பிரபல பத்திரிக்கையாளர் கைது எப்போது?

மே 28, 2013

ஐபிஎல் ஒரு கருப்புபண விளையாட்டு என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். உண்மையில் சென்னையில் பல கோடி கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் அதிமேதாவி பிரபல பத்திரிக்கை அதிபர் பற்றி ஒரு செய்தியையும் காணவில்லை.

ஹோட்டலில் வேலை செய்யும் சர்வர் டாஸ்மாக் பாரில் புலம்பிக் கொண்டிருந்தான் என்றான் குஞ்சு. அந்த அதிபர் கிரிக்கெட் சூதாட்டத்தில் புலி எனவும், சூதாட்டத்தில் ஜெயித்தால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பார் என்றும் அலப்பரை செய்து கொண்டிருந்தான். அவரை எவரும் நெருங்க முடியாது என்று தில்லாய் பேசிக் கொண்டு திரிகிறான்.

இவரைக் கைது செய்யாமல் இந்த ஊழல் கைதுகள் நடந்தால் அது நிச்சயம் மக்களை ஏமாற்றும் வேலை என்றுச் சொல்கிறான் குஞ்சு.

யார் அந்த முகம் என்று எவருக்காவது தெரியுமா? அனாதி பிளாக்கை படித்தவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

– அனாதி


தமிழ்சினிமா இயக்குனர்கள் சங்கம் பற்றி

மே 13, 2013

நேற்றைக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் மீட்டிங் நடைபெற்றதாம். கூட்டத்தில் பேசப்பட்டத்தில் முக்கியமான விஷயம்,  எந்த இயக்குனரின் மீதாவது கிரிமினல் கேஸ் போடப்பட்டால் அவரின் இயக்குனர் அடையாள அட்டையை திரும்பப் பெறுதல் என்பது ஒரு அம்சம். யாரோ ஒரு இயக்குனர் கார்டை வைத்து காசு வாங்கி விட்டாராம். இன்னொருவர் கார்டை வைத்து சிலிண்டர் வாங்கி விட்டாராம். உடனே மாரல் போலீஸ் வேலையில் இறங்கி விட்டார்கள் இவர்கள் என்கிறார்கள்.

கிரிமினல்கள் மேல் நடவடிக்கை எடுப்பது காவல்துறை வேலை. அதை ஏன் இயக்குனர்கள் சங்கம் எடுக்க நினைக்கிறது என்று தெரியவில்லை என்று புலம்பினார் ஒரு உதவி இயக்குனர். சினிமாவிலிருக்கும் இருபத்து நான்கு சங்கங்களில் இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் தான் சரியாகச் செயல்படவில்லை என்கிறார்கள். மற்ற சங்கங்கள் அனைத்தும் சங்க உறுப்பினர்களுக்கு நல்ல முறையில் உதவி செய்கிறது என்கிறார்கள்.

மற்றொரு உதவி இயக்குனர் பேசும் போது, ஆயிரம் பேரிடம் படுத்த விபச்சாரிகள் ஒன்று சேர்ந்து எப்படி தம் கற்பை காப்பாற்றிக் கொள்வது என்று கூட்டம் போட்டுப் பேசுவது போல இருக்கிறது என்றார். அதாவது ஏற்கனவே ஆயிரம் பேரைப் பார்த்தாகி விட்டது. அவள் கற்பைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? இப்படித்தான் இருக்கிறது இவர்கள் கூட்டம் போட்டுப் பேசுவது என்கிறார் ஒரு இயக்குனர்.

ஒவ்வொரு அசிஸ்டண்ட் இயக்குனரும் என்ன பாடுபடுகிறார்கள் என்று சினிமாவில் இருப்போருக்குத் தெரியும். படாதபாடுபட்டு ஒரு படத்தை இயக்கி விட்டு, கார்டை வைத்துக் கொண்டு சொரிந்து கொண்டுதான் இருக்கலாம் என்கிறார் ஒரு உதவி இயக்குனர்.

புது இயக்குனர்களுக்கு இப்போதெல்லாம் இயக்குனர் கார்டு கொடுப்பதே இல்லையாம். கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் பணம் கட்டி விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்களாம். இயக்குனர் சங்கத்தில் புரளும் ஏகப்பட்ட பணத்தை வைத்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகின்றார்கள். சில இயக்குனர்கள் சரி செய்யலாம் என்று இறங்கி விட்டு, போதும்டா சாமி என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டார்களாம்.

இயக்குனர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தமிழ் சினிமாக் கலைஞர்களை கேலிக்கூத்தாக்கி வருகின்றார்கள். இந்த இரு சங்கத்தினையும் சரி செய்தாலே தமிழ் சினிமா ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் நடைபோடும் என்கிறார்கள்.

உண்மையா?

– அனாதி

 தமிழ் சினிமாவை இப்படிப்பட்ட சங்கங்கள் ஆட்டி வைப்பது அயோக்கியத்தனமானது என்பது எங்கள் கருத்து. யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம், நடிக்கலாம் என்கிற போது, பிற விஷயங்களில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போல சங்கங்கள் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.


குஞ்சுவிற்கு குஷி தரும் வீடியோ

மே 7, 2013

வெகு நாட்கள் ஆகிவிட்டன. நேரமில்லாமை. மேலும் பலப்பல  வேலைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனாதி படுபிசியாகி விட்டான். பிற நண்பர்களோ வெளி நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆகவே தொடர்ந்து எழுத இயலவில்லை. முடிந்த வரைக்கும் எழுத முயல்கிறேன்.

எனக்கு அடிக்கடி சோர்வாக இருக்கும் போதெல்லாம் இந்த வீடியோவைப் பார்த்து குஷியாகி விடுவேன். அனாதியில் பதிவேதும் இல்லாத காரணத்தால் சோர்வடைந்திருக்கும் வாசகர்களுக்கு இந்த வீடியோ இலவசம்.

– குஷியுடன் குஞ்சு

வீடியோவைப் பார்க்கை குஷியைக் கிளிக் செய்யவும்

குஷி


%d bloggers like this: