நெருங்கி வா முத்தமிடாதே

நவம்பர் 17, 2014

நண்பர்களின் அழைப்பின் பேரில் “ நெருங்கி வா முத்தமிடாதே” படத்தைப் பார்க்கும் அவல நிலை எனக்கு ஏற்பட்டது. கொடுமையிலும் கொடுமை இந்தப் படத்தை எடுத்தது சர்ச்சைக்குப் பெயர் போன லட்சுமி ராமகிருஷ்ணன்.

** // அட ராமா ராமா, எப்படியப்பா பொறுமையாக இருக்கிறீர்? // **

தலைப்பிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என இயக்குனர் புளி போட்டு விளக்கினால் பரவாயில்லை. லாரியின் பின்புறம் தலைப்பை காட்டி விட்டால் போதும் என்கிற அளவுக்கு இயக்குனரின் கலைத்தாகம் இருப்பதை நினைத்து புளகாங்கிதம் ஏற்படுகிறது.

அழகான கதை, அற்புதமான பாத்திரங்கள் தேர்வு. படமாக்கிய விதம் தான் படுமோசம். ஆங்கிலப்படங்களில் சாதாரண சுட்டிப்பையன் செய்யும் ஹீரோ சாகசக் கதையைக் கூட சுவாரசியமாக எடுப்பார்கள்.ஆனால் லட்சுமியின் கலைத்தாகமோ “காசு கிடைத்தால்” போதும் என்கிற அளவுக்கு இருப்பதை படம் சொல்லாமல் சொல்லி விடுகிறது.

இதற்கிடையில் ஜெய்ஹிந்த் 2 படத்தினையும் பார்க்கும் கொடுமை நடந்தது. பாதியில் எழுந்து விட்டேன். அர்ஜூன் சார்! கோடம்பாக்கத்தில் திரியும் உதவி இயக்குனர்களை அழைத்து தலைப்பைக் கொடுத்து கதை தயார் செய்யச் சொன்னால் நீங்கள் யோசித்ததை விட அவர்கள் கிளாசிக்காக யோசித்து கதை சொல்வார்கள் என்று உங்களுக்குத் தெரியுமே? அதையெல்லாம் யோசிக்கவில்லையா? இப்படி ஒரு படம் தேவையா?

தமிழ் சினிமா ரசிகப்பெருமக்களே இதுகாறும் நீங்கள் சினிமாவிற்கு செலவழித்தைச் சேமித்து வைத்திருந்தால் என்னென்ன வாங்கியிருக்கலாம், எவ்வளவு பணம் மிச்சமாயிருக்கும் என்று யோசியுங்கள். பிழைத்துக் கொள்வீர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் திருடும் அயோக்கிய சிகாமணிகளை நம்பி ஏமாந்து போய் விடாதீர்கள்.

அடுத்து ரஜினி ஆட்டயப்போட கிளம்பிவிட்டார். மகள் கோச்சடையான் படத்தில் ஜெயித்திருந்தால் படத்தில் நடிக்கவே வந்திருக்க மாட்டார். ஆகவோ உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை உருவ கிளம்பி விட்டார். ஜாக்கிரதை.

-அனாதி


குத்துன்னா குத்து இதுக்குப் பேரு குத்து

நவம்பர் 15, 2014

 


%d bloggers like this: