இலங்கை இந்தியாவின் மாநிலமாகுமா?

சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியாவாம்: இலங்கை தூதர் கரியவாஸம் விஷமப் பிரசாரம்

புதுடெல்லி: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டங்களின் வீச்சை சமாளிப்பதற்காக, சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியாதான் என்றும், எனவே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்” என்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் டெல்லி ஊடகங்களுக்கு இமெயில்  அனுப்பி விஷம பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, டெல்லியில் பிரசாத் கரியவாஸம்,  இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பிரசாத் கரியவாஸத்தின் இ-மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு, கடந்த 19 ஆம் தேதி, இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இந்த இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “சிங்களர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வடஇந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்” என்று அவர் விஷமத்தனமாக கூறியுள்ளார்.

மேலும் வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் கரியவாஸம் ரகசியமாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸத்தின் இந்த விஷம பிரசார இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்னை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத்கரிய வாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விளக்கம் கேட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

இது தொடர்பாக .டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா,: கரிய வாஸம் தான் ஒரு வெளிநாட்டு: தூதர் என்பதை மறந்துவிட்டு அந்த நாட்டு அதிபரின் அரசியல் உதவியாளர் போல் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது அவருக்கு இது முதல் முறையல்ல. சிங்களரின் பூர்விகம் பற்றி கருத்து வெளியிட்டு மறைமுகமாக, அந்த சமூகத்தினருக்கு இந்தியா ஆதரவாக இல்லை என்ற கருத்தை பிரசாத் கரியவாஸம் திணிக்க முற்பட்டுள்ளார். அவரது பேச்சும், செயலும் உள்நோக்கம் கொண்டது என்று சந்தேகிக்கிறோம். அவரை நேரில் அழைத்து மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்” என்றார்.

நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,”இலங்கையின் நாகரிகத்தைக் காத்து வருபவர்கள் இலங்கைத் தமிழர்கள்; இலங்கை மண் தமிழர்களுக்கான உரிமை; கரியவாஸத்தின் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. இந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் மூட வேண்டும். இலங்கைக்கு இனியும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்திய ஒருமைப்பாட்டை ஒருபோதும் காப்பாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13263

One Response to இலங்கை இந்தியாவின் மாநிலமாகுமா?

  1. lcnathan சொல்கிறார்:

    KARIYA VAASAKAM SHOLD BE SENT BACK TO SRILANKA !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: