விவேகம் விமர்சனம்

ஓகஸ்ட் 28, 2017

அஜித்தை அக்கிரமமாகச் சுடுகின்றார்கள். வெகு சரியாக மலையிலிருந்து கீழே விழுகிறார். மிகச் சரியாக ஒரு மரத்தினைப் பிடித்துக் கொள்கிறார். அப்போது போன் வருகிறது. அஜித்தின் மனைவி காஜல் போனில் துப்பாக்கி சத்தத்தையும், அஜித்தின் சத்தத்தையும் கேட்கிறார். அழுகை வர அஜித்திடம், நீங்கள் திரும்பவும் வருகிறேன் என்றுச் சொல்லுங்கள் என்று கேட்க அஜித் என்ன சொல்வார் என்று படம் பார்க்கும் ஒருவனுக்கும் தெரியாது என்று நினைத்துப் படம் எடுத்து இருக்கும் இயக்குனரின் திறமையைப் பார்த்து வியந்து விட்டேன்.

கிளைமேக்ஸில் காஜல் அகர்வால் பேசும் வசனத்தைக் கேட்டு சொரி சொரின்னு சொரிந்து கொண்டேன். சாமி படத்தில் ஆயா பாடியது மாதிரி காஜல் வேறு பாட அஜித்துக்கு வெறி ஏறி விவேக் ஓபராயைப் பிளந்து கட்டுகிறார்.

இதில கொடுமை என்னான்னா  ஹீராதான் ஜெயிப்பாரு என்றும் தெரிந்தும் முழு படத்தையும் பார்த்து விட்டு வருகிறேன்.

நாமெல்லாம் அந்தளவுக்கா மொக்கையாக இருக்கிறோம் என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். நாமெல்லாம் மொக்கையை விட மொக்கை என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்ப்பவரை மொக்கையாக்கிய இயக்குனரின் திறமைக்கும், அஜித் குமாரின் நடிப்புக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்க வேண்டும்.

அவர்கள் உழைத்திருக்கிறார்கள். கடுமையாக அதுவும் இரண்டு வருடங்கள். ஆகவே ஆளாளுக்கு தியேட்டருக்குப் போய் படம் பார்த்து விட்டு வாருங்கள். அதுதான் அஜித் குமார் ரசிகனாக இருக்க தகுதி. பெரிய நடிகர்களின் படம் என்றால் பொச்ச மூடிக்கிட்டு படம் பார்த்துட்டு வர வேண்டும். மொக்கையாகிக் கொண்டே இருந்தால் தான் சுகம். அதுதான் ரசிப்பு. மொக்கையாக மாறி முட்டாளாக மாறி நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொண்டு போய் தியேட்டரில் கொடுத்து விட்டு வந்தால் தான் உண்மையான ரசிகன்.

தமிழகத்தில் ரசிகர்கள் அப்படித்தான் இருப்பார்கள். எவனாவது அது சரியில்லை இது சரியில்லை என்று பேசிக் கொண்டு திரியாதீர்கள். ஊரே அம்மணமா திரியும் போது நீங்க மட்டும் ஏன் உடை உடுத்துகின்றீர்கள்? பெரும்பான்மைக்கு மட்டும் தான் இங்கு மரியாதை. சிறுபான்மையினருக்கு மரியாதை இல்லை என்பதைப் புரிந்து கொள்க.

மற்றபடி அஜித்குமாரின் விவேகம் திரைப்படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்றுச் சொல்லத்தான் வேண்டும். கடைசி வரை தியேட்டரில் உட்கார்ந்திருந்தேன் அல்லவா?

– பஞ்சரு பலராமன்

போதையில் உளாறுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் எப்போதுமே ஸ்டெடியாகத்தான் இருப்பேன்.


விவேகம் – நுண்ணிய அரசியல்

ஓகஸ்ட் 26, 2017

ப்ளூ சட்டை போட்டவர் ஒருவர் யூடியூப்பில் விவேகம் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பதிவேற்றினார். அவருக்கு வரும் கமெண்ட்களும், அதைத் தொடர்ந்து வரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களும் கொடுமையானவை. அவர் அவற்றை தாண்டி வரட்டும்.

நீ யாருடா விமர்சனம் செய்ய? என்று கேட்கின்றார்கள். நல்லபடியாக விமர்சிப்பவர்களை நீ ஏன் விமர்சிக்கின்றாய் என்று எவரும் கேட்கவில்லை. நீ என்ன பிலிம் இன்ஸ்டியூட்டிலா படித்தாய் என்று ஒருவர் கேட்க, அஜித் ஹீரோவாவதற்கு எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார் என்று ஒரு குரல் கேள்வி கேட்கிறது. சினிமா ஹீரோவிற்காக எவரோ எதற்கோ அடித்துக் கொள்கிறார்கள். ஒரு படம் நன்றாக இல்லை என்றுச் சொன்னால் கூட கோபம் வருகிறது. ஏன் கோபம் வருகின்றது என்று கேட்டால் என் ஆதர்ச ஹீரோ என்கிறார்கள். அந்த ஹீரோவிற்கு சாப்பாடு போடுவது இவர்கள். கொடுமையாக இருக்கிறது.

ஸ்ருதி ஹாசனும், அக்சரா ஹாசனும் அஜித் படங்களில் நடிக்கின்றார்கள் என்பதன் அரசியலைத் தெரிந்து கொள்ளாதவரைக்கும் இவர்கள் இப்படித்தான் சண்டையிட்டு எவருக்காகவோ அடித்துக் கொண்டு அலறுவார்கள். இதன் நுண்ணிய அரசியலைப் புரிந்து கொள்ள முயலுங்கள். சினிமா என்றால் என்னவென்று தெரியவரும். ஜாக்கிரதையாகி விடலாம். புரிந்து கொள்வார்களா தமிழர்கள்????

– அனாதி


குஞ்சு முட்டியான் – ஆந்தையானின் கிசுகிசு

ஓகஸ்ட் 24, 2017

’என் சொல்து’ துபாய் ஆபீசுல வச்சு உறிஞ்சிய உறிஞ்சலில் குஞ்சு முட்டியானுக்கு முட்டி ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது. ஒரு அளவுக்கு மேலே குனிஞ்சா முட்டி கழண்டு தானாகவே கீழே விழுந்துடுதாம்.

சூப்பர் டூப்பர்களைக் கொண்டு வந்து கறி வறுவல் போட்டுக் கொள் என்று அனுமதி கொடுத்து கோடி கோடியாய் கொட்டியும் கொடுத்து விட்டாராம். அப்பனுக்கு கு.முவின் ஆட்டம் அடங்கினால் அடுத்த ஆட்டத்துக்கு தயார் படுத்தி விடலாம் என்ற ஆசை. ஆனால் குஞ்சு முட்டியானுக்கோ முட்டி போட்டு முக்குவதில் ஆசையாம்.

தகராறு நடக்கிறதாம்.

sand

ஏண்டா ஆந்தையா இந்தப் பொம்பளையின் ப.யாரம் அமுங்குமே பையனுக்கு டென்சனாகாது? – பஞ்சரு பலராமன்

அமுங்குனா அப்புறமா ஒரேயடியா அமுக்கிறுவாருப்பா – ஆந்தையான்

எதை எதுக்குள்ளே அமுக்குவாறுங்கிறே? – பஞ்சரு பலராமன்

பஞ்சருன்னு பேரு வெச்சுக்கிட்டு ஏன்யா வெளங்காம இருக்கேன்னு இப்போதான் புரியுது. போய்யா நீயும் உன் கேள்வியும்.

– ஆந்தையான்

 


அஞ்சலி

ஓகஸ்ட் 21, 2017

செமையா இருக்காங்க? அசத்துங்க!!!

– குஞ்சாமணி


2,48,436 கோடி வங்கிக் கடனாளிகள்

ஓகஸ்ட் 9, 2017

பிசினஸ் டுடேயில் இந்த மாதம் வெளி வந்திருக்கும் அதிர்ச்சிக்கட்டுரையினைப் படித்தீர்கள் என்றால் மூளை சூடாகி விடும்.

ஒரே ஒரு டிராக்டர் வாங்கியர் ஒரு மாதம் கடன் கட்டவில்லை என்றவுடன் வங்கியாளர்கள் காவல்துறையை வைத்து மிரட்டி அடித்து சிறைக்குக் கொண்டு சென்றார்களே அந்த கட்ஸ் இரண்டு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து நானூற்று முப்பத்தாறு கோடி ரூபாய் கடன் செலுத்தாவர்களிடம் செல்லுபடியாகுமா?

ஏழையிடம் செல்லுபவர்கள் இந்த கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் செல்ல முடியுமா? அந்தளவுக்கு தைரியம் உண்டா?

இந்த வருடம் 12 கம்பெனிகளின் வாராக்கடன் 2,48,436 கோடி ரூபாய். இதற்காக வங்கிகள் முழு வீச்சாக கடன் வசூலிக்க அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அந்தப் பணம் அடுத்த ஆண்டுகளில் வாராக்கடன் லிஸ்டில் சேர்க்கப்பட்டு விடும் அல்லவா?

டெபிட் கார்டுக்கு வருடம் ஒரு தடவை பணம், எஸ்எம்எஸ்க்குப் பணம், செக் புத்தகத்திற்குப் பணம், ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கமிஷன் என்று மக்களிடம் வசூல் செய்கின்றன. வீட்டில் பணத்தை வைக்கக் கூடாது என்று அரசு சட்டம் போடுகிறது. இவர்களை என்ன செய்யப் போகின்றார்கள் என்று எவருக்கும் தெரியாது.விஜய் மல்லையா இந்தியாவிற்கு வந்து தண்டனை அனுபவிப்பதற்குள் ஆண்டர்சன் கதையாகி விடும் போல.

மற்றொமொறு மேட்டர். இந்த வருடம் மார்ச் வரை ஏழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் அக்கவுண்ட் மூலம் முடக்கப்பட்டிருக்கிறது என்கிறது பிசினஸ் டுடோ.

அதுமட்டுமல்ல 70 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் தனியாருக்கு கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த எந்தக் கம்பெனிகள் கடனை ஒழுங்காகக் கட்டப் போகின்றன? எந்தெந்தக் கம்பெனிகள் மூடப்படப்போகின்றன என்பது அவனுக்குத்தான் வெளிச்சம்.

இரண்டு இலட்ச ரூபாய்க்கு பேப்பரில் நியூஸ் போடும் வங்கிகள் இவர்களைப் பற்றி டிவியிலும், நியூஸ் பேப்பரிலும் செய்திகளை வெளியிட்டாலென்ன? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள். பிசினஸ் டுடே எத்தனை பேர் படிக்கப் போகின்றார்கள்?

அரசாங்கம் இப்படி மக்கள் பணத்தை வைத்து விளையாடும் இத்தகைய கம்பெனிகளின் போக்குகளை கவனித்து அலெர்ட் செய்யக்கூடாதா?

பாவம் இந்தியா? அதன் மக்கள்!!

– அனாதி

( நன்றி பிசினஸ் டுடே)


படம் சொல்லும் உண்மை – ஏமாளி இந்தியர்கள்

ஓகஸ்ட் 8, 2017

கடந்த மாதமே படித்து விட்டேன். தற்போதுதான் நேரம் கிடைத்தது அப்லோடு செய்ய. இந்தக் கடன்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்பது விஜய மல்லையா போன்று சம்பவங்கள் நடந்தால் தெரிய வரலாம். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது எவருக்கும் தெரியாது. முடங்கப் போகும் பணம் மக்களிடமிருந்து கிடைத்தவை என்பதை மட்டும் உண்மை.  இந்த இதழில் அனில் அம்பானியின் ஆர் காம் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. ஒரே திகில் தான். ஒரு வேளை சோறு கிடைக்காமல் சாகின்றார்கள் இந்தியர்கள். ஒரே ஒருவர் செய்யும் நஷ்டம் லட்சம் கோடிகளில்.  ஜனநாயகம் என்பது இதுதானோ??? – அனாதி

15021840916611502184171501

நன்றி : பிசினஸ் டுடே.


அதிமுக – உண்மை என்ன?

ஓகஸ்ட் 5, 2017

அதிமுகவில் என்ன தான் நடக்கிறது? எதிர்காலத்தில் என்ன ஆகும்? – கொஞ்சம் விளக்கமுடியுமா அனாதி? – காவ்யா முத்தரசன்.

நான்கு வருடங்களுக்கும் ஒன்றுமே நடக்காது என்று நம்பலாம். ஏனென்றால் இன்றைய நிலையில் பன்னீரோ, எடப்பாடி அவர்களோ, தினகரனோ ஆட்சியைக் கலைத்து விட்டு பொதுமக்களிடம் ஓட்டுக் கேட்கச் சென்றால் ஒருவரும் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதுமட்டுமல்ல ஆட்சியைக் கலைத்து விடவும் மாட்டார்கள். தினமும் பத்திரிக்கைகளுக்குச் செய்தி கிடைத்த வண்ணம் இருக்கும். தமிழகம் பரபரப்பாய் இருக்கும். மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் மத்திய அரசின் விருப்பத்தின் படியே நடக்கும். மத்திய அரசிடம் வலுவான ஐடி, ஊழல், சிபிஐ மூன்றும் இருக்கும் வரையிலும், தவறு செய்தவர்கள் பதவியில் இருக்கும் வரையிலும் அதிமுக அடிமையாகத்தான் இருக்க முடியும். பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே.

சசிகலாவை வைத்து கட்சியைப் பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் டெல்லி சுல்தானேட்டினால் அது முடியாமல் போய் விட்டது. எப்போதும் டெல்லியின் மனதுக்கு கோணல் வராதவாறு நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும் ஒரு சிலரின் பேராசையினாலும், அவர்கள் செய்த தவறினாலும் அதிமுகவின் இன்றைய நிலை காற்றில் வைத்த சூடம் போல ஆகி விட்டது. சூடம் காற்றில் ஆவியாகி விடும். அது பற்றிய சந்தேகமே வேண்டாம். அது காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம்.

அதிமுகவிற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது. பதவி ஆசை இல்லாமல், மாபெரும் இயக்கத்தைக் கட்டிக் காத்திட(ஒன்றும் ஆகப்போவதில்லை) அதிமுக தலைமையில் யாராவது ஒருவர் மூலம் ஒன்று சேர்ந்திட வேண்டும். ஆனால் மாட்டார்கள். சசிகலா இருந்தார் என்றால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஆனாலும் எதுவோ ஒரு புள்ளியில் இணைந்தால் கொஞ்சம் நஞ்சமிருக்கும் அதிமுகவினரின் ஓட்டு வங்கி காப்பாற்றக்கூடும்.

தற்போது களத்தில் நிற்கும் சில அரசியல்கட்சிகளுக்கு அதிமுக சூடத்தின் விளைவாக ஓட்டு வங்கி பிரிந்து விடும் போலத் தெரிகின்றது. திமுக செயல்தலைவருக்கு லட்டாகக் கிடைத்திருக்கும் வாய்ப்பை ஏன் நழுவ விடுகிறார் என்று தான் புரியவில்லை. வாசல் தேடி வந்திருக்கும் வாய்ப்பை வசதியாக ஏற்க மறுக்கிறார். இனி அப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமா? என்பதெல்லாம் காலத்தின் கையில் இருக்கிறது. இதுவே கலைஞராக இருந்திருந்தால் இன்னேரம் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும். சரி அது போகட்டும். தலைக்கு மேல் பல கூரான கத்திகளைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் திமுகவின் நிலையும் பரிதாபத்துக்கு உரியதுதான்.

உப்பு என்றாலும் ஊழல் என்றாலும் ஒன்றுதான். தண்ணீர் குடித்தே ஆக வேண்டிய தருணம் வந்தே தீரும் என்பது அதிமுகவின் வரலாறு மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதிமுக இனி வரலாற்றில் படிக்கப்பட வேண்டிய பாடமா இல்லை நிகழ்காலத்தில் நடக்க இருக்கும் செய்தியா என்பது அதன் தற்போதைய தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய விஷயம்.

பிஜேபிக்கு ஒரு சிறிய குறிப்பு : நரசிம்மராவ் ஆட்சியில் உர ஊழல் என்று ஒன்று நடந்ததே அதை ஏன் எவரும் கண்டு கொள்ளவே இல்லை?

– அனாதி

அந்த உர ஊழல் பற்றிய சிறு குறிப்பு கீழே – ( நன்றி : மதிமுக இணையதளம் -ஆசிரியர் செந்திலதிபன்)

நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இணைப்பு:

உர ஊழல் – சிறு குறிப்பு


%d bloggers like this: