அதிமுக திமுகவிற்கு ஓட்டுப் போடும் முன்

சமுதாய நிலவரத்தை அப்படியே பிரதிபலிப்பவர்களில் முக்கியமானவர்கள் பேருந்து நடத்துனர்கள். அவர்கள் பலரிடம் பேசியபோது, குடியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணரமுடிந்தது. அவர்கள் சிலரது அனுபவங்கள்:

“இப்போ ஒவ்வொரு டிரிப்புக்கும் நாலஞ்சு பேராவது குடிச்சுட்டு போதையில வர்றாங்க.. அதில யாரவது ஒருத்தன் கட்டாயமா பிரச்சினை பண்ணி, ரணகம் பண்ணிடறான்.

போதையில வேகமா வந்த குடிமகன் ஒருத்தன் ஒரு பொம்பள பக்கத்துல போயி உக்காந்துட்டான்… அந்தப்பொண்ணு பதறிப்போயி எந்திரிச்சு சத்தம்போட.. பாத்ரூம் போயிருந்த அவ புருசனும் வந்துட்டான்.

ஒரே ரகளை. குடிகாரனோ, “இது கவர்மெண்ட் பஸ்ஸு.. நான் எங்க வேணும்னாலும் உக்காருவேன்”னு திமிரா பேசுறான். எல்லாருமா சேர்ந்து தர்மடி போட்டு இறக்கிவிட்டாங்க…

அவன் இறங்கினத்துக்கப்புறம்தான் பெரிய பிரச்சினையே வெடிச்சது… பொண்டாட்டிகிட்ட, “நீதான் உன் கள்ளப்புருசனை வரச்சொன்னியா”னு கேட்டு புருசன்காரன் சண்டைபோட… அந்தப்பொண்ணு வாயிலயும் வயித்திலயும் அடிச்சிகிட்டு அழுவுது. “இப்பவே செத்துப்போறேன்”னு ஓடற பஸ்ஸுலேருந்து குதிக்கப்பாக்குது… எல்லாருமா சமாதானம் செஞ்சு அனுப்பினோம் அதுங்க குடும்பத்துல என்ன கோளாறு ஆச்சோ!”

“போதையில சில பேரு எடுக்காத டிக்கெட்ட எடுத்ததா சொல்லுவான். மீதி சில்லறைய வாங்கிட்டு இல்லேம்பான். ஒரு குடிகாரன், “எதற்காக வாங்க வேண்டும் டிக்கெட் நீ என்னோட பாருக்கு வந்தாயா, பாட்டில் வாங்கினாயா”னு சினிமா வசனமா பேசினான்!”

““ஒருமுறை கணவன் மனைவி சின்ன பிள்ளை மூணு பேரும் பேருந்தில ஏறினாங்க. கணவன் முழுக்க குடிச்சிருந்தான். டிக்கெட் கேட்டா பணம் இல்லேங்கிறான். “இறங்குய்யா”னு சொன்னா… அவன் பொண்டாட்டி அழுகுறா.. “எங்கள பஸ் ஸ்டாண்டில நிக்கவச்சுட்டு இருந்த காசை எல்லாம் குடிச்சு தீத்துட்டாரு. சாவுக்குப் போகணும்…”னு கதறுறா…

“யாரு செத்தது?”னு கேட்டேன்… “இந்த ஆளோட அம்மாதான்!” அப்படிங்கிறா.

பகீர்னு ஆகிப்போச்சு… நான் செலவுக்கு வச்சிருந்த காசை போட்டு டிக்கெட் கொடுத்து அனுப்பிவச்சேன்.

பல வருசம் ஆகியும் அந்தப் பொண்ணோட கண்ணீரும், அந்த சின்னக் குழந்தையோட முகமும் அப்படியே நெஞ்சுல நிக்குது.
அம்மா பத்தியே கவலைப்படாதவன், பொண்டாட்டி பிள்ளையை என்னைக்கு தெருவில விடப்போறானோ….. இல்ல, விட்டுட்டானோ!”

– இப்படி பலவித புலம்பல்கள் நடத்துடனர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

கடந்த வாரம் பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் வந்தபோது நடத்துனர் மூர்த்தி அவர்களிடம் பேசினேன். அவரிடமிருந்து வெளிப்பட்டதும் அதே புலம்பல்தான்:

“முன்ன எல்லாம் குடிச்சுட்டு பேருந்துல வர்ற ஆளுங்க வருசத்துக்கு ஒருத்தரோ ரெண்டு பேரோ இருப்பாங்க ஏன்னா குடிக்கிறது அசிங்கம்னு நினைச்சாங்க மக்கள். இப்போ ஒன்றரை மணி நேர பயணம்னா ஒரு குவார்ட்டர அடிச்சுட்டு பஸ் ஏறுவோம்னு நினைக்கிறவங்க அதிகரிச்சிட்டாங்க.அதிலும் பிரச்சினை பண்றவங்களும் அதிகம்.

பள்ளி கல்லூரி மாணவர்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.. டிக்கெட் கேட்டா, மரியாதை இல்லாம பேசறது.. மற்ற பயணிகள்ட்ட பிரச்சினை பண்றது, பஸ்லேயே வாந்தி எடுக்கிறது…

இப்பல்லாம் பயணம்னாலே ஒருவித பயத்தோடதான் மக்கள் வர்றாங்க… தினம் தினம் பயணிக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்…

எனக்கு 51 வயசு ஆகுது. 32 வருச சர்வீஸ். நடத்துனர் வேலையை ரொம்ப நேசிச்சுத்தான் வந்தேன். ஆனா கடந்த பத்து பன்னிரண்டு வருசமா குடிகாரங்க தொல்லை அதிகமாகி.. மரியாதையே போச்சு.. தொழில் மேல முழு ஈடுபுாடு இல்லை…
வேலைய விட்டுறலாமான்னுகூட பல சமயம் தோணும்.. படிக்கிற ரெண்டு பசங்கள மனசுக்குள்ள நினைச்சுக்குட்டு நாட்களை நகத்திக்கிட்டிருக்கேன்! என்றார் வருத்தத்தோடு.

குடி, குடிப்பவனையும் அவன் குடும்ப்ததையும் மட்டுமல்ல… ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கிறது! – நடத்துனர் மூர்த்தி.

 – டி.வி.எஸ். சோமு (முக நூல் பக்கத்தில் – நன்றி)

” ஓட்டுப் போட்டு தன்னை பதவியில் அமர வைத்த மக்களுக்கு இந்தத் தலைவர்கள் செய்யும் நன்றிக்கடனைப் பார்த்தீர்களா?  நம் எதிர்கால சந்ததிகள் குடித்தே சாக வேண்டுமா? – யோசியுங்கள்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: