பிதுங்கும் குலுங்கும்

பிப்ரவரி 12, 2013

இப்படித்தான் தலைப்பினை எழுத ஆரம்பித்தேன். நன்றாக இல்லை என்பதால் வார்த்தைகளை கட் செய்து விட்டேன். பிதுங்கும் குண்டிகள், குலுங்கும் முலைகள் – இதுதான் உண்மைத் தலைப்பு.

இப்படியான ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் ஆண்களுக்கு என்ன தோன்றும்? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்திய சமூகம் செக்ஸை அமுக்கப்பட்ட ஒரு இருட்டறையாகவே இதுவரையில் வைத்திருக்கிறது. ஒரு பெண்ணின் முழு உடலை தரிசிக்கும் பாக்கியம் திருமணமானவனுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் அதற்கு முன்பே உடலை ஒட்டிய இவ்வகை டிரஸ்ஸில் ஒரு கோடாக பெண்ணின் முழு உடலைத் தரிசிக்கும் ஆண்களுக்கு உணர்ச்சிகள் கிளம்பத்தானே செய்யும்? உடைகள் என்பது உடலைப் பாதுக்காக்கத்தானே ஒழிய சாலையில் போகிறவனை வா வா என அழைப்பது இல்லை.

அது மட்டுமல்ல, பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும், தினசரிகளிலும் பெண்கள் பெண்கள் என்று பெண்களை வியாபாரமாக்கி, ஆடை உரித்து கோழிகளாக்கி படம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்தையும் அவரவர்களுக்கு கிடைத்த முறையில் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஆண்கள்.

விளைவு – பாலியல் குற்றங்கள். அதுவும் கொலைகள் செய்யுமளவுக்குத் துணிகின்றார்கள்.

சமூகத்தின் சீரழிவிற்கு காரணமான கார்ப்பொரேட் கம்பெனிகளின் விளம்பர உத்தியையும், அதை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செலுத்தும் மீடியாக்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்காமல் , குற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்கு தண்டனை விதிக்காமல், குற்றம் செய்பவர்களுக்குத் தண்டனை என்கிற இந்தியாவின் பாலியல் குற்றத்தண்டனைச் சட்டம் அபத்தமானது.

ஒவ்வொரு பெண்களின் மனதுக்குள்ளும் புகுந்து கொண்ட நுகர்வுக் கலாச்சாரம் இன்னும் என்னென்ன விளைவுகளை உருவாக்கப்போகின்றதோ தெரியவில்லை. இதன் முடிவு எப்படி இருக்கும் தெரியுமா? சமீபத்தில் ஸ்கேம் சிட்டி என்ற ப்ரோகிராமில் பராகுவே நாட்டில் பெண்கள் எப்படி ப்ராஸ்டிடியூட் வேலை செய்து சம்பாதிக்கின்றார்கள் என்பதை விரிவாகக் காட்டினார்கள். அந்த நிலைக்கு நம் தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி இந்தியாவின் பெண்களும் ஆண்களும் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பது நடந்து வரும் நிகழ்வுகள் காட்டி வருகின்றன.

சுய கட்டுப்பாடு இழந்து, இன்பமே வாழ்க்கை என்ற நிலைக்கு இன்றைய சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய இளைஞர்களைக் கண்ட போது அவர்கள் அடிமுட்டாள்களின் பிரதி நிதிகளாக இருப்பதைக் கண்டோம். ஆங்கிலமும், நல்ல ஸ்டைலான உடையும் இருந்தால் அவன் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வளவு ஒரு முட்டாள்தனமானது என்று பாருங்கள்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தமிழகமெங்கும் இருக்கும் டாஸ்மாக் பார்களைப் போல தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் இன்பலோகப் பெண்கள் விடுதி வரத்தான் போகிறது. பெண்கள் வீடுகளை விட்டு இவ்வகைப் விடுதிகளில் தங்கள் உடலை அம்மணமாக்கி நிற்கப் போகின்றார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தின் உச்சகட்டம் இன்னும் இந்தியாவில் முழு கட்டத்தை எட்டவில்லை. அது எட்டும் நாள் தூரத்தில் இல்லை.

– அனாதி


%d bloggers like this: