அராத்துவும் சாருவும்

ஜனவரி 4, 2014

அனாதி சாரு அராத்து என்ன விஷயம் ? – ஒரு வாசகர்

அராத்து சாருவைப் பயன்படுத்திக் கொள்கிறார். அல்லது சாரு அராத்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார். சாரு வாசக வட்டத்தினர் அராத்துவுக்காக வேலை செய்கின்றனர்.

இதை இரண்டைத் தவிர வேறொன்றும் புதிதாக இல்லை. 

அராத்துவின் புத்தகங்களுக்கான ஒரு விமர்சனம் :

நீங்கள் தொலைக்காட்சித் தொடரை ஒரு நாள் பார்த்திருந்து மீண்டும் மற்றொரு நாள் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அது மறு ஒளிபரப்பாகவே இருக்கும். – மர்பி விதி

புரிகிறதா?

– அனாதி


பஞ்சுவுக்குப் பதில் – அண்ணாவும் கலைஞரும்

ஜனவரி 3, 2014

பஞ்சு நீ எங்கே இருக்கிறாய்? எப்போது இந்தியா வருகிறாய்? திடீரென உன் பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சி உண்டானது.

மேட்டருக்கு வந்து விடுகிறேன்(குஞ்சு இது அரசியல் மேட்டர்). அண்ணாவின் தனிதமிழ் நாட்டு கோரிக்கை கைவிடப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அகண்ட தமிழகம் என்று அவர் லங்காவில் பேசியதும் உண்மை. அதை கடுமையாக விமர்சித்து ஜன சக்தியில் கட்டுரை வந்ததும் உண்மை. அவர் பேசியதனால் தான் இலங்கையில் தமிழர்கள் சண்டையிட ஆரம்பித்தார்கள் என்றுச் சொல்வது சரியானது அல்ல. அங்கே புகைந்து கொண்டிருந்த நெருப்பை ஊதி விட்ட பெருமை வேண்டுமானால் அண்ணாவுக்குச் சேருமே ஒழிய இலங்கைப் பிரச்சினைக்கு அண்ணா காரணம் அல்ல என்கிறார்கள்.

அடுத்து, கலைஞர் பற்றி நீ எழுதி இருந்தது எல்லாம் சரிதான். ஆனால் அரசியல் என்பது நாமெல்லாம் நினைப்பது போல “அறத்துக்கு” கட்டுப்படாதது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் தற்போது கேஜரிவால் டெல்லியில் ஆட்சி அமைத்ததைச் சொல்லலாம்.

காங்கிரஸ்ஸை எதிர்த்துதானே கேஜரிவால் போராடினார் பின் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைப்பது சரியா என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் தான் உள்ளது. அது மக்களின் நலன். கேஜரிவாலின் முடிவு சரியானது. மக்கள் பணம் மீண்டும் தேர்தலுக்காக செலவழிப்பதை உண்மையான இந்தியப் பற்றுடையவர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் இந்த சமரசம் அரசியலில் சரியான முடிவு எனலாம். ஆனால் தர்மப்படி பார்த்தோமென்றால் அது தவறு.

கலைஞர் தமிழர்களுக்கு நல்லது செய்கிறேன் என்றுச் சொல்லி தன் குடும்பத்தை வளர்த்துக் கொண்ட மாபெரும் குடும்பத் தலைவர் என்பதே சரியானது. கனிமொழிக்கு கிடைத்திருக்கும் ராஜ்யசபா எம்பி பதவி ஒன்றே அதற்குச் சான்று. திமுகவில் தன் சொத்தையெல்லாம் இழந்து இன்றைக்கும் அடி மாட்டு வேலையினைச் செய்து வரும் எத்தனையோ தொண்டர்கள் இருக்கையில் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது அவரின் குடும்ப பாசத்தைக் காட்டுகிறது. அதே போல அவரின் மகன் அழகிரியின் கட்சிக்கு கட்டுப்படாத செயல்பாடுகளை அவர் என்றைக்குமே கண்டு கொள்வதே இல்லை. இதே வேறொருவராக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

– அனாதி


அண்ணாவும் கலைஞரும் தமிழருக்குச் செய்தது என்ன?

ஜனவரி 2, 2014

அண்ணாவின் மறைவின் போது தமிழர்கள் சென்னையில் கூடிய கூட்டத்தைக் கண்டு வியந்து போய் அவரின் மீது பற்றுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு அவரின் எழுத்துக்களை வாசித்தும் அவரின் கூரிய பேச்சுக்களைக் கேட்டும் அவரின் மீது பெரும் அபிமானம் உருவானது. கலைஞர் மீது ஒரே ஒரு பற்றுத்தான். அவர் நல்ல குடும்பத்தலைவர் என்பதைத் தவிர அவரின் இலக்கியங்கள் மீதோ அல்லது அவரின் நுண்ணரசியல் மீது எனக்கு எந்தளவும் ஈடுபாடு இருந்ததில்லை.

வெளி நாட்டில் கிட்டத்தட்ட அண்ணா காலத்து மனிதரொருவரைச் சந்தித்தேன். அவர் சிறிய வயதில் ”ஜனசக்தி, நவ இந்தியா, தினமணி” நாளிதழ்கள் படிப்பாராம். ஜன சக்தியில் ஈட்டி என்ற பெயருடைய ஒருவர் கட்டுரைகள் எழுதுவாராம். அண்ணா காலத்தில் தனித் தமிழ் நாடு போராட்டத்தினை திமுகவினர் கொள்கையாக வைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அண்ணா லங்கா சென்றிருந்தாராம். மூக்குப்பொடியைப் போட்டுக் கொண்டு அகண்ட தமிழகம் அது தமிழீழத்துடன் என்று பேசி விட்டு வந்த பிறகு அந்த ஈட்டி என்ற கட்டுரையாளர் அண்ணாவின் பேச்சை விமர்சித்திருக்கிறாராம். அண்ணாவின் பேச்சு லங்காவில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்று தெரியவில்லை, தீக்காடாக மாறாமல் இருந்தால் சரிதான் என்றும் எழுதி இருந்தாராம்.

கலைஞரைப் பற்றிப் பேசிய போது அந்தப் பெரியவர் உலகத்திலேயே தமிழ் நாட்டில் மட்டும் தான் தாய் மொழியில் எழுதத்தெரியாமல் பேசுபவர்கள் மட்டும் உண்டு. வேறெந்த நாட்டிலும் இப்படியொரு அக்கிரமம் நடந்திருக்காது. நான்கு தலைமுறையாக தமிழ் தமிழ் என்றுப் பேசி தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத்தான் அவர் செய்து வந்தார் என்றார். அவர் தமிழால் தன்னை வளர்த்து கொண்டாரே ஒழிய தமிழுக்கும் தமிழனுக்கும் ஒன்றும் செய்யவில்லை என்றார். அதைத் தொடர்ந்து அண்ணா காலத்துக்குப் பிறகு 10 பர்செண்டேஜை அறிமுகப்படுத்தியதும் இவரே. இப்போது அது 20 பர்செண்டேஜாக மாறி விட்டது என்றார். இந்தியாவிற்கு அமைச்சரானது இந்தியாவையே கூட்டுக் கொள்ளை அடித்த பெருமையும் இவர்களுக்கே சார்ந்தது என்றும் வெறுப்பாகப் பேசினார்.

கேட்க சுவாரசியமாய் இருந்தது. இதோ உங்களுக்காக !

ஆமாம் கலைஞர் தமிழர்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லையா? ஏன் அந்தப் பெரியவர் அப்படி பேசினார் என்பது எனக்குப் புரியவில்லை. உள் அரசியல் ஏதும் இருக்குமோ?

– பஞ்சரு பலராமன்

(அனாதி இது குறித்து உனது பதிவை எதிர்பார்க்கிறேன்)


%d bloggers like this: