ஏமாளித்தமிழர்கள் – பிக்பாஸின் சோதனை

இன்றைக்கு திடீரென விகடனைத் திறந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நிலை பற்றிய கட்டுரையை எழுதி இருந்தது. விகடன் ஏன் வேலி ஓணாணை எடுத்து ஜட்டிக்குள் போட்டுக் கொள்கிறது என்றொரு கேள்வி எழுந்தது.

மீடியாக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று கண்ணுக்குத் தெரியாத இணைப்பை தங்களுக்குள் வைத்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். விகடனுக்கும் விஜய் டிவிக்கு ஒரு ரகசிய பிணைப்பு இருக்கிறது போலும். விஜய் டிவியின் முதலாளி அமெரிக்கா, விகடனுக்கு அம்பி முதலாளி. விஜய் டிவியில் தோன்றுவது அம்பி. மீறன் பிரதர்ஸால் கொண்டு வரப்பட்ட சட்டம் மட்டும் இல்லையென்றால் விஜய் டிவியின் செய்தி சானல் தமிழகத்தைக் கபளீகரம் செய்திருக்கும். அது நடக்கவில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிச்சு இருக்கிறது.

தமிழக வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால் அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா போன்றவர்கள் சினிமா மூலம் கிடைத்த புகழை வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்தவர்கள். சினிமா தமிழக மக்களின் மீது இதுவரௌ உருவாக்கிய தாக்கம் அத்தகையது. ஆனால் விஜயகாந்தால் அந்தளவுக்கு மக்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. தமிழகமக்கள் சினிமாக்காரனுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரியவருகிறது.

சமீபகாலமாக ரஜினி,கமல், விஜய், அஜித் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வுகின்றன. பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று நினைத்துப் படம் எடுத்தவர்கள் கோடிகளில் இழந்திருக்கின்றார்கள். கமலை வைத்துப் படம் எடுத்தால் என்ன ஆகும் என்று அவரின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். சினிமாவின் தாக்கம் தமிழக மக்களிடம் குறைந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

இந்தச் சூழலில் பத்தாண்டுகளாக இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் திடீரென்று தமிழகத்தில் ஒளிபரப்ப என்ன காரணம் என்று யாராவது சிந்தித்தீர்களா?

எவிக்சன் போது பரணிக்கு ஒரு கோடிக்கும் மேல் ஓட்டுக் கிடைத்திருக்கிறது என்பதும் ஓவியாவிற்கு கோடிக்கும் மேல் ஓட்டுக் கிடைக்கிறது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. தமிழக பெரும் கட்சிகள் பெறுவதும் ஒரு கோடி ஓட்டுதான். பிக்பாஸில் உலகெங்கிலிருந்தும் ஓட்டுப் போடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் தமிழக மக்களிடையே பரணிக்கும், ஓவியாவிற்கும் கிடைக்கும் ஆதரவு கவனிக்க வேண்டியதாகும். கமலின் சமீபத்திய அரசியல் பேட்டிகள் பல கதைகளை என் முன்னால் விரிக்கின்றன.

இனி தமிழ் சினிமாவினால் சாதிக்க முடியாது என்பதை சினிமாக்காரர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்தாலும் சிறிய கூட்டமொன்று தான் கைதட்டும் என்றும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இனி சினிமாவால் பிரயோஜனம் இல்லை என்றும் புரிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா ஆசை உள்ளவர் எவரானாலும் அழகான சினிமாவை எடுக்கும் அளவுக்கு டிவிக்கள் பாடம் நடத்தி இருக்கின்றன. டெக்னாலஜியும் வளர்ந்திருக்கின்றன. ஹீரோயிசம் இனி எடுபடாது என்பது சுய நலச் சிந்தனைவாதிகளான சினிமாக்காரர்களுக்குப் புரிந்திருக்கின்றது.

அதனால் தான் தமிழக மக்களை மூளைச் சலவை செய்ய டிவிக்கள் சரியானவதானா என்றொரு தேர்வினை நடத்துகின்றார்கள். அந்தத் தேர்வின் மூலம் அடுத்து அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகளை அவர்கள் உருவாக்குவார்கள். பிக்பாஸ் அதற்கான ஒரு களம்.

மக்கள் தான் இவர்களிடமிருந்து வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மணி ரத்னம் படங்கள் தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்களாகவே இருக்கின்றன. பாலச்சந்தரின் படங்கள் மட்டும் விதி விலக்கல்ல. விஜய் டிவியின் தொடர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவையாக இருந்து வருகின்றன.

விஜய் டிவியை வைத்து நன்றாகக் கொழுத்த சம்பாத்தியத்தைச் செய்பவர் ஆர்ஜே செந்தில் மட்டுமே. மதுரையில் மீனாட்சியைக் காதலித்துக் கரம் பிடித்தார். சரவணன் மீனாட்சியில் மீனாட்சியைக் காதலித்து திருமணம் செய்தார். மாப்பிள்ளையில் மீனாட்சியைக் காதலித்து சற்றே குடும்பம் நடத்துகிறார். இனி பேரப்பிள்ளைகள் பற்றிய தொடரும் வரும். ஒரே பெண், ஒரே ஆண். கரு – காதல். சலிக்காமல் எப்படித்தான் பார்க்கின்றார்களோ தெரியவில்லை.

கொழுத்த குட்டி யானை சைசுக்கு இருப்போருக்கு திருமணம் என்கிறார்களே அதையெல்லாம் சகித்துக் கொள்கிறார்களா தமிழக மக்கள். அதாவது பரவாயில்லை, குட்டியானைக்குட்டிக்குக் குட்டிப்பாவாடை போட்டு விடுகின்றார்களே அது என்ன தான் ரசனையோ தெரியவில்லை.

இந்தளவுக்கு கேனத்தனமான இளிச்சவாய் மக்கள் தமிழ் நாட்டைத் தவிர வேறெங்கும் இருக்க மாட்டார்கள். வீட்டுக்குள் இருக்கும் சைத்தானிடம் வெகு ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையென்றால் மீண்டும் ஏதோ ஒரு அம்பியிடம் தமிழகம் அடிமையாகக் கிடக்கக் கூடிய சூழல் உருவாகி விடும். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்.

– குடிகாரன்

குறிப்பு : தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுகொள்கிறார்கள் பிக் பாஸின் நடிகர்கள். முதன்மைப் பாதிப்பு ஜூலிக்கு மட்டுமே! தெருவில் இறங்கி நடக்க முடியுமா அந்தப் பெண்ணால் என்பது தெரியவில்லை. என்ன ஆகுமோ?

2 Responses to ஏமாளித்தமிழர்கள் – பிக்பாஸின் சோதனை

  1. Thirunavukkarasu Rajasekaran சொல்கிறார்:

    //சினிமாவின் தாக்கம் தமிழக மக்களிடம் குறைந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.//

    முழுக்க உண்மை ..

    //எவிக்சன் போது பரணிக்கு ஒரு கோடிக்கும் மேல் ஓட்டுக் கிடைத்திருக்கிறது என்பதும் ஓவியாவிற்கு கோடிக்கும் மேல் ஓட்டுக் கிடைக்கிறது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. தமிழக பெரும் கட்சிகள் பெறுவதும் ஒரு கோடி ஓட்டுதான். //

    இந்த பிக் பாஸ் ஒட்டு என்பது ஒரு உட்டாலக்கடி வேலை. ஒருவர் ஒரு நாளுக்கு 50 ஓட்டு போடலாம். அப்போ திங்கள் டூ வெள்ளி/சனி குத்துமதிப்பாக, 250-300 ஓட்டுக்கள் ஒருவர் போடலாம். நிற்க, இது ஒரு கூகுல் லாகின் – இல் மட்டும். 2-3 லாகின் வைத்திருந்தால்.. 2-3 மடங்கு.

    நீங்கள் சொல்வது போல், 1 கோடி பேர் ஒரே நாளில் போடும் ஓட்டு ஆகாது.பிக் பாசில் ஓட்டுப் போடும் ஒருவர் ஒரே ஒரு அக்கௌன்ட் மட்டுமே வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும், 1 கோடி/300 தான் ஒரிஜினல் ஓட்டுக்கள். அது மட்டுமில்லை அரசியல் கட்சியிலேயே சேருகிற கூட்டம் எல்லாம் ஓட்டாகி விடுவதில்லை என்பது தெள்ளத் தெளிவு. பிக் பாஸ் ஓட்டை இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    // வீட்டுக்குள் இருக்கும் சைத்தானிடம் வெகு ஜாக்கிரதையாக இருங்கள்.//
    நிச்சயம் கவனிக்கத்தக்க ஒரு வாதம் ..

    • அனாதி சொல்கிறார்:

      இமெயில் மூலம் வாக்களிக்கும் வசதி மற்றும் வெளி நாட்டவர்கள் வாக்களிக்கும் வசதிகள் போன்றவையும் இருக்கின்றன பிரதர். நல்ல விஷயங்களுக்கு அதிக ஓட்டு என்பதுதான் மேட்டர். ஒகேவா???? அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: