ஜக்கி என்கிற புத்திசாலி

ஓகஸ்ட் 10, 2016

எனது நண்பர் சொல்வார் ‘கடவுள் யாருக்கும் எதுவும் செய்வதில்லை’ என்று. ‘என்ன இப்படிச் சொல்கின்றீர்கள்? கோவில்  கோவிலாக ஏறிக் கொண்டிருக்கின்றார்களே மக்கள்?’ என்றால் ’அது வேற சமாச்சாரம்’ என்பார். மக்கள் கோவிலுக்குள் வந்து செல்ல வேண்டும் என்பது தான் நோக்கமே ஒழிய வேறு காரணம் இல்லை என்பார் அவர்.

கடவுள் மனிதனைப் படைத்தான் என்கிறார்கள். நாத்திகர்கள் மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பார்கள். எது உண்மை எது பொய் என்பது தெரியவில்லை. ஆனால் கீழே இருக்கும் ஜக்கி வாசுதேவின் வீடியோ உங்களுக்கு பல கதைகள் சொல்லும். யார் புத்திசாலி யார் ஏமாளி என்கிற கேள்விக்கு ஜக்கி சொல்லும் பதில் தான் அவர் காட்டும் இந்த வீடியோ. மக்களை மாக்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?

ஜக்கி படைத்த லிங்க பைரவி ”சாமியை” பாருங்கள். திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். காடுகளில் இருக்கும் காட்டுவாசிகள் தங்கள் சாமியை எப்படி வழிபடுவார்கள் என்று.

திருவிழாக்களில் உன்மத்தம் ஏற்படக்கூடிய இசையை இசைப்பார்கள். சாவு வீட்டிலும் அதே இசை. அந்த உன்மத்த இசை தானாகவே உடலை ஆட வைக்கும். எதை எங்கு எப்படி செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்தவர் ஜக்கி வாசுதேவ் அவர்கள்.

எத்தனை ஆயிரம் கோடிகள் வீணாகப் போனதோ? எத்தனை ஆயிரம் மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டதோ? எல்லாவற்றுக்கும் கடவுள் ஒரு காரணம் என்கிற விஷயம்தான் கொடுமையானது.

– அனாதி


மலேசியதமிழர்களே ஜாக்கிரதை

ஓகஸ்ட் 5, 2016

உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழர்களை விடாது அடித்து துரத்திட ஒரு நுண்ணரசியல் நடந்து கொண்டிருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் யாராவது ஒரு தமிழர் இருப்பார். அப்படி வசிக்கும் தமிழர்களை அடித்து துரத்திட பலர் முனைந்துள்ளனர் என்று விஷயம் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

தமிழர்களை அவர்களின் கலாச்சாரத்தை முற்றிலுமாக சீரழித்து சின்னாபின்னமாக்கிட பலர் ஒன்றினைந்து அதற்கான முன்னீடுகளை எடுக்கின்றார்கள் என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.

சினிமா உலக மக்களை ஒரு நூலில் பிணைத்து விடுகிறது. அப்படிப்பட்ட சினிமாவில் பல நுண்ணரசியலை வைத்து தங்கள் நோக்கம் நிறைவேற ஒரு கூட்டம் பெரும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா தமிழர்களை கொன்றொழித்து விட்டார்கள். இனி ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தமிழர்களையும் கொன்றொழித்து விட்டால் தமிழர் என்ற இனமே இல்லாது போய் விடுமே என்று தான் அபத்தங்கள் சினிமாவாக வருகின்றன.

பாவம் தமிழர்கள்.

– அனாதி


%d bloggers like this: