ராபர்ட் வதேரா பிஜேபி அரசு

தினமலரில் வெளிவந்த செய்தி தான் இது. பிஜேபி அரசு மக்களை திசை திருப்புவதற்கு இப்படிப்பட்டச் செய்திகளை வெளியிட்டு மீடியாக்களை பரபரப்பாக்க வைத்திருக்கச் செய்யும் ஒரு ஜால வித்தைச் செய்தி இது. மக்களை முட்டாளாக்க வைத்திருப்பதுதான் அரசியலில் முக்கியமானது. அதை காங்கிரஸ் அரசும், பிஜேபி அரசும் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றன.

இந்தச் செய்தியால் ராபர்ட் வதேராவின் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது. இதுதான் இந்தச் செய்தி சொல்லும் உண்மை. அனாதி பிளாக்கின் வாசகர்கள் செய்தியின் மூலம் மறைக்கப்பட்ட உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட பதிவுகளை எழுதுகிறோம்.

– அனாதி

இனி தினமலர் செய்தி :

லண்டனில், ‘பினாமி’ பெயரில் இருந்த கட்டடத்தை சீரமைப்பதில், ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரியுடன், காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு, ரகசிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா. இவரது கணவர் ராபர்ட் வாத்ரா. மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஹரியானாவில் இவர், பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த, ஹரியானாவில் உள்ள, மனோகர்லால்

கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், ஆயுத விற்பனையாளர் ஒருவருக்கும், ராபர்ட் வாத்ராவுக்கும் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.’ஆப்சன் இந்தியாசொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில், ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை சஞ்சய் பண்டாரி நடத்தி வந்தார். ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனையில் மோசடி நடப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து, கடந்த 2014ல், மத்தியில் பொறுப்பேற்ற மோடி அரசு, பண்டாரியுடன் ஆயுத வர்த்தகம் எதுவும் செய்ய வேண்டாம் என, ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், பண்டாரிக்கு சொந்தமான, 18 இடங்களில், அமலாக்கத் துறை, ஒரே நேரத்தில், கடந்த மாதம் சோதனை நடத்திமுக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
அப்போது, பண்டாரிக்கும் ராபர்ட் வாத்ராவுக்கும் உள்ள ரகசிய தொடர்பை, அமலாக்கத் றை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.லண்டனில், 2009ல், 19 கோடி ரூபாய்க்கு கட்டடம் ஒன்றை, பினாமி பெயரில் ராபர்ட் வாத்ரா வாங்கியதாகவும், அதை புதுப்பித்து விற்க அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வாத்ரா, புதுப்பிக்கும் பணியை பண்டாரியிடம் ஒப்படைத்து, 2010ல், அந்த கட்டடத்தை அவர் விற்றுள்ளார். இது தொடர்பாக, பண்டாரி – ராபர்ட் வாத்ரா மற்றும் அவரது உதவியாளர் இடையே, இ – மெயிலில் பல தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க அமலாக்ககத் துறை முடிவு செய்துள்ளது.

/////////////////////////////////////////////////////

மேலே உள்ள செய்திக்கு ஒருவர் வெளியிட்ட பின்னூட்டம் இது:-

அன்பு– தஞ்சை,இந்தியா :

காங்கிரஸ் கட்சியை கட்டுபாட்டில் வைத்துள்ள ஐரோப்பிய குடும்பத்தினருக்கும், அவர்களுக்கு கங்காணி வேலை செய்து வரும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் பலரும், ஐரோப்பாவில் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. அதில் லண்டன் தான் அவர்களின் பிரதான இடம். கட்சியை கட்டுபாட்டில் வைத்து இருக்கும் ஐரோப்பிய குடும்பத்தினருக்கு லண்டனில் சொத்துகள் இருப்பதை பற்றி நான் ஒருபோதும் ஆச்சரியபட்டதில்லை. ஏனனில், அவர்கள், அதை தான் பிறப்பிடமாக கருதி வந்தனர். ஆனால், அவர்களுக்கு கங்காணி வேலை செய்து வந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களும், லண்டனில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது. ஏதோ தங்களுக்கு தாங்களே, இந்த கங்காணிகள் தங்களை பிரிட்டிஷ் காரர்களாக நினைத்து கொண்டு, லண்டனில் சொத்துகளை வாங்கி குவித்து இருப்பது வியப்பிலும் வியப்பு. இந்த கங்கானிகளுக்கு, தங்களின் முகத்தை கண்ணாடியில் பார்க்கவில்லை போலும். எப்போதும், ஐரோப்பிய குடும்பத்தினரின் காலடியில் ஒரு நாய்க்குட்டியை போன்று படுத்து கிடப்பதால், தங்களையும் இந்த நாய்குட்டிகள், ஐரோப்பியர்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும். ராபர்ட் வாத்ராவின் புகழ் கொடி கட்டி பறக்கிறது. ராபர்ட் வாத்ராவின் ஏழ்மை நிலையை போக்க, ஹரியானா காங்கிரஸ் அரசு இலவசமாக கொடுத்த 64 கோடி ரூபாய் நிலத்தை, ஊர்ஜிதம் செய்ய மறுத்த IAS ஆபிசர் அசோக் கேம்காவிற்கு, அடுத்த நாள் காலை, ஏழு மணிக்கே, அவரின் வீட்டிற்கே சஷ்பெண்ட் மனு அனுப்பட்டு, அவர் ஆபிசுக்கு கூட வரமுடியாதவாறு செய்யபட்டார். ராபர்ட் வாதறா cwg ஊழல்கள் செய்வதற்காக, சுரேஷ் கல்மாடி என்ற நாய்க்குட்டி பலி வாங்கப்பட்டது. பதினாறாயிரம் கோடியில் செய்து முடிப்போம் என்று சொல்லப்பட்ட காமன் வெல்த் கேம்ஸ் முப்பதாயிரம் என்று உயர்த்தப்பட்டு, பின்னர், அதுவும் பத்தாமல், 56000 கோடி என்று உயர்த்தப்பட்டு, பின்னர் அதுவும் பத்தாமல், ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஒரு டாய்லெட் பேப்பர் ரோல் நாலாயிரம் ரூபாய் என்று வாங்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் ஓடுவதற்காக திரெட் மில் நாற்பத்தைந்து நாள் வாடகை பதினைந்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த திரெட் மில்லின் விலையே பத்து லட்சம் ரூபாய் தான். ஆனால் நாற்பத்தைந்து நாளின் வாடகை ரூபாய் 15 லட்சம் ரூபாய். ஒவ்வொரு சேர்களும் 45 நாள் வாடகை, சாதரான மனிதன் முழிபிதுங்கி வியக்கும் அளவிற்கு சொல்லப்பட்டது. நீச்சல் போட்டியின் அறை அமைக்கப்பட்ட விலை, ஆச்சரியபடதக்கதாக இருக்கிறது என்று ஜட்ஜ் சொன்னார். இருந்தும், இளவரசர் ராபர்ட் வெளியேதான் உலாவுகிறார். cwg காண்ட்ராக்ட்கள் எழுபது சதிவிதம் ராபர்ட் வாத்ராவின் பினாமிகளுக்கே கொடுக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: