பெரியமனிதர்களின் ரகசியக் கல்யாணங்கள்

சென்னையில் குடி, குட்டி, சாப்பாடு இதைத்தவிர வேறு ஏதும் பொழுது போக்கும் அம்சங்கள் இல்லை. சினிமாவோ குண்டியாட்டிகளின் ஒரே மாதிரியான ஆட்டங்களையும், கிழட்டு ஹீரோக்கள் இளம் கதா நாயகிகளை புணர நடிப்பதையும் கண்டு வெறுத்துப் போய்விட்டது.

சென்னையின் மிக உயர்ந்த பாரில் நானும் அனாதியும் அமர்ந்திருந்தோம். அருகிலிருந்து ஒரு டேபிளில் கரை வேட்டிக் கூட்டமொன்று அமர்ந்திருந்தது. அவர்களின் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்குத் தலை சுற்றியது.

தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அண்ணன் புதியதாக ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாராம். அந்தப் பெண்ணுடன் இவர் ஒரு மாதம் குடும்பம் நடத்துவாராம். அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்று ஜோசியக்காரர்கள் சொல்லிய பிறகுதான் கல்யாணம் செய்து கொண்டாராம். இப்போது அவர் எம்.எல்.ஏவாம்.

இதுதான் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த செய்தி. உண்மையா பொய்யா என்பதெல்லாம் தெரியவில்லை.

அமைதிப்படையில் நாகராஜ சோழனின் கதை தான் இதுவோ என்று நினைத்தேன். நடக்காத சம்பவத்தையா திரைப்படத்தில் காட்டப்போகின்றார்கள் என்றான் அனாதி.

எனக்கு எரிச்சல் ஏற்பட்டதால் எழுந்து வந்து விட்டேன். பணமும், பதவியும், அதிகாரமும் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது என்பதை நினைக்கும் போது, மனிதன் அணுகுண்டை விட அதிபயங்கர மிருகம் என்றே நினைக்கத் தோன்றியது. பாவம் அந்த இளம் பெண். யார் பெற்ற பெண்ணோ? அந்தப் பெண்ணுக்கு என்னென்ன கனவுகள் இருந்தனவோ? அவளின் நிலையை நினைத்து என்னால் அந்த இரவு தூங்கக் கூட முடியவில்லை. மனது பாரம் தாங்காமல் கண்களில் கண்ணீர் துளிர்த்து நின்றது.

அந்தப் பெண் எதற்காக இந்த ஒரு முடிவிற்கு ஒப்புக் கொண்டாளோ தெரியவில்லை. அவளின் சூழல் எப்படி இருந்ததோ தெரியவில்லை. அவளுக்காக எனது கண்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.

– குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: