சவுக்கு பற்றி

அனாதி சவுக்கு இணையதள பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன? – விமலாதித்தன், சிங்கப்பூர்

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு ஒரு சாட்சியாய் நிற்பது சவுக்கு இணையதளம். தமிழ்நாட்டில் சுத்தமாக மக்களாட்சி, ஜனநாயகம் என்பது இல்லவே இல்லை என்று கட்டியம் கூறுகிறது சவுக்கு இணையதளம்.

இதற்கு பலவித காரணங்கள் உண்டு.

நீதிபதிகளின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குட்பட்டாலொழிய இந்தியாவில் ஜன நாயகச் செயல்பாடுகள் இன்றைக்கு இருப்பது போல இனிமேலும் முடங்கிக் கிடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்படாத நீதிபதிகளையும், வக்கீல்களையும் சட்டத்திற்கு உட்படுத்த வேண்டும். அவர்களை கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் எழுதும் தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தவறான தீர்ப்பெழுதினால் தண்டனை இருக்கிறது என்பதை நீதிபதிகள் கவனத்தில் இருத்தல் வேண்டும்.

இதைச் செய்தாலே ஜன்லோக்பால் எல்லாம் தேவையே இல்லை. சட்டம் கடுமையானதாக்கப்படல் வேண்டும். அது ஜனாதிபதியையும் கேள்வி கேட்க வேண்டும். இது நடக்காத பட்சத்தில் இந்தியாவில் இருக்கும் ஜன நாயகம் என்பதெல்லாம் போலியானது.

பத்திரிக்கைகள் அனைத்தும் காசுக்காக இயங்குகின்றன. அவைகள் ஆளும் அரசியல் வர்க்கத்துக்கு ஆதரவாய் மட்டுமே இருக்கும். பேனா முனை அது இதெல்லாம் எவளாவது நடிகை எந்த நடிகனோடு படுத்தாள் என்பதை பற்றி எழுதத்தான் இருக்கின்றன. அவர்களிடம் தான் பேனா முனையின் சக்தியைப் பற்றிப் பேசலாம்.

அரசியல்வாதியிடம் பேசினால் பேனா வைத்திருப்பவன் கை கால்கள் முறிந்து விடும். கட்சி என்ற பெயரில் ரவுடித்தனம் செய்கின்றார்கள். போராட்டம் என்றுச் சொல்லி அடித்து உடைக்கின்றார்கள். மக்களைத் துன்பப்படுத்துகின்றார்கள் அரசியல் கட்சிகள். மக்களுக்குச் சேவை செய்கிறேன் என்றுச் சொல்லி ரவுடி கேங்க் நடத்துகின்றார்கள் ஒவ்வொரு அரசியல்கட்சிகளும். இல்லையென்று யாராலும் சொல்ல முடியுமா? லோக்கல் தலைவருக்கு கட்சியில் சீட் இல்லையென்றால் ரோட்டில் இறங்குகின்றார்கள். அவர் மக்கள் சேவை செய்கின்றாராம். இப்படிப்பட்டவர்களை மக்கள் ஓட்டுக் கேட்டு வரும் போது கேள்வி கேட்க வேண்டும். உனக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்றுச் சொல்ல வேண்டும். ஆனால் எவராவது செய்கின்றார்களா? இல்லையே? ஆரத்தி தட்டில் காசு விழுகிறதா, கவரில் காசு கிடைக்குமா என்று ஆலாய்ப் பறக்கின்றார்கள். படித்தவன் முதல் பாமரன் வரை இதே நிலை. காசு காசு என்று பறக்கின்றார்கள்.

பொதுவாழ்க்கைக்கு வரும் எவராயிருந்தாலும் அவரின் ஒவ்வொரு செயல்பாடும் விமர்சனத்துக்குட்படுத்தல் அவசியம்.

ஆனால் அப்படி விமர்சித்தால் வழக்கு போடுகின்றார்கள். அவ்வழக்குகளை நீதிமன்றங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். ரோட்டில் போகும் சாமானியனைப் பற்றி எவரும் பேசுவதில்லை. மக்கள் சேவைக்கு வருபவர்களைத் தான் பேசுகின்றார்கள். விமர்சிக்கின்றார்கள். எவர் தவறு செய்கிறாரகளோ அவர்களை விமர்சிக்கின்றார்கள். அது இவர்களுக்கு ஏற்கவில்லை. வழக்குகள் போடுகின்றார்கள். இவர்கள் என்ன மாதிரியானவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரின் பணத்திலும் பெறக்கூடிய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றார்கள். ஏசி காரில் பயணிக்கின்றார்கள். ஹெலிகாப்டர்களில் பறக்கின்றார்கள். சாப்பிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல்களைப் பற்றி விமர்சித்தால் கோபப்படுகின்றார்கள். வேலைக்காரர்கள் எஜமானர்களைப் பார்த்து எச்சரிக்கின்றார்கள்.

இப்படிப்பட்டவர்களை கேள்வி கேட்கும் விமர்சிக்கும் இணையதளத்தை சும்மா விடுவார்களா?

இந்திய மக்களின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். கருத்துரிமைக்கு எதிரானவர்களின் சதிச்செயல். சுய நலவாதிகளின் தடித்தனம். உண்மையை உரக்கச் சொல்பவனை சட்டத்தைக் காட்டி மிரட்டு. அவனை அடக்கு என்பதுதான் இவர்கள் நடத்தும் செயல்கள்.

ஆனானப்பட்ட ஹிட்லரே காணாமல் போய் விட்டான். இவர்கள் எல்லாம் காலத்தின் முன்பே “தூசுக்கும்” சமமானவர்கள்.

உண்மை என்றும் நிலைத்து நிற்கும்.

– அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: