தீர்க்கதரிசியா நீங்கள்?

ஜூலை 26, 2016

அனாதிக் குழும நண்பர்களுக்கு நம்ஸ்காரம். எனது பிரியத்துக்குரிய குஞ்சாமணி அவர்கள் மே 2 அன்று களவாணிடா என்றொரு குட்டியூண்டு பதிவை எழுதி இருந்தார். எனக்கொன்றும் புரியவில்லை. இப்போதல்லவா தெரிந்து இருக்கிறது. குஞ்சு உண்மையில் வித்தியாசமானவர் தான்.

அந்தக் குஞ்சாமணியை எப்போது பார்க்கலாம் என்று ஆவலுடன் தகித்துக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவிலிருந்து விலாசினி சுகுமார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&

விலாசினி அனாதி நினைத்தால் நானும் அவன் கூட அமெரிக்கா வந்து விடுகிறேன். உங்கள் தகிப்பைத் தணித்து விடலாம்.

எங்கள் குழுவிற்கு அந்த அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். தர்மம், மனசாட்சி, நீதி, நேர்மை எல்லாவற்றிற்கும் கட்டுப்படாதவர் அவர். அவரின் நோக்கம் பணம் மட்டுமே. ஆகவே மேலும் எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். புள்ளி தான் வைக்க முடியும். கோட்டினை நீங்கள் தான் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆமா சுகுமார் என்பது யார்??? குழப்பமாக இருக்கிறது. என்னைக் குழப்ப வேண்டுமென்பதற்காகத்தான் இப்படி பெயரை இணைக்கின்றீர்களா?

விலாசினி பெயரே ரகளையாக இருக்கிறதே? டேய் அனாதி ! கொஞ்சூண்டு மனசு வையேண்டா???

– குஞ்சு


கபாலி உண்மையில் கபாலிதான்

ஜூலை 25, 2016

கபாலின்னா அந்தக்கால சினிமாவில் வில்லனாகக் காட்டப்படுவான். அதேக் கபாலி தான் இன்றைக்கு வில்லனாக வந்து விட்டார் தன் ரசிகர்களுக்காக.

கபாலி தன் ரசிகர்களை வெச்சு செஞ்சுட்டாருன்னு பேசிக் கொள்கின்றார்கள். மலேசியாவில் 40 கோடி வருமானமாம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஏரியாவும் 13 கோடியிலிருந்து ஆரம்பமாம். அதுமட்டுமின்றி இன்னும்… தாணுவின் மார்கெட் தந்திரம் இது என்று சிலாகிக்கின்றார்கள் பலரும். பாவம் தாணு சார்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் கீழே.

கபாலி மோசடி

மிகப்பெரிய எதிர்பார்ப்பை செயற்கையாக உருவாக்கிக் கடந்த ஒரு வார காலமாக, ஊரெல்லாம் அதே பேச்சு என்பதாக “கபாலி’, “கபாலி’ என்று முழங்கிய ரஜினிகாந்தின் “கபாலி’ திரைப்படம், அதற்கு முந்தைய கோச்சடையான், லிங்கா வரிசையில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. திரைப்படம் வெற்றிப் படமா, தோல்விப் படமா என்பதல்ல பிரச்னை. ஒரு திரைப்படத்திற்கு இந்த

அளவுக்கான பரபரப்பும், அதிக அளவிலான கட்டணமும் சரியானதுதானா என்பதுதான் கேள்வி.

ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் “கபாலி ஜுரம்’ என்று வர்ணிக்கப்பட்டு வெளியான தகவல்கள் தலைசுற்றலை ஏற்படுத்தியது. இதற்கு முன் எந்தவொரு இந்தியத் திரைப்படத்திற்கும் இல்லாத

அளவிலான சமூக வலைதளங்களின் மூலமான பரப்புரைகளும், செய்திகளும் ஏதோ யுகப் புரட்சியோ, சினிமா சுனாமியோ ஏற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கின.

பெருநகரங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை சராசரி ரூ.600 என்று கூறப்படுகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக ரூ.1000 கொடுத்து “கபாலி’

திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தன. விளைவு? ஆரம்ப காலத்திலிருந்து முந்தைய நாள் இரவிலேயே வரிசையில் படுத்திருந்து, முதல் காட்சியைப் பார்த்து, கைதட்டி, விசிலடித்து சாதாரணமாக இருந்த ரஜினிகாந்தை “சூப்பர்

ஸ்டார்’ ரஜினிகாந்தாக மாற்றிய அடித்தட்டு அப்பாவி ரசிகனுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்புகூட மறுக்கப்பட்டது. ஏற்றிவிட்ட ஏணி எட்டி உதைக்கப்பட்டது!

ரூ.110 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அதன் தயாரிப்பாளர் “கலைப்புலி’ எஸ். தாணுவுக்குப் படம் வெளியாகும் முன்பே ரூ.223 கோடியை சம்பாதித்துக் கொடுத்து விட்ட

தாகப் பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “கபாலி’ திரைப்படத்திற்கு உருவாக்கப்பட்ட பரபரப்பையும் பரப்புரையையும் பார்க்கும்போது அந்த அளவிலான லாபத்தை ஈட்டித் தந்திருக்கக் கூடும் என்றுதான் தோன்றுகிறது.

கேரளத்தில் 306 தியேட்டர்களில் “கபாலி’ திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒரு தமிழ்த்

திரைப்படம் சீனம், மலாய், தாய், ஜப்பானிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் வெறும் 15% தியேட்டர்களை (அதிலும் கூடப் பெரும்பாலானவை கிராமப்புறத் திரையரங்குகள்) தவிர்த்து, ஏனைய தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்கள் “கபாலி’

திரைப்படத்தை மட்டும்தான் பார்த்தாக வேண்டும் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டது. நன்றாகவே வசூல் செய்து கொண்டிருந்த “அப்பா’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் “கபாலி’யை வெளியிடுவதற்காக

வலுக்கட்டாயமாகத் திரையரங்கிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட அவலம் (அயோக்கியத்தனம்) அரங்கேறியது.

இதெல்லாம் எதற்காக? அந்த அளவு கட்டணம் வசூலித்து, முதல் மூன்று நாள்களிலேயே போட்ட முதலை எடுத்துவிட வேண்டும் என்கிற தயாரிப்பாளரின் பேராசைதான் இதற்குக் காரணம். படம்

தோல்விப் படமாக அமைந்தாலும் தயாரிப்பாளர் தப்பித்துக் கொள்வார். தியேட்டர்காரர்களும், ரசிகர்களும்தான் ஏமாறுவார்கள். இது ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தைவிடப் பெரிய மோசடியாக அல்லவா இருக்கிறது?

எத்தனையோ எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள், ஏன் ரஜினி, கமல் படங்கள் கூட ஒரே நாளில் வெளியாகின. நல்ல திரைப்படம் வெற்றியடையும். நன்றாக இல்லையென்றால் தோல்வி அடையும். அதற்காக

அதிக விலைக்கு டிக்கெட் விற்பதோ, அந்த ஒரு திரைப்படத்தை மட்டுமே எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதையோ வழக்கமாகக் கொண்டிருக்கவில்லையே. இப்போது இது என்னபுதிய ஏமாற்று வேலை?

தியேட்டருக்குக் கட்டணம் என்பதுபோய், நடிகர்களைப் பொருத்தும், திரைப்படங்களைப் பொருத்தும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அவலம் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நடை

முறைக்கு வந்திருக்கிறது. “எந்திரன்’ திரைப்படத்திற்குப் பிறகுதான், இதுபோல அத்தனை திரையரங்குகளையும் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து திரைப்படத்தை ரிலீசாக்கிக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும், தோல்விப் படமாகவே இருந்தாலும் போட்ட முதலை எடுத்துவிடும் மோசமான வியாபார உத்தி நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட நடிகருக்குப் பெருமை சேர்க்காது; திரையுலகின்

ஆரோக்கியத்துக்கும் உதவாது.

50 நிறுவனங்களைக் கொண்ட டி.வி.எஸ். குழுமத்தில் 39,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஆண்டு பற்றுவரவு ரூ.42,000 கோடி. முருகப்பா குழுமத்தின் 28 நிறுவனங்களில் 32,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களது வருடாந்திர விற்று வரவு ரூ.26,000 கோடி. அமால்கமேஷன் குழுமத்தில் 47 நிறுவனங்களில் 50 தொழிற்சாலைகள், 15,000-க்கு அதிகமான தொழிலாளர்கள். ஆண்டு பற்றுவரவு ரூ.9,300 கோடி. அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத, அவர்களுக்கு முக்கியத்துவம் தராத ஊடகங்கள், “கபாலி’ போன்ற திரைப்படங்

களுக்கு, அதிகபட்சம் ரூ.1,000 கோடி புரளும், சினிமா துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமும் விளம்பரமும் தருகின்றனவே, இதற்குக் காரணம் என்ன? ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பதுதானே!

“கெட்ட பயடா இந்தக் கபாலி’ என்கிற வசனம் உண்மையிலும் உண்மை. அப்பாவி ரசிகர்களையும், மக்களையும் முட்டாளாக்கி, சம்பாதித்து விட்டார்களே!

http://www.dinamani.com/editorial/2016/07/23/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/article3543323.ece

 


கோடீஸ்வரர் ஆக எளிய முறை

ஜூலை 16, 2016

அன்பு நண்பர்களே,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பணத்தின் தேவை என்பது ஆளுக்குத் தகுந்தவாறு வேறுபடும். ஆளுக்கொரு வீடு, கார், நகை, வங்கியில் பணம், சொத்துக்கள், நல்ல தொழில் என்று இருந்தால் அவன் மகிழ்ச்சி. இதை அடைவதற்குத்தான் ஒவ்வொருவரும் கடின உழைப்பின் மூலம் முயல்கிறார்கள்.

ஒரு சிலருக்கு அந்த வெற்றி கிடைத்து விடுகிறது. பலருக்கு அது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

சொத்து வாங்க வேண்டுமா? அதிலொரு வீடு கட்ட வேண்டுமா? கார் வாங்கி நிறுத்த வேண்டுமா? சொந்தமாக தொழில் நடத்த சொத்து வாங்க வேண்டுமா? தொழில் மூலதனம் வட்டியில்லாமல் கிடைக்க வேண்டுமா? கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆக வேண்டுமா? வெளி நாட்டில் வேலை கிடைக்க வேண்டுமா? நோய்வாய்ப்பட்ட உடம்பு சரியாக வேண்டுமா? பிள்ளைபேறு வேண்டுமா? இன்னும் என்னென்ன தேவைகள் உண்டோ அனைத்து உங்களுக்கு எளிதில் கிடைத்து விடும்.

உழைக்க வேண்டாம், துன்பப்பட வேண்டாம். துயரப்பட வேண்டாம்.

அனைத்தும் வெகு எளிதில் வீடு தேடி வந்து விடும் என்றால் நினைத்துப் பாருங்கள்.

Forery

இந்தக் காயினின் மகத்துவத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தலைவரின் காயின் நமது பீரோவிற்குள் இருந்தால் போதும். அவர் எப்போதுமே நம் கூடவே இருப்பது போல. அவர் நம் அருகில் இருந்தாலே மேலே சொன்னவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்து விடுவோம் அல்லவா?  ஆகவே அனைவரும் மறந்து விடாமல் முத்தூட் பின்கார்ப் மூலம் வெளியாகும் கபாலி காயினை மறக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கபாலி மலேசிய தமிழர்களைக் காப்பாற்றுவது போல நம் அனாதி தளத்தின் வாசகர்களையும் காப்பாற்றி விடுவார்.

– ப்ரியங்களுடன் உங்கள் குஞ்சு


அக்கிரமங்கள் செய்யும் மீடியாக்கள்

ஜூலை 4, 2016

வட நாட்டில் இருந்து ஒளிபரப்பப்படும் மீடியாக்களைப் போன்று தமிழகத்திலும் இப்போது மீடியாக்களின் ஆட்டம் ஓவரோ ஓவர்.

சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நாயகன் சசிகுமார் பஸ்ஸில் வரும் நாயகியுடன் நடத்தும் காட்சிகளைக் காணும் எந்த ஒரு விடலைப்பையனும் அதே காரியத்தை தானும் செய்வான். இந்தப் படத்தில் நாயகியை முறை வைத்து விடாது துரத்து துரத்து என்று துரத்துவார்கள்.

காரணம் இன்றி காரியம் இல்லை.

காரணம் எதுவோ அதைப் பற்றி மீடியாக்கள் பேசுவதே இல்லை.

நொடிக்கு நொடி செய்திகள், முழு கவரேஜுகள் என்று தமிழ் மீடியாக்களின் அகோரபசி கண்டு மனது வெறுத்து விட்டது.

பல அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கும் உலகில் இது ஒன்று தானா செய்தி?

விவாதத்தில் ஒரு கட்சிக்காரர் ஒரு சமூக அமைப்பைச் சார்ந்தவரை கையை நீட்டிப் பேசாதே என்கிறார். இன்னொருவர் மக்கள் பிரதிநிதி என்றுச் சொல்லிக் கொள்கிறார் என்று கிண்டலடிக்கிறார் ஹரிஹரன்.

பணம் இருந்து டிவி ஆரம்பித்து விட்டால் மக்கள் பிரதி தி ஆகி விடுகின்றார்கள். சாதரணன் ஒரு அமைப்பு வைத்திருந்தால் அவன் மக்கள் பிரதி நிதி இல்லையாம். என்ன ஒரு நக்கல் தெரியுமா இது?

அயோக்கத்தனத்தினை அசராமல் செய்து வருகின்றன மீடியாக்கள்.

– அனாதி


%d bloggers like this: