ஊத்திக் கொடு கூட்டிக் கொடு திலக்கியவாதியாகு

குடிகாரனும் குஞ்சாமணியும் தரமணியின் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாரில் அமர்ந்திருந்தனர். குஞ்சாமணி சோகமாக இருந்தான். இன்றைக்கு அவன் பார்ட்டி தான். குஞ்சு கொஞ்சம் அதிகமாக செலவழிப்பான் என்பதால் நல்ல சரக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடிகாரனும் ஆஜர். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கவனமாகக் கேளுங்கள். இடையில் புகுந்து கலைத்து விட வேண்டாம். புரிகிறதா? – பஞ்சரு பலராமன்.

”ஏண்டா குஞ்சு சோகமாக இருக்கிறாய்?”

”ஒன்றும் சிக்க மாட்டேன் என்கிறதடா குடி”

”அப்படியா? அனாதி தான் இருக்கானே அவனைச் சுத்திக்கிட்டு கிடந்தா மாட்டுமே?”

”திடீரென்று சாமியார் மாதிரி இருக்காண்டா!”

”ஆமாடா ஆடும் வரைக்கும் ஆடுறானுவ, ஆடி முடிஞ்சப்பறம் நானொரு சித்தருன்றானுவ”

”ஒரு வாரமா புது வேலையே கிடைக்கலடா?”

”யாருக்கு உனக்கா? உன் அதுக்கா?”

முறைத்தான் குஞ்சு.

”சரி சரி முறைக்காதே, உனக்கொரு வழி சொல்றேன் கேளு”

”சொல்லுடா!”

“நல்ல புளுத்தாளர்களா இரண்டு பேரைத் தேர்ந்தெடு. புப்ளிஷார்களில் இரண்டு பேரைத் தேர்ந்தெடு”

“சரி!”

“புளுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கு. படி, பொம்பளையப் பத்தி எழுதின பத்திகளை கோடி காட்டி மெயில் அனுப்பு. புளுத்தாளர்களுக்கு சிடிக்களை வாங்கிக் கொடு. முடிஞ்சா அவர்களைச் சந்திக்கும் போது கையோடு ஏதோ ஒரு அந்தமாதிரி டிக்கெட்டுக்கு மாடர்ன் டிரஸ் மாட்டி கையோடு கூட்டிக்கிட்டு போய், கவிதாயினி கலாரசிகை, முற்றும் திறந்த எண்ணமுள்ளவள் என்றுச் சொல்லி அறிமுகப்படுத்தி விடு”

“சரி! சீக்கிரமா சொல்லித்தொலைடா, அது எங்கே ஓடிப்போயிடுமா?”

“ஆவ்… எனக்குச் சரக்குப் போட்டாத்தாண்டா பேசவே வரும்”

“சொல்லித்தொலைடா”

”யாராவது ஒரு அல்லக்கையை வைத்து போனியாகாத எதையாவது எழுதிக் கொடு, அந்த புளுத்தாளர்களே ஆஹா ஓஹோ என்று பாராட்டி எழுதுவார்கள். அடுத்து புண்டிச்சேரியில் புட்டி, குட்டி பார்ட்டி கொடு. அவ்வப்போது புதுசு புதுசா குட்டிகளோடு போய் சொரிஞ்சு விடு”

“சொரிஞ்சு விட்டா????”

“புளுத்தாளர்கள் தான் புதிய புளுத்தாளர்களை தங்களது தளத்தில் அறிமுகப்படுத்தி விடுவார்களே. அதைப்போல நீ வாந்தி எடுத்தாலும் அதில் இலக்கியமிருக்கிறது என்று புளகாங்கிதப்பட்டு பாராட்டித்தள்ளுவார்கள். டிவி ஷோக்களுக்கு கூட்டிப் போவார்கள். டிவியில் பேசலாம். குண்டனி உன்னை ஹீரோவாக்கூட போடுவார். டோபி உனக்கொரு கோட்டு மாட்டி பேசவிடுவார். புளுத்தாளர்களைச் சந்தித்த அடுத்த நாளில் புப்ளிஷர்களையும் இதே மாதிரி சந்தித்து விடு. புதுப்புது சிடிக்களும் (சிட்டுக்கள்), ஆடி (ஆண்டிகளைத்தான் ஆடிக்கள் என்கிறேன்) க்களும் உனக்கு மெயில் அனுப்புவார்கள்.”

“ஓவ்!”

“நீ என்ன எழுதிக் கொடுத்தாலும் புத்தகமாய் போடுவார்கள் புப்ளிஷர்கள். விழா எடுப்பார்கள், அதற்கும் நீயே செலவு செய். இலக்கியத்தில் சொரிந்து சுகம் காணும் ஆடிக்களும், சிடிக்களையும் சந்திக்கலாம். முற்றிலும் திறந்த ஓப்பனாக திரியும் சிடிக்களும், ஆடிக்களும் இலவசமாய் இலக்கிய பரிவர்த்தனைகளுக்கு வருவார்கள்”

”வந்தால்????” இளித்துக் கொண்டே கேட்டான் குஞ்சு.

“குஞ்சுப்பயலே, உனக்கு வேட்டைதானடா!”

”சூப்புர மேட்டரா இருக்கேடா குடிகாரா?”

“என்ன சூப்புர மேட்டரா?”

“சூப்பரான மேட்டரா இருக்கேன்னு சொன்னேண்டா, அதுக்குள்ளே மப்பு ஏறிடுச்சா?”

“டேய் குஞ்சு?? ஹிக்கி…! ஹிக்கி…! உனக்கு எது புடிக்குமோ அதைச் சொல்றே….”

”விரைவாக ஆரம்பிக்கணும்டா, பரபரன்னு இருக்கு”

“குஞ்சு, ஒன்றை மறந்து விடாதே, இந்த மேட்டரில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. உனக்கு அறிமுகமான ஓப்பன் சிடிக்களையும், ஆடிக்களையும் நீ புளுத்தாளர்களுக்கும், புப்ளிஷர்களுக்கும் எக்சேஞ்ச் பண்ணிக்கிடனும். அதே மாதிரி அவர்களும் எக்சேஞ்ச் பண்ணிக்குவாங்க. கூட்டிப் பார்த்தா கணக்கு டபுள் த பிளஸ்ஸில் வரும், புரியுதாடா?”

“புரிஞ்சிடுச்சி. ஊத்திக் கொடுக்கணும், கூட்டிக் கொடுக்கணும், திலக்கியவாதியாகனும், சரியாடா குடி?”

“சரியே தாண்டா குஞ்சு”

மட்டையானான் குடிகாரன். எழுந்து கையோடு அணைத்து தூக்கிக் கொண்டுபோய் தனது ஃபார்ச்சூனரில் படுக்க வைத்து காரை உசுப்பினான் குஞ்சு.

இது ஒரு குறுங்கதை. வேண்டுமென்றால் விஷக்கதை என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். தலைப்பு கூட உங்களுக்குப் பிடித்தா மாதிரி வைத்துக்கொள்ளுங்கள்.  அதுவும் உங்கள் விருப்பம். அப்புறம் இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.

இந்தச் சிறுகதை எப்படி இருக்கிறது என மெயில் அனுப்பி வையுங்கள். இல்லையென்றால் உங்கள் அதுவுக்கு ஒரு ஆபத்து வந்து விடும். சரியா???

– பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: