லிங்கா படத்தைப் பார்க்க மாட்டேன்

லிங்கா திரைப்படத்தை நான் பார்க்கப்போவதில்லை. அந்தப் படத்தைப் பற்றியச் செய்திகளை படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ கூட நான் விரும்பவில்லை. ரஜினி என்ற பிம்பம் தமிழக இளைஞர்களின் குருதியில் நிக்கோடினை ஏற்றி அவர்களை மரணத்தின் படுகுழியில் தள்ளியது. அரசியல் பிம்பமோ ரஜினிக்கு பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்தது. அவர் தமிழர்களிடமிருக்கும் ‘பணத்தை’ மட்டுமே விரும்புகிறார். பாபா படத்தில் அவரும், அவரின் குடும்பத்தாரும் அடித்த லூட்டியையும், ரசிகர்களிடமிருந்து அவர்கள் பிடுங்கிய பணத்தையும் இந்த உலகம் கண்டது. ஒரு செடி கூட தன்னை வளர்த்தவருக்கு உபயோகப்படுகிறது. ஆனால் ரஜினி என்கிற பிம்பம் பெரும் பணம் உறிஞ்சு குழலாகி விட்டது.

தமிழகத்தில் சினிமா மாயை அகன்று உண்மையான ஒரு தமிழன் அரசியலில் அடியெடுத்து வைத்து ஆட்சிக்கு வர வேண்டும். அந்தக் காலம் வெகு விரைவில் மலர்ந்தே தீரும்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஊழல்வாதிகள் என்று இந்தியாவே தெரிந்து கொண்டது. இனி தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சினிமாவா தமிழனா என்று.

இக்கடிதத்தை உங்களது பிளாக்கில் வெளியிட வேண்டும் அனாதி. என்னைப்போல ஒரு சிலராவது லிங்கா படத்தை தவிர்ப்பார்கள் என்று நினைக்கிறேன். எனது கடிதத்தைப் பற்றி உங்களது கருத்து என்ன?

= விக்கிரமாதித்தியன், சென்னை.

அனாதியின் பதில்:

நாங்கள் எப்போதுமே ரஜினியின் படத்தைப் பார்ப்பதே இல்லை. அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்கிற முறையில் ரஜினியைப் பற்றிப் பேசுவதற்கு கூட நாங்கள் விரும்புவதில்லை. இந்தக் குஞ்சுப்பயல்தான் கேட்க மாட்டேனென்கிறான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: