தயாரிப்பாளர் சங்கத்தை தடை செய்யணும்

தமிழ் சினிமாவை தனிப்பட்ட முறையிலான ஒரு சங்கம் கட்டுப்படுத்துவதை இனி அனுமதிக்க முடியாது என்கிறார்கள் தமிழ் சினிமா ஆர்வலர்கள்.

இன்றைக்கு இருக்கும் நவ நாகரீக காலத்தில் டெக்னாலஜியின் அதீத வளர்ச்சியின் காரணமாக சினிமா வளர்ந்திருக்கிறது. ஒரு வெகு சாதாரணன் கூட மிகக் குறைந்த பணத்தை முதலீடாக வைத்து மிக நல்ல சினிமாவைத் தயார் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளபோது குறிப்பிட்ட ஒரு சிலரால் நடத்தப்படும் சங்கம் மொத்த தமிழ் சினிமாவைக் கட்டுப்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்கிறார்கள்.

இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் பிறரைக் கட்டுப்படுத்துவது என்பது சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல சட்ட விரோதமானது என்கிறார்கள் வக்கீல் நண்பர்கள். இந்தச் சங்கத்தை அரசு பதிவு செய்திருந்தாலும் கூட ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை கட்டுபடுத்த அரசு எந்த வித சட்டமும் இயற்றவில்லை. ஆகவே இவர்களுக்கு இப்படியெல்லாம் அறிக்கை விட எந்த வித உரிமையும் கிடையாது என்கிறார்கள்.

நாவல் எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இன்னின்ன நாவல்தான் எழுத வேண்டும். இந்த பதிப்பகத்தில் தான் பதிப்பிக்க வேண்டுமென்று ஒரு தனியார் அமைப்பு உத்தரவிட்டால் அது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ அதைப் போலத்தான் இந்த சினிமா சங்கத்தின் அறிவிப்பும் உள்ளது என்கிறார்கள் பலரும். பல்வேறு பதிப்பகங்கள் பல்வேறு படைப்புகளை வெளியிடுவது போல தமிழ் சினிமாவும் மாற வேண்டிய காலகட்டம் இது.

உடனடியாக நீதிமன்றத்தை அணுகி இவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்று கோபத்தில் கொந்தளிக்கின்றார்கள் சிறுபட முதலாளிகள் பலர் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

குறிப்பிட்ட ஒரு சில பெரிய ஹீரோக்களின் படங்கள் விழாக்காலங்களில் வெளியிடப்பட்டு அதை மட்டும் தான் ரசிகர்கள் பார்க்க வேண்டுமென்ற கட்டாயத்தை இந்த சங்கம் உருவாக்க முனைகிறது என்கிறார்கள். இதற்குப் பின்புலமாக பல்வேறு ஹீரோக்கள் இருக்கின்றார்கள் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நிலையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் ஊற்றிக் கொண்டன. அதை அவர்கள் தவிர்க்க சங்கத்தை பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல இவர்களின் குப்பையை மட்டுமே பார்க்க வேண்டுமென்ற கட்டாயத்தையும் மக்கள் மீது திணிக்கின்றார்கள் என்கிறார்கள். இது அக்மார்க் சட்ட மீறல் என்றும் கருதுகின்றார்கள்.

பெரும் பண முதலைகள் சிறு படத்தயாரிப்பாளர்களை கட்டுப்படுத்துவது திமிர்தனமானது. அயோக்கியத் தனமானது. இதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. உடனடியாக தலையிட்டு இந்தச் சங்கத்தை தடை செய்து உத்தரவிட வேண்டும் – தமிழ் சினிமா ஆர்வலரின் மெயில்

– இதற்கு பதில் அனுப்பினால் வெளியிடத் தயார்

அனாதி

செய்தி ஆதாரம்:-

http://tamil.filmibeat.com/news/big-budget-films-release-only-on-ten-festival-dates-only-producer-council-033495.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: