கனிமொழி எம்பியானால்

இணையதளங்களில் கலைஞரின் குடும்பத்தைப் பற்றி பல வித ஹேஷ்யங்கள் விரவிக் கொண்டிருக்கின்றன. கனிமொழிக்கு எம்பி சீட் தொடர்பாக அனேக நக்கல் கிண்டல்கள் செய்பவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு கேள்வி.

எங்கே நீங்கள் தைரியமானவராக இருந்தால் ஜெயலலிதா பற்றி ஒரு கமெண்ட் அடியுங்கள் பார்ப்போம். பரதேசிகளாய் இணையத்தில் பந்தா விட்டுக் கொண்டு திரியும் அலப்பறைகள் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லும். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அரசியல் பதவி என்பது ஒன்றும் சும்மா இல்லை. ஓசியில் கிடைக்கும் அளவற்ற அதிகாரம். அதிகாரமிக்கவர்களின் தொடர்புகள் என்று எல்லையற்று விரிவடையச் செய்யும் அரசியல்பதவியை அவ்வளவு எளிதாக கருத முடியுமா? இதை அடைவதற்கு நேர்மை போதவே போதாது. திருட்டுத்தனமும், மொள்ளமாரித்தனமும், முடிச்சவிக்குத்தனமும் அவசியம் தேவை.

கலைஞர் தன் குடும்பத்திற்கு மட்டும் தான் உழைப்பார். நாட்டுக்கு உழைத்தவர்கள் கதையெல்லாம் அவர் நன்கு படித்து நாடு என்றால் என்ன, நாட்டு மக்கள் என்றால் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் செய்யும் அரசியல் 100% சரியானது.

‘அம்மா’ ஜெயலலிதா செய்யும் அரசியல் தான் ‘துக்ளக்’ தர்பார். நிலையற்றதன்மையை தன் அதிகாரத்தால் உருவாக்குகிறார். நம்பிக்கையின்மை அதிகாரத்தால் நிலை நாட்டுகிறார். அது ரொம்ப நாளைக்குச் செல்லாது. அடுத்து விஜய்காந்த் வந்து கொண்டிருக்கிறார். வேறு வழியே இல்லை. இனி அவரும் தமிழக அரசியலில் ஒரு சக்தி.

திமுகவும், அதிகமுகவும் இப்படி இருக்கையில் அரசியலுக்குச் செல்ல விரும்புவர்களுக்கு தேமுதிக மட்டுமே ஒரே வழி. அய்யராத்துக் கட்சி பாஜகவும், கிழவர்களின் கட்சியான காங்கிரஸ்ஸிலும் ஊழல் செய்ய தகுதியுடையவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும்.

கனிமொழி எம்பி ஆகவில்லை என்றால் தான் அது இந்திய ஜன நாயகம் ஓரளவு சரியாக இருக்கிறது என்று தெரியும். கனிமொழி எம்பியானால் அது நம் இந்திய ஜனநாயகத்தின் தோல்வி. நமது எம் எல் ஏக்களின் கோரத்தின் பேராசை என்று கருத வேண்டும்.

ஆச்சரியப்படவோ, பெருமூச்சு விடவோ தேவையில்லை.

விதி வலியது

– அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: