தெறித்துப் போன தெறி

p12

ஊரெல்லாம் விஜய் படம் ஆஹோ ஓஹோ ரக விளம்பரங்கள். ஆனால் தியேட்டர்களோ ஈ ஓட்டுகின்றன.

தாணுவின் அலட்டலுக்குச் சரியான அடியைக் கொடுத்திருக்கிறது இந்தத் தெறி.

இனிமேலும் தமிழ் மக்களை முட்டாளாக்கவே வைத்திருக்க முடியாது.

பெரிய நடிகர்களுக்கு கோடியில் பணத்தைக் கொடுத்து மக்களிடம் கொள்ளை அடிப்பதில் ஒரு சில தயாரிப்பாளர்கள் மிகவும் தேர்ந்தவர்கள். கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களை இவர்களே காசைக் கொடுத்து நடத்துவார்கள். பத்திரிக்கைகள் பலவும் இதற்கு உடந்தை. நடிகரைப் பிராண்டாக்கி அவர்களுக்கு பத்து பர்செண்டேஜ் என்றால் இந்த வகை தயாரிப்பாளர்களுக்கு 90 பர்செண்டேஜ் லாபம் பார்ப்பது. இனி எதுவும் நடக்காது.

தகுதியும் தரமும் வாய்ந்த படமே ஜெயிக்கும்.

அரை மணி நேரம் தியேட்டருக்குள் உட்காரமுடியவில்லை. அட்லி நீங்கள் இனிமேல் இட்லி விக்கப் போகலாம். காலிப்பெருங்காய டப்பா நீங்கள்.

விஜய் அவர் தகப்பனாரால் உருவாக்கப்பட்ட புனைவு. அவருக்கு நடிக்கவே தெரியாது. ஆடவும் தெரியாது. ஒரே டெம்ப்ளேட் ஆட்டம். ராகவா லாரன்ஸைப் பாருங்கள். அவரின் ஒவ்வொரு படத்தின் பாடலிலும் கதா நாயகியுடன் அவர் ஆடும் ஆட்டங்கள் ஆஹா ஓஹோ ரகம்.

இந்தப் பாடல்களைப் பாருங்கள் விஜய். எப்படி இருக்கிறது? இப்படி முயற்சி செய்யுங்கள்.

எமி ஜாக்சன் எயிட்ஸ் வந்தவர் போல இருக்கிறார். சமந்தாவோ சர்க்கரை வியாதி வந்தவர் போல இருக்கிறார். தெறியின் கதையோ கேவலம். காட்சியாக்கமோ படுகேவலம்.

தமிழ் சினிமாவுக்கு நயன் தாரா, சமந்தா, எமி போன்ற வறட்டுக் கிழவிகளைத் தவிர வேறு நடிகைகள் இல்லாமல் போனது அய்யகோ தமிழ் சினிமா.

தெறித்து விட்டது தெறி. தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயமாகத் தப்பித்து விட்டார்கள் என்கிறது ஒரு சினிமாக் குருவி.

– குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: