விஜய்டிவி சரவணன் மீனாட்சி

பிப்ரவரி 14, 2015

மிஸ்டர் அனாதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரை நீங்கள் பார்ப்பதுண்டா? விஜய் டிவி தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் புரோகிராம்களை ஒளிப்பரப்புகிறது என்று எனது நண்பர்கள் சொல்கின்றார்கள். நானும் அதையே நினைக்கிறேன். இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன? – மல்லிகா, கோபி

அன்பு மல்லிகா,

உங்கள் மெயிலைப் படித்து விட்டு இரண்டு நாட்களாக நெட்டில் துலாவி இந்தச் சீரியலைப் பார்த்தேன். அது ஒரு சீரியல் என்று பார்க்கின்றீர்களா? மீனாட்சியாக நடிக்கும் கிழவி பெயர் என்னவென்று தெரியவில்லை. இயக்குனருக்கும் மீனாட்சிக்கும் ஒரு சிங்கொரனைசேசன் இருப்பது போலத் தெரிகிறது. உள்ளே இருப்பதுதானே வெளியில் வரும். அது இயக்குனருக்கும் நடிகைக்கும் இருக்கும் சிங்கொரனைசேசனாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி கேனத்தனமான, கேவலமான, முட்டாள்தனமான சீரியல் என்றால் அது இதுதான். இதையெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்யாதீர்கள். அந்த சீரியலில் ஒரு கேரக்டர் கூட சரியில்லை. சுத்த மோசம்.

கலாச்சாரத்தை சீரழிக்கிறது விஜய் டிவி என்று கேட்டீர்களே, உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன்? விஜய் டிவியில் என்ன மல்லு படமா காட்டுகிறார்கள்? இல்லை ப்ளூபிலிம் காட்டுகின்றார்களா?

ஏதோ உதடு வீங்கினது, குண்டி பெருத்தது, வாயாலே கெட்டது போன்றவைகளை வைத்து ஒப்பேத்துகிறார்கள். எது கிடைக்கிறதோ அதை வைத்து ஏதோ கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது எல்லாம் சகஜம் தானே?

நீங்க அதைப் போய் கலாச்சார சீரழிவு அது இது என்கின்றீர்களே?

அப்புறம் மல்லிகா நீங்கள் ரொம்ப அழகா? எனக்குப் பிடித்த பூ “மல்லிகை” என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன். மல்லிகை மணம் சும்மா அதிருமில்ல..

– உங்கள் மனம் கவர் குஞ்சு (அனாதிக்காக)


ஜெயலலிதா வழக்கு மேல்முறையீட்டு தீர்ப்பு

பிப்ரவரி 12, 2015

அனாதி அண்ணா,

நிகழ்ந்து வரும் சம்பவங்களைச் செய்திகள் வழியாக கேள்விப்பட்டு எரிச்சலும், ஆற்றாமையும், கோபமுமாய் இருக்கும் என்னைப் போன்ற பலருக்குள் இருக்கும் கேள்விக்கு நீங்கள் ஒருவர் தான் சரியான பதில் தர முடியும் என்று நினைப்பதால் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கு என்னாகும் என்று தாங்கள் நினைக்கின்றீர்கள்? – அருணன், கேரளா.

ஜனநாயக அமைப்பில் குற்றவாளிகளுக்குத்தான் அதிகபட்சமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அருணன்.

ஜெயேந்திரர் வழக்கு மூடப்பட்டு விட்டது. சங்கரராமனைக் கொன்றது யார் என்று எந்த நீதிமன்றமாவது கேள்வி கேட்டதா? கொலையாளி யார் என்று யாராவது கேட்டார்களா? இல்லையே? சாட்சிகள் கலைக்கப்பட்டு விட்டன. ஆதாரம் இல்லை என்கிறது கோர்ட். ஆனால் உண்மை என்ன? சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். யாரால் யாரை என்ன செய்ய முடிந்தது. ஆனாலும் பதில் சொல்லித் தீர வேண்டிய கட்டமொன்று இருக்கிறது.

காஞ்சி சங்கரமடம் தன் அழிவைத் தானே துவக்கி வைத்துக் கொண்டு விட்டது. சட்டம் செய்ய இயலாத ஒன்றை தர்மம் கொடூரமாய் முடித்து விடும்.

அதைப் போலத்தான் இந்த வழக்கும் பிசு பிசுத்துப் போகும் என்றுச் சொல்ல விரும்பினாலும் சொல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட 18 ஆண்டுகால நீதிமன்றத்தை ஆட்டி வைத்த ஆட்டில் உண்மையான நீதிமான்களும், நீதியும் தன் சவுக்கை நிச்சயம் சுழட்டி அடிக்கும் என்றே தோன்றுகிறது. பதில் சொல்லித்தீர வேண்டிய கட்டாயம் குற்றவாளிகளுக்கு உண்டு. அது நீதிமன்றத்தில் நிச்சயம் நடக்கும் என்றே பட்சி சொல்கிறது. பார்ப்போம்…

அனாதி.


%d bloggers like this: