வைத்தியா கேசவ அய்யரின் பசிதம்பரத்தின் ஊழல் மற்றும் சிதம்பர ரகசியம்

மே 26, 2017

தேடித் தேடிப் பார்த்தேன். எந்தப் பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை. டிவியிலும் கூட இல்லை. இது உண்மையா பொய்யா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் ப.சிக்குத் தெரியாத விஷயம் இல்லை. அவர் ஒரு வக்கீல். போதாதற்கு அவரின் மனைவியும் வக்கீல். இத்தனைச் சொத்துக்களுக்கு உரிமையாளர்கள் என்றால் அதையும் சட்டப்படிதான் செய்திருப்பார்கள். இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் வரக்காரணம் கேசவ அய்யர் என்ற வார்த்தைகள் தான். ஏதோ ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் அந்த கட்டுரையைப் படித்து விடுங்கள். இது அத்தனையும் உண்மையாக இருந்தால் அப்பப்பா?

http://postcard.news/p-chidambaram-biggest-corrupt-man-india-ever-saw-will-shocked-know-amount-looted/

அடுத்து சிதம்பர ரகசியம் என்றொரு தலைப்பில் வெளியான கட்டுரை கீழே.

https://www.pgurus.com/chidambara-rahasya-details-of-huge-secret-assets-foreign-bank-accounts-of-chidambaram-family/


மந்தாகினியும் மசரெட்டியும்

மே 23, 2017

மசுரு ரெட்டி என்று எழுத வேண்டியதை மசரெட்டி என்று எழுதி இருக்கிறார் என்று நினைக்காதீர்கள். சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கஸ்டம் பில்டு காரின் பெயர் தான் மசரெட்டி. சொகுசுக்கார். உள்ளே கொஞ்சம் கூட உறுமல் சத்தம் கூட கேட்காத, அதிராத கார். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து தரப்படுபவை இவைகள். உலகின் அதி பணக்காரர்கள் என்பதை விட பெண்களின் மீதும், உணவின் மீதும்,
வித்தியாசமான வாழ்க்கையின்மீதும் அதீத பற்றுக் கொண்ட ரசனையாளர்களின் தேர்வு தான் மசரெட்டி கார். உல்லாச உலகம் சாலையில் வலம் வருவது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு சிலர் தன் பிறந்த நாளைக் காரின் எண்ணாக வைப்பர். அதாவது எனது பிறந்த நாளான 4.7.1986ஐ 4786 என்று வைக்கலாம். தங்கள் வைத்திருக்கும் காரினைக் கூட தன் ஆளுமைக்குள் வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட ரசனையான மனிதர்கள் உலகில் அனேகம்.

பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. பிச்சைக்காரன் கூட சம்பாதிக்கிறான். ஆனால் வாழத் தெரிய வேண்டும். அதன் தாத்பரியம் தெரிய வேண்டும். நம்ம குஞ்சு இருக்கின்றானே, அவன் அப்படித்தான். ஹோட்டலில் வேலை செய்வான், திடீரென்று ஃபார்ச்சூனர் காணாமல் போய் இருக்கும். போன் செய்தால் கூட பேசமாட்டான். அவன் யார் கூடப் பேசிக் கொண்டிருப்பான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சமீபத்தில் தினமலர் வாரமலரில் அந்துமணி ஒரு காரின் முன்பு நிற்பது போன்ற புகைப்படத்தினைப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

நன்றி : வாரமலர், தினமலர், அந்துமணி

மேலே இருக்கும் கார் தான் மசரெட்டி கார். குட்டிப்பையன் சூப்பரா இருக்கான் பாருங்க. சினிமா ஹீரோவாக ஆகலாம்.

– அனாதி


%d bloggers like this: