தலைவா ! கமல்ஹாசனே !

ஜனவரி 31, 2013

குஞ்சுவிடம் படம் வருமா வராதா எனக் கேட்டபோது அவன் சொன்ன பதில் “அது அவாத்துப் பிரச்சினை” என்கிறான்.

எதற்கும் அஞ்சாத, கலங்கி வார்த்தைகளை வெளியிடாத பக்குவம் அவரிடம் வந்து விட்டது. தன் வீடே போகும் நிலையில் இருப்பினும், கலங்காது பேட்டி கொடுக்கும் பக்குவம் வந்து விட்டது.

நமது பாரதப் மன்மோகன் சிங் அவர்களிடம் இருக்கும் அந்தப் பக்குவம் இவரிடம் வந்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவாத்து ஆட்கள் தான் இந்தியாவையே வழி நடத்தி வருகின்றார்கள் என்ற காரணத்தினாலும், அவர்கள் அனைவரும் கமலுக்கு உதவி செய்வார்கள் என்பதாலும் நம் குஞ்சு சொல்கிறான்

“தலைவா ! கமல்ஹாசனே !! வருக வருக, தமிழ் நாட்டு அரசியலுக்கு வருக “ என்று அழைக்கிறான். வேறு எந்த ஒரு நடிகருக்கும் கூடாத கூட்டம் நிச்சயம் கமலுக்கு கூடும் என்கிறான் குஞ்சு.

ஆகவே கமல்ஹாசன் அவர்கள் நிச்சயம் தமிழக அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைக்கிறோம் அனாதி நண்பர்கள் குழு சார்பாக.

– அனாதி


கமலின் ஆசை நிறைவேறுமா?

ஜனவரி 29, 2013

கமல்ஹாசனின் ஆசை விஸ்வரூபம் படத்தினை முதலில் டிடிஎச்சில் வெளியிடுவது என்பதுதான். அதற்காக டிடிஎச் கம்பெனிகளிடம் பட்ஜெட்டில் பாதி பெற்றுக் கொண்டார் என்கிறது ஒரு கோடம்பாக்கத்து ஆள்.

இந்தப் போராட்டம், அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றன வரக்கூடிய செய்திகள்.

ஒரு சினிமாவிற்காக சமூகத்தில் பிரச்சினை வருகிறது என்பது எவ்வளவு முட்டாள்தனமான மக்கள் நாம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதை விட கீழ்த்தரமான மக்கள் உலகில் இருக்கவே முடியாது. இப்படியும் ஒரு சமூகம் வாழ்கிறது என்பது மனித குலத்திற்கே அவமானம். ஆகவே தான் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுகின்றார்கள். எப்படி  வாழ வேண்டுமென்று தெரியாமல் வாழ்பவர்கள், இருந்தால் தான் என்ன? போனால் தான் என்ன? முஸ்லிம்கள் போராட்டம் அடுத்து இந்துக்கள் போராட்டம் என்று தொடர்கதையாக மாறுகிறது.

இலங்கையில் தமிழர்களைக் கொன்றார்கள். அதற்கு எவரும் போராடவில்லை. தண்ணீர் கிடைக்கவில்லை – அதற்கு போராடவில்லை. கரண்ட் தரமாட்டேன் என்கிறார்கள் – எவரும் போராடவில்லை.  ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றார்கள் – எவரும் போராடவில்லை. தமிழக நெற்களஞ்சியம் காய்ந்து போன களஞ்சியமாய் மாறப்போகிறது – எவரும் போராடவில்லை. நாள்தோறும் ஏறும் விலையேற்றம் – எவரும் போராடவில்லை. ஆனால் சினிமாவிற்காக போராடுகின்றார்கள்.

இந்தச் சினிமாவா எத்தனையோ லட்சோபலட்ச மக்களின் அடிமனதில் புதைந்து கிடக்கும் மதத்தினை சீரழிக்கப்போகிறது? மனிதனின் விடிகாலைப் பொழுதில் இருந்து தூங்கச் செல்லும் வரை மதம் அவனுடன் வழியெங்கும் செல்கிறது. இப்படி வாழ்க்கையோடு இணைந்து விட்ட மதத்தினை ஒரு சினிமாவால் என்ன செய்து விட முடியும்?

எவ்வளவு பெரிய மடத்தனமான போராட்டம் இது தெரியுமா? இப்படிப் போராடுபவர்களின் எண்ணம் தான் என்ன? அப்படிப்போராடுபவர்கள் 1000 ஆண்டுகாலம் உயிரோடு உலா வரப்போகின்றார்களா? இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றால் உன்னத மதமான இஸ்லாமும், உலகிற்கே வழிகாட்டிய இந்து மதமும் அழிந்தா போகப்போகின்றது?  பைத்தியக்காரத்தனமான செயல் இது. அமைதியான சமூகத்திடையே பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி டிவிக்களிலும், செய்திகளிலும் தன் முகம் தெரிய வேண்டுமென்பதற்கான சுய நலம் இது. மக்கள் சிந்தித்து இவர்களை உதாசீனப்படுத்தி விடல் வேண்டும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். வரக்கூடிய செய்திகள் கமலின் ஆசை நிறைவேறும் என்பது போல தெரிகிறது. முதலில் டிடிஎச் பின்னர் சினிமா தியேட்டர் என்று விஸ்வரூபம் வெளியானால் கமலின் ஆசை நிறைவேறும். ஆனால் அதற்கும் ஒரு கத்தி இருக்கிறது. கோர்ட்டின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். கோர்ட்டின் தீர்ப்பு எதிர்காலத்தின் நிகழ்வுகளுக்கு அச்சாரமாய் அமையும். அதையும் அனாதி வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

– அனாதி


வெகு விரைவில் பதிவுகள் தொடரும்

ஜனவரி 28, 2013

அனாதியும் நண்பர்கள் வட்டாரமும் வேலைகளில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால் பதிவு எழுத நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எவ்வளவோ விஷயங்களை பகிர்ந்து கொண்டு, நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், நேரமின்மை தடுக்கிறது. விரைவில் எழுதுகிறோம். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

– அனாதி மற்றும் நண்பர்கள்.


சுமோ காரும் சூப்பர் தயாரிப்பாளரும்

ஜனவரி 3, 2013

முன்பொரு காலத்தில் பிரபல்யமாக இருந்த முத்துப்பல் அழகி நடிகையின் சுவாரசியமான கதை இது. நடிகைகளை படத்தில் புக் செய்யும் போது சில பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அது தொழில் ரகசியமென்பதால் வெட்டவெளியில் போட்டு உடைக்கக் கூடாது என்ற கண்டிஷனோடுதான் இச்சம்பவங்களை ஒரு ப்ரடக்‌ஷன் பாய் சொன்னார். ஆகவே அந்த தொழில் ரகசியங்கள் இப்போதைக்கு ரகசியமாய் இருக்கட்டும்.

முத்துப்பல் அழகி அவ்வளவு பிரபல்யம் இல்லாத காலம். ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிகையின் வீட்டுக்குச் செல்லும் முன்பு அவரின் மேனேஜரிடம் பேசி இருக்கின்றார்கள். அவர் பதினைந்து லட்சம் பேசியிருக்கிறார். (இன்கம்டாக்ஸ் ஆஃபீசர்களுக்கு இப்படிப்பட்ட வருமானமெல்லாம் கண்ணுக்கே தெரியாது போல, இந்தியாவின் கடனை அடைக்க வேண்டுமென்றால் நடிகை, நடிகர்களின் கணக்கை ஆராய்ந்து வரி வாங்கினாலே போதும். வடிவேலு 130 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டிருக்கிறார் என்கிறது ஒரு செய்தி. அரசு நிச்சயம் கைப்படுத்தி விடும் அல்லது அதற்குப் பிரதிபலனாக வடிவேலு ஏதாவது செய்தாக வேண்டும்)அதற்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளவில்லை.

நடிகையிடம் சென்று பேசினார்கள். ஏழு லட்சத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். சும்மாவா 30 நாளுக்கு ஏழு லட்சம் என்றால் கசக்குமா? ஆனால் நடிகைக்கோ சற்று எரிச்சல். பதினைந்து லட்சம் கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் இருந்திருக்கிறார். இதைச் சரியாக மோப்பம் பிடித்து விட்டாராம் மேனேஜர். அவுட்டோர் ஷீட்டிங் தேதி முடிவு செய்து, ஃப்ளைட் டிக்கெட் போட்டு அனுப்பி இருக்கிறார் தயாரிப்பாளர். மேனேஜர் நடிகையிடம் ஃப்ளைட் டிக்கெட்டைக் கொடுக்கச் சென்ற போது கூடவே தயாரிப்பாளரின் சொந்தக்காரரையும் அழைத்துச் சென்று அவுட்டோர் ஷூட்டிங் செல்வதற்கான ஃப்ளைட் டிக்கெட்டையும், தேதியையும் சொல்லி விட்டு வந்திருக்கிறார்கள்.

பட யூனிட் அவுட்டோர் சென்று விட, நடிகை எப்போது வருவார் என்று கேட்க தயாரிப்பாளர் நடிகையை அழைத்திருக்கிறார். நடிகை சொல்லியிருக்கிறார், என்ன சார் விளையாடுகின்றீர்களா, இதோ ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தான் ஃப்ளைட் டிக்கெட்டே கிடைத்தது, நானெப்படி வரமுடியும்? ஆகவே நாளைக்கு வருகிறேன் என்றுச் சொல்லியிருக்கிறார். போனைக் கட் செய்த தயாரிப்பாளர் மேனேஜரை போனில் பிடித்து உலகில் என்னென்ன கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனை வார்த்தைகளாலும் அவரை வறுத்து எடுத்திருக்கிறார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட மேனேஜர் சார் ஒரு நிமிடம் என்றுச் சொல்லி தயாரிப்பாளரின் சொந்தக்காரரை அழைத்துப் பேசும்படிச் சொல்ல நடிகையின் சித்து விளையாட்டு தயாரிப்பாளருக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆள் பெரிய ஆள். ஆள், படை, அம்பு என்று அதகளம் செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்.

மீண்டும் நடிகையை போனில் அழைத்து, இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் நீ ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லையென்றால் தமிழ் சினிமாவில் நீ இருக்கவே மாட்டாய் என்றுச் சொல்லி விட, நடிகைக்கு மூத்திரம் ஜட்டியோடு வழிந்து கால்மூலமாய் தரையில் பரவி விட அதை மோப்பம் பிடித்த ரசிகர்கள் (வேண்டாம் இத்துடன் நிறுத்தி விடலாம்). எங்கோ ஒரு காரைப் பிடித்து காற்றின் வேகத்துக்கும் மேலாய் ஷூட்டிங் சென்று சேர்ந்தாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் நடிகையைத் தனியாக அழைத்து “ இந்தமாதிரி இன்னொரு தடவை செய்தாயென்றால் “ என்று எச்சரித்து இருக்கிறார். அன்றிலிருந்து அந்த நடிகை ஷூட்டிங் முடியும் வரை ஜட்டியே போடவில்லையாம். ஏனென்றால் அவருக்கு தன் ஜட்டி மீது அவ்வளவு ஆசையாம். அதுவும் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய ஜட்டி, மூத்திரத்தால் நனைந்து விட்டால் என்ன ஆகும் தெரியுமா?

அடுத்து இதே நடிகையின் சுமோ காருடன் இவரையும் காதலித்த இயக்குனரின் கதையும் வரும் !

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்
உங்களின் மனம் கவர் குஞ்சு


%d bloggers like this: