ரிவீல் – ரீடெயில் ஹோல்சேல்

ஒக்ரோபர் 19, 2015

”பெரியவா அழைக்கிறார்!”

மூன்று நண்பர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது டவாலி சொன்னதைக் கேட்டு ஒருவர் மாத்திரம் விடுக்கென எழுந்து ஓடினார்.

ஓட ஓட ஒரு செருப்பு கழன்றது. இன்னொன்றையும் உதறி வீசி விட்டு உள்ளே சென்றார்.

”என்னய்யா, அதுக்கு எவ்ளோ ஆச்சு?” என்றார் பெரியவா.

“ நூறு தானுங்க”

”அப்போ இது என்னய்யா?”

வியர்த்து விறு விறுத்து நின்றார் பஸ் விட்ட அடச்சே கிஸ் விட்ட கோமான்.

“ஏய்யா, கேக்குறவன் கேனய்யனு நினைச்சியா. இந்தா அந்தப் புள்ள பேருக்கு பாதிய எழுதி வெச்சுடு. என்னாய்யா சொல்றே?”

“சரிங்க” சிரிக்க முடியாமல் சிரித்தார் கோபுரம் கட்டி அழகு பார்த்த கோமான்.

நண்பர்களிடம் வந்தார்.

கண்களாலே என்னாச்சுன்னு கேட்டார்கள் இருவரும்.

”நாமெல்லாம் ரீட்டெய்ல் விக்கிற கூதிய அவன் ஹோல் சேல்ல விக்கிறான்யா”

மூவரிடமும் மூச்சு பேச்சில்லை.

(யாருன்னு தெரியுதா நண்பர்களே!”

– பஞ்சர் பலராமன்

 


ஏன் இவ்வளவு கோபம்?

ஒக்ரோபர் 16, 2015

பனிரெண்டு வருடமாக ஒரு சங்கத்துக்கு தேர்தல் ஏன் நடத்தவில்லை என்கிற கேள்விக்கு சரத் என்ன பதில் சொல்வார்? இவர் பனிரெண்டு வருடமாக தலைவராக இருந்தது போதாதா? – இப்படி கேட்கிறார் ஒரு பொது ஜனம்.

இன்றைக்கு டிவியில் சரத்குமாரின்  மச்சான் சக நடிகர்களை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். ஏனென்றுதான் தெரியவில்லை? என்ன காரணம் இருக்க முடியும்? ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன??

இதோ வடிவேலுவின் பேட்டி:

“நடிகர் சங்கத் தேர்தலில் சாதியையும், பணபலத்தையும் விஷால் அணி இறக்கிவிடுவதாக சரத்குமார் அணியினர் சொல்கிறார்களே?’’

“நடிகர்களுக்கு சாதி, மதம், மொழி வித்தியாசம் எல்லாம் கிடையாது. அன்று ராதிகா பேசினப்போ, விஷால் ரெட்டி, விஷால் ரெட்டினு சொன்னாங்க. அவங்கதானே சாதியைக் கொண்டு வர்றாங்க. அவங்க அருகில் உட்கார்ந்திருக்கும் ஊர்வசி யாரு? அவங்களை ஊர்வசி சேச்சி, ஊர்வசி சேச்சினு சொல்ல வேண்டியதுதானே? இத்தனை வருஷங்களாக ஒரே ஆள்தான் பதவியில் இருக்கணுமா? புதுசா யாரும் வரக்கூடாதா? நாசர் ரொம்ப நல்ல மனுஷன். நாடகக் கலைஞர்களோட கஷ்டங்களை புரிஞ்சவரு. அவர், பொறுப்புக்கு வரக்கூடாதா? நடிகர் சங்க ஊழலை எதிர்த்து கேட்டதுக்காக மன்சூர் அலிகான் மெம்பர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டாங்க. 12 ரூபாய் கட்டணம் கட்டலைனு காரணம் சொன்னாங்க. ஆனாலும் விடமாட்டேன். கிணத்தைக் காணோம்கிறது மாதிரி, காணாமால்போன நடிகர் சங்கத்தைக் கண்டுபிடிக்காம விடமாட்டேன்.’’ ( நன்றி : விகடன்)

சரத்குமாரும், ராதாரவியும் பிறருக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கட்டும். அவர்கள் நிற்க வேண்டுமென்று அதிக நபர்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு சினிமா பைத்தியம்.

சரத்குமார் – கட்சியின் தலைவராக இருக்கிறார்.

மனைவி -டிவிக்களில் கோடிகளைக் குவிக்கிறார்.

ராதாரவி – கட்சியில் பிசியாகவும் இருக்கிறார்.

ஆகவே விட்டுக் கொடுத்து விடுங்கள் என்கிறது இன்னொரு சினிமா பைத்தியம்.

பதவி – விட்டுக் கொடுப்பதற்கல்ல. அது அதிகாரம் மிக்கது. ஆதாயம் மிக்கது என்கிறான் குஞ்சு.

ஆக ….

– அனாதி


விடியாது முடியாது

ஒக்ரோபர் 14, 2015

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே விடியட்டும் முடியட்டும் ( நெகட்டிவ் வார்த்தை) நிகழ்ச்சில் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பேசினார்கள்.

நான்கு வருடங்களாக மின்கட்டணம் உயர்ந்து விட்டதாம். கோழிப்பண்ணைகளுக்கு என்று தனி மின் கட்டணம் விதிக்க வேண்டுமாம். தலைவர் சட்டசபையில் பேசி பெற்றுத்தர வேண்டுமாம்- இப்படி பேசினார் ஒருவர்.

இதே நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் எங்கே அய்யா இருந்தது? நாளொன்றுக்கு 12 மணி நேரம் மின்வெட்டினை வெட்டி மக்களைப் படுகுழியில் யார் தள்ளினார்கள்? என்று கொஞ்சமாவது யோசிக்கின்றார்களா மக்கள்?

தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டது.

திமுகவில் யார் என்ன செய்து கிழித்தார்கள். தொழில்துறை மொத்தமாக அழிந்ததை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களே. எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டார்கள்.

மீண்டும் மின்வெட்டு நடந்தால்??? யோசிக்க வேண்டும்.

முன்னால் நடந்ததை மறந்து விட்டார் தமிழர்களுக்கு என்றுமே விடியவும் விடியாது.

– அனாதி


ஒரு ஒப்பீடு

ஒக்ரோபர் 9, 2015

PTI10_3_2015_000193B

முகேஷ் அம்பானியால் எண்ணற்றோர் வேலை செய்கிறார்கள். சம்பாதிக்கின்றார்கள். வாழ்கிறார்கள்.

நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

நாமெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது கொஞ்சமாவது உங்களுக்குப் புரிய வேண்டும். ஒவ்வொருத்தனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் போனால் கூட பரவாயில்லை. ஆனால் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம். இந்த நொடி உங்களிடமிருந்து போய் விட்டது. மீண்டும் கிடைக்குமா?

விஜய் டிவியில் டிடி இதை அருமையாகச் சொன்னார். ”விலையே இல்லாத அருமையான உங்களின் நேரத்தினால் தான் நாங்கள் இந்த அவார்டுகளைப் பெறுகிறோம் என”

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரம்! மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு பெரிய சொத்து. எத்தனை பேரின் மூன்று மணி நேரம்? அளவிருக்கிறதா அதற்கு? விலை இருக்கிறதா அதற்கு?

பிறருக்காக நீங்கள் காசைக் கொடுத்து செலவிடும் அந்த ஒவ்வொரு மணித்துளியையும் பலரின் பாக்கெட்டுக்குள் செல்கிறது. அந்த நன்றிக்கடனுக்காவது ஒரு வாய் தண்ணீராவது கொடுத்தார்களா? என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்பமும், நீங்களும் உருப்படுவீர்கள்.

– பஞ்சரு பலராமன்


ரிவீல்ட் – இந்தியாவின் உண்மையான பணக்காரர்

ஒக்ரோபர் 9, 2015

அம்பாணி கணக்கில் காட்டும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.

கணக்கில் காட்டப்படாத இந்தியாவின் பணக்காரர் யார் தெரியுமா?

டீக்கடையில் டீ குடிக்கமாட்டார். ரோட்டுக்கடையில் சாப்பிடமாட்டார் இப்படியெல்லாம் யார் செய்கிறாரோ அவரே இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.

– ஐபோ


Reveal – பெட்ரோல் பங்க் தலைவர்

ஒக்ரோபர் 3, 2015

ஒரு கட்சியின் இணைத்தலைவர் அவர். தமிழ், தமிழ், தமிழ் என்றும் தமிழர், நலன், மது ஒழிப்பு போன்ற போராட்டங்களில் கலந்து கொள்வார். இணைத்தலை அல்லவா? கட்சியில் மரியாதைக்கும் குறைவில்லாதவர்.

அவரைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றெல்லாம் தோன்றும். அய்யாவுக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ரொம்பவும் நெருக்கமென்றால் நெருக்கம் அப்படி ஒரு நெருக்கம்.

ஒரு பீரியடில் முக்கியமான ஒரு மத்திய அமைச்சரின் ஆசியால் வேற்று மாநிலத்தில் ஏகப்பட்ட பெட்ரோல் பங்க் லைசென்சுகளைக் கத்தையாக கைப்பற்றி விட்டார்.

தமிழ் நாட்டில் பெட்ரோல் வைத்திருந்தால் தானே எல்லோருக்கும் தெரியும்? வேற்று மாநிலத்தில் இருந்தால் யாருக்கு என்ன தெரியப்போகிறது? என்று நினைத்து விட்டார் போலும்.

ஒரு பட்சி போட்டுக் கொடுத்து விட்டது.

தினம் தோறும் இலட்சங்களில் இல்லை இல்லை கோடிகளில் குவித்துக் கொண்டிருக்கிறார் இணை.

ஆனால் அரசியலிலோ ஏழைத்தமிழனுக்கு விடிவுகாலம் பிறக்க வைப்போம் என்று உரையாத்திக் கொண்டிருக்கிறார்.

ரிவீல் முடிந்தது.

இனி அடுத்த ரிவீலில் சந்திப்போம்…

– ஐபோ


ரெய்டு உண்மை என்ன?

ஒக்ரோபர் 3, 2015

சமீபத்தில் நடிகர் விஜய், சமந்தா, நயன் தாரா வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கணக்கில் வராத 100 கோடி ரூபாயைப் பிடித்திருக்கின்றனர் என்று தினசரிகளில் செய்திகள் வெளிவந்திருப்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

பிடிபட்ட வரிகட்டா பணத்திற்கு வரியும், அபராதமும் விதிக்கப்போவதாக வருமான வரித்துறையினர் முடிவு செய்திருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

பிடிபட்ட கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு வரியும், அபராதமும் சரி! ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து, யாரால், எப்படி அவர்களுக்கு கிடைத்தது? அவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் என்ன? அப்பணம் எப்படி கொடுக்கப்பட்டவர்களால் சம்பாதிக்கப்பட்டது என்ற விபரங்களை வருமான வரித்துறையினர் விசாரிப்பார்களா?

அப்படி விசாரணை செய்ய ஆரம்பித்தால் எந்த நடிகர், நடிகையாவது பென்ஸ் காரிலோ, ஹெம்மர் காரிலோ வலம் வர முடியுமா?

சினிமா என்றால் கருப்பு பணம் என்பது வருமான வரித்துறையினருக்குத் தெரியவே தெரியாது என்று நாமெல்லாம் நம்ப வேண்டும் என்கிறதா அரசு?

இந்த ரெய்டு சொல்ல வருவது என்னவென்றால் தேர்தல் நெருங்குகிறது என்பதை யாரோ யாருக்கோச் சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதுதான்.

புதிய தலைமுறை டிவியில் மக்கள் மன்றத்தில் எஸ்.வி.சேகர் எங்களைக்(சினிமாக்காரர்களை) கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கிறார்.

அட மானம் கெட்ட தமிழா !

குண்டியாட்டிகளின் கூத்துக்களை ரசிப்பதுதான் கலையா? நாள் தோறும் சினிமா தியேட்டர்களுக்குப் படையெடுக்கும் வீணாய் போய்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். படம் பார்ப்பதினால் என்ன பயன் என்பதை…

– பஞ்சரு பலராமன்.


%d bloggers like this: