காவேரி பிரச்சினை தீர ஒரு வழி

ஒக்ரோபர் 3, 2016

பல காலங்கள், பல போராட்டங்களைக் கடந்து தனக்கான உரிமையை உச்ச நீதிமன்றத்தில் போராடிப் பெற்று வந்திருக்கும் தமிழக அரசு அதன் பலனைப் பெற முடியாமல் தவிக்கிறது. உச்ச நீதிமன்றமே உத்தரவு போட்ட பிறகும் கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்து பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றது. இதற்கு என்ன தான் வழி இருக்கிறது? உங்களுக்குத்தான் வித்தியாசமான ஐடியாக்கள் கிளம்புமே (அதுவல்ல) கொஞ்சம் சொல்லுங்களேன் – மதுமதி, டெல்லி

மது பெயரே போதையாக்குகிறது. டெல்லி வரும் போது சந்திக்கிறேன்.

இதற்கு ஒரு அருமையான வழி இருக்கிறது மது. சுப்ரீம் கோர்ட் தான் செயல்படுத்த வேண்டும். கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அல்லவா அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்கள் யார் என்று லிஸ்ட் எடுத்து வைத்துக் கொண்டு சட்டத்தை மீறியவர்கள் என்கிற முறையில் அனைத்து எம்.எல்.ஏக்களையும் நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிட தடையும், ஆட்சியைக் கலைக்க உத்தரவிட்டால் போதும். எந்த அரசியல்வாதியும் அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி நடக்க மாட்டார்கள்.

சுப்ரீம் கோர்ட் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. மக்களுக்காக ஆட்சியை இழந்தோம் என்ற பெயரெடுக்க முனைகிறது. இக்கட்டில் தள்ளி விட பிஜேபியும் முனைகிறது. ஆட்சிக் கலைப்போடு நிரந்தர தடையையும் விதித்தால் அடுத்த நொடி காவிரியில் தண்ணீரைத் திறந்து விட மாட்டார்களா?

சட்டத்திற்கு மீறிய எந்த ஒரு ஆட்சியும் இந்தியாவில் இருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட போர். புனிதமான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காதவர்களுக்கு தகுந்த தண்டனையையும் தர வேண்டும். மக்கள் பிரதிநிதி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்புக்கு சுத்தியல் அடி தான் தேவை.

– குஞ்சு.


%d bloggers like this: