கமலின் ஆசை நிறைவேறுமா?

கமல்ஹாசனின் ஆசை விஸ்வரூபம் படத்தினை முதலில் டிடிஎச்சில் வெளியிடுவது என்பதுதான். அதற்காக டிடிஎச் கம்பெனிகளிடம் பட்ஜெட்டில் பாதி பெற்றுக் கொண்டார் என்கிறது ஒரு கோடம்பாக்கத்து ஆள்.

இந்தப் போராட்டம், அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றன வரக்கூடிய செய்திகள்.

ஒரு சினிமாவிற்காக சமூகத்தில் பிரச்சினை வருகிறது என்பது எவ்வளவு முட்டாள்தனமான மக்கள் நாம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதை விட கீழ்த்தரமான மக்கள் உலகில் இருக்கவே முடியாது. இப்படியும் ஒரு சமூகம் வாழ்கிறது என்பது மனித குலத்திற்கே அவமானம். ஆகவே தான் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுகின்றார்கள். எப்படி  வாழ வேண்டுமென்று தெரியாமல் வாழ்பவர்கள், இருந்தால் தான் என்ன? போனால் தான் என்ன? முஸ்லிம்கள் போராட்டம் அடுத்து இந்துக்கள் போராட்டம் என்று தொடர்கதையாக மாறுகிறது.

இலங்கையில் தமிழர்களைக் கொன்றார்கள். அதற்கு எவரும் போராடவில்லை. தண்ணீர் கிடைக்கவில்லை – அதற்கு போராடவில்லை. கரண்ட் தரமாட்டேன் என்கிறார்கள் – எவரும் போராடவில்லை.  ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றார்கள் – எவரும் போராடவில்லை. தமிழக நெற்களஞ்சியம் காய்ந்து போன களஞ்சியமாய் மாறப்போகிறது – எவரும் போராடவில்லை. நாள்தோறும் ஏறும் விலையேற்றம் – எவரும் போராடவில்லை. ஆனால் சினிமாவிற்காக போராடுகின்றார்கள்.

இந்தச் சினிமாவா எத்தனையோ லட்சோபலட்ச மக்களின் அடிமனதில் புதைந்து கிடக்கும் மதத்தினை சீரழிக்கப்போகிறது? மனிதனின் விடிகாலைப் பொழுதில் இருந்து தூங்கச் செல்லும் வரை மதம் அவனுடன் வழியெங்கும் செல்கிறது. இப்படி வாழ்க்கையோடு இணைந்து விட்ட மதத்தினை ஒரு சினிமாவால் என்ன செய்து விட முடியும்?

எவ்வளவு பெரிய மடத்தனமான போராட்டம் இது தெரியுமா? இப்படிப் போராடுபவர்களின் எண்ணம் தான் என்ன? அப்படிப்போராடுபவர்கள் 1000 ஆண்டுகாலம் உயிரோடு உலா வரப்போகின்றார்களா? இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றால் உன்னத மதமான இஸ்லாமும், உலகிற்கே வழிகாட்டிய இந்து மதமும் அழிந்தா போகப்போகின்றது?  பைத்தியக்காரத்தனமான செயல் இது. அமைதியான சமூகத்திடையே பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி டிவிக்களிலும், செய்திகளிலும் தன் முகம் தெரிய வேண்டுமென்பதற்கான சுய நலம் இது. மக்கள் சிந்தித்து இவர்களை உதாசீனப்படுத்தி விடல் வேண்டும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். வரக்கூடிய செய்திகள் கமலின் ஆசை நிறைவேறும் என்பது போல தெரிகிறது. முதலில் டிடிஎச் பின்னர் சினிமா தியேட்டர் என்று விஸ்வரூபம் வெளியானால் கமலின் ஆசை நிறைவேறும். ஆனால் அதற்கும் ஒரு கத்தி இருக்கிறது. கோர்ட்டின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். கோர்ட்டின் தீர்ப்பு எதிர்காலத்தின் நிகழ்வுகளுக்கு அச்சாரமாய் அமையும். அதையும் அனாதி வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

– அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: