குஞ்சுவுக்காக காத்திருக்கும் அவனது காதலி

மார்ச் 3, 2016

”உனக்காக காத்திருப்பது என்ன ஒரு வேதனை என்று தெரியுமா குஞ்சு?” என்று கேட்ட எனது காதலியே !

Kunju Lover

உன் விழி வழியே வழிந்தோடும் காதலில் மூழ்கி மூச்சடைத்து, உன்னோடு கலந்து விட ஓடோடி வந்து கொண்டிருக்கின்றேன் என் ஜீவனே !

காற்றினூடே கலந்து தேடியலையும் என் உயிர் மூச்சு உன்னை நான் சரணடைவதற்குள், உன்னைத் தேடி வந்தடையும் என் அன்பே !

உன் வெது வெதுப்பான கைகளுக்குள் என் மூச்சைப் பிடித்து வைத்துக் கொள் தேவதையே! இல்லையென்றால் உன்னைக் காண இயலாமல் பதைபதைக்கும் என் நெஞ்சம் போல துடித்து துவண்டு போகுமென் அன்பே!

இதோ ஓடிக் கொண்டேயிருக்கிறேன் அன்பே உன்னைக் காண்பதற்கு! என் கண்களுக்குள் காட்சியாய் உன் உருவம் மட்டுமே தெரிகிறது அன்பே! கால்களில் முட்கள் குத்திக் கிழிக்கின்றன அன்பே! இரத்தம் கொப்பளிக்க வழிந்தோடும் துளிகளுடன் விடாது உன் அன்பெனும் உயிரோடு காற்றோடு காற்றாய் விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் அன்பே! உன் சோகப் பார்வை என்னைக் கொல்கிறது அன்பே!

ஓடி வந்து கொண்டிருக்கிறேன் அன்பே !

அது வரை காத்திருடா செல்லம் !

Kiss Art

– உன் பிரிய காதலன் குஞ்சாமணி என்கிற குலசேகரன்


%d bloggers like this: