பாரதப் பிரதமர் மோடி இலங்கையில் மலரபோகும் சுயாட்சி

ஏப்ரல் 14, 2013

எனது நண்பரொருவர் மெட்டீரியல் வாழ்க்கையினின்று தனியே தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்பவர். அவரைக் காணச் செல்வதுண்டு. இப்படியான ஒரு நாளில் அவர் என்னிடம் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பாரதி ஒரு சித்தன். அவனைப் போல சிவனைப் பற்றி எவரும் விவரித்திருக்க முடியாது என்றார். இதோ பாடல்

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

– பாரதியின் இப்பாடலை ஒரு நிமிடம் படித்துப் பாருங்கள். சிவனைப் பற்றி அவனின் பாடல் புல்லரிக்க வைக்கிறது இல்லையா?

அடுத்து அவர் சொன்னது தான் ரகளை.

மோடி பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆவார். அவரின் ஆட்சியில் இலங்களையில் மா நில சுயாட்சி மலரும் என்றார். இதற்கு கொஞ்ச நாள் ஆகும் என்றாரவர்.

பொறுத்திருப்போம். காத்திருப்போம்.

– அனாதி


உரசல்

ஏப்ரல் 7, 2013

எண்ணெயில் விழுந்து பொறித்த நான்கு பணியாரங்கள் அது (அங்கே) உப்பலான பணியாரங்கள் உரசும் உரசலைப் பார்த்து விட்டு, குஞ்சு குஷியாகி கும்மாளமிடுகிறான். இதோ உங்களுக்காக ஒரு பாடல். உரசல்னா உரசல் அப்படி ஒரு உரசல். என்னமா தேய்க்கிறாய்ங்கன்னு பாருங்க. ஃப்ளோர் கொதிக்குதுல்ல.

https://www.youtube.com/watch?v=NrDoSkEXZ8U

இப்போதும் தான் படமெடுக்கின்றான்கள் லூசுப் பசங்க.

பாக்கியராஜ் மாதிரி எவனாது படம் எடுக்கின்றானா? எல்லாம் தொங்கிப் போன பயலுக படமெடுத்தா உருப்படுமா? குஞ்சலி அம்மா, இப்போது அதிகாரமுள்ள ஆள் ஒருவரின் மொத்த குத்தகையில் இருக்கின்றாராம். நான் தான் அடுத்த அந்த அமைச்சர் என்கிறாராம். எனது ஃப்ரண்ட் ஒருத்தன் சீரியசா லவ்வடித்து காசைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஞானயுபதேசத்தை அனாதியின் பங்களா அருகில் குஞ்சலியும் அதிகாரமும் அடித்த ரகசியக் கூத்தைக் காட்டி உபதேசத்தை வழங்கினான் அனாதி. நண்பன் அதிரிபுதிரியாகி பேயடித்தது போல திரிந்து கொண்டிருக்கிறான். விரைவில் பத்திரிக்கைகளில் தொழிலதிபரின் மகன் திருமணம் என்ற புகைப்படம் வெளிவரும்.

பசங்களா ! சொல்லுவதைச் சொல்லி விட்டேன். புரிஞ்சுக்கோங்க.

குஞ்சுகளா, குட்டிகளா படம் பார்த்து இளித்து விட்டுச் சென்று விடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும்…

– குஞ்சு


%d bloggers like this: