பிரசாந்த் கிஷோர் ஸ்டாலின் அதிமுக அரசு விகடன் ஜாக்கிரதை

விகடனில் வெளியான கட்டுரையில் ஒரு பத்தி கீழே,

“ஸ்டாலின் பிரசாரத்தின் பின்னால் இருந்து வடிவமைப்பவர் அவரது மருமகன் சபரீசன். டிஜிட்டல் தளத்திலும் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர்தான் பிரசாந்த் கிஷோரை சமீபத்தில் போய் சந்தித்திருக்கிறார் என தகவல்கள் கசிகின்றன. இந்த சந்திப்பு பற்றி அறிந்தவர்களிடம் பேசினோம். ‘‘தமிழகத்தின் அரசியல் சூழல்,  வயது வாரியான வாக்காளர் களின் டெமோ கிராஃபிக்ஸ், தொகுதிகள், பாலின விவரங்கள் என பல கேள்விகளையும், தகவல் களையும் பிரசாந்த் கிஷோர் கேட்டிருக்கிறார். பிறகு அவரே கம்ப்யூட்டரைத் தட்டி தமிழகத்தின் புள்ளிவிவரங்களைச் சொல்லியிருக்கிறார். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியாக பிரசாந்த்துடன் பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கான செலவும் பிரசாந்த் கிஷோரின்  நிறுவனத்துக்கான கட்டணமும் பேசி முடிக்கப்பட்டு விட்டது’’ என்கிறார்கள்.” ( நன்றி : விகடன்)

இந்த பிரசாந்த் கிஷோர் தான் மோடி மற்றும் நிதீஷ்குமார் தேர்தலில் பின்புலமாக இயங்கியவர் என்றும் விகடனில் கட்டுரை வந்திருக்கிறது.

சமீபகாலமாக விகடனில் அதிமுக எதிர்ப்பு விஷயங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதன் சூத்திரதாரி யார் என்று அதிமுகவினர் கண்டுபிடிக்க வேண்டும்.

இயற்கை விதி ஸ்டாலினுக்கு எதிராய் இருக்கிறது. வரக்கூடிய தேர்தலில் பல வித எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம் என்று தோன்றுகிறது.

திமுகவை விட அதிமுக எவ்வளவோ பரவாயில்லை ரகம் என்பதை யாரும் மறந்து விட மாட்டார்கள்.

நில அபகரிப்புக்கென்று தனியாக காவல்துறையினரையும், நீதிமன்றத்தினையும் அதிமுக அரசு உருவாக்கியதை எவரும் எந்தக் காலத்திலும் மறந்து விடக்கூடாது.

இருப்பினும் அதிமுக வட்டாரங்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. டிவி மீடியாக்களையும், ஆன்லைன் மீடியாக்களையும் வெகு கவனமாக கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

– பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: