மொழிக்கு பதவி கொடுத்ததும் ஒரு வார்த்தை பேசாத வாய்ச்சொல் வீரர்கள், திடீரென்று எம்பி பதவி பெற்று அமைச்சராகி பின்னர் தன் கட்சிக்கே வேட்டு வைத்து விட்டு மீண்டும் அரசியலுக்கு வந்து கூசாமல் மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கும் நிதிகள் எல்லாம் அரசியலில் பிழைக்கிற போது வார்த்தைகள் எல்லாம் எங்கே போயின?

ஆனால் இவர் வரக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

பத்திரிக்கைகள் அனைத்தும் உண்மையையே எழுதுகின்றன என்று எவரெல்லாம் நம்புகின்றார்களோ அவர்கள் தான் கைவலிக்க எழுதிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அனாதி தளத்தினைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். தேவையற்ற விஷயங்களை நாம் எழுதுவதில்லை என்பது.

அதிமுகவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

– அனாதி நண்பர்கள் குழாம்.

குறிப்பு : – அரசியல் = ஊழல், அயோக்கியத்தனம். இந்த கணக்கை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இது இரண்டும் இல்லையென்றால் அரசியலும் இல்லை. அரசாங்கமும் இல்லை.


%d bloggers like this: