டிவிக்களில் விவாதங்கள்

செப்ரெம்பர் 15, 2015

அனாதி பிளாக்கின் ரசிகப் பெருமக்களே! இன்றைக்கும் தினமும் கிட்டத்தட்ட 600 தடவைக்கும் மேல் பார்க்கப்படும்(ஹீ…) அனாதி தளத்தினை பெருமைப்படுத்திக் கொண்டு வரும் அனைவருக்கும் மிக்க நன்றிகள் பலப்பல.

எவன் நல்லவன், எவன் அயோக்கியன், எவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்பதையெல்லாம் செய்தி சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும். அவசியம் விவாத நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவிக்களைத் தவிர்த்து பிற டிவிக்களைப் பாருங்கள்.

நேற்று ஒரு வக்கீல் மதுரை கிரானைட் முறைகேட்டு விசாரணை செய்ய சகாயத்துக்கு உரிமையே இல்லை என்று லாஜிக் பேசினார். அதாவது குற்றம் சுமத்தியவரே விசாரணை செய்யக்கூடாதாம். எப்படியெல்லாம் இந்த வக்கீல் யோசிக்கின்றார் என்று பாருங்கள். ஒரு மாவட்ட கலெக்டர் கிரானைட் முறைகேட்டினை விசாரிக்கிறார். அறிக்கை அனுப்புகிறார். உடனடியாக அவரை மாற்றுகின்றார்கள். கோர்ட் அவரையே விசாரிக்கும்படி கேட்டுக் கொள்கிறது. இதற்கும் ஒரு லாஜிக்கை அந்த வக்கீல் சொல்கிறார்.

என்ன ஒரு கயவாளித்தனமான போக்குப் பாருங்கள். சகாயம் ஏன் சுடுகாட்டில் படுத்து உறங்கினார்? அரை மணி நேரம் விலகினால் தான் சுத்தமாக தடயங்களை அழித்து விடுகிறார்களே, ஒரு பெரிய மலையை காணவில்லையாம். உடனே சகாயம் புகழுக்காக அப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்கிறார் ஒரு முன்னால் அய்யேயெஸ். என்ன ஒரு சிந்தனை.

இப்படிப்பட்ட குறுக்குச் சிந்தனையாளர்களின் குறு மதியால் தமிழகம் சீர்கெட்டுக் கிடக்கிறது. அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களைத் தவிருங்கள்.

– பஞ்சரு பலராமன்.

வயிற்றுப் பிழைப்புக்காக இப்படியெல்லாம் ஈனத்தனம் செய்யும் அயோக்கிய சிகாமணிகளைக் கண்டு கொள்ளுங்கள். அவர்கள் தன்னை தாமே வெளிக்காட்டிக் கொள்கின்றார்கள்.


%d bloggers like this: