மக்களை ஏமாற்றும் பிராண்டட் திருடர்கள்

வெளிச்சத்தில் – இது அக வெளிச்சம். இருண்டு கிடக்கும் உள்ளங்களில் சிறு வெளிச்சக் கீற்றை ஏற்றி வைக்கும் முயற்சியாய் அனாதியும், நண்பர்களும் பல விஷயங்களை எழுதிக் கொண்டே வருகின்றார்கள். தன்னை வாழ உதவிய, தன் நலனை பாதுகாத்த சமூகத்திற்கு உதவி செய்ய விரும்பியதன் விளைவுதான் “வெளிச்சத்தில் – அனாதி”.

தீபாவளியை முன்வைத்து பொதுமக்களிடமிருந்து பணத்தை உறுவும் சில நிறுவனங்களில் ஒரே ஒரு நிறுவனத்தின் கதை மட்டும் இங்கு உங்களுக்காக.

அவர் ஒரு துணிக்கடை முதலாளி. தமிழகமெங்கும் குளு குளு காத்து அடித்து வானத்தைப் பார்த்து நின்று கொண்டிருக்கும் துணிக்கடை முதலாளி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

வெறும் 100 ரூபாய் விலையில் விற்றாலே 100% லாபம் கிடைக்கும் உடையை 750 ரூபாய்க்கு விற்கும் அப்பணத்திலே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

ஒரு மனிதன் பிறக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை பாதுகாத்து வளர்த்து வருவது யார் தெரியுமா? பெற்றோர், உற்றார், உறவினர், சமூகம், மரபு, சமூகம், சமயம் போன்றவைதான். இந்த வரிசை கெட்டுப் போனால் மனிதனின் நிலை என்ன ஆகும் ? ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எல்லோருமே மிருகமாய் மாறி விடுவார்கள் தானே?

தன் வாழ்க்கையை கட்டமைத்து, ஒழுங்குப்பாட்டுடன் வாழ்க்கை நடத்தச் செய்த சமூகத்திற்கு மனிதனின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? சமூக வழக்கங்களை சீரழிக்க கூடாது அல்லவா?

நீங்கள் கொட்டிக் கொடுக்கும் அப்பணத்தின் திமிரில் அவர் தன் குடும்பத்திற்கும் நன்மை செய்யவில்லை. சமூகத்திற்கும் நன்மை செய்யவில்லை.

என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்கின்றீர்களா?

தன் கடைக்கு விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்தப் படங்களில் நடிக்கும் (அதுக்கு ஒத்து வரும்) மாடல்களை தன் தனி பங்களாவிற்குள் கொண்டு போய் போதை ஊசி போட்டு கூட்டுக் கலவி செய்து அதை படம் பிடித்து, இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார். பல பெரிய மனிதர்களுக்கு காசு சேர்ந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் சமூகத்தின் கட்டமைப்பை சீரழிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். குடி, குட்டி தவிர மனிதனுக்கு வேறு என்ன இன்பம் இருக்க போகிறது. தகுதியற்றவர்களிடம் சேரும் பணம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?

வெறும் 4000 ரூபாய் வாடகையில் துணிக்கடை வைத்திருப்பவனிடம் நீங்கள் துணி எடுத்தீர்கள் என்றால் அவன் தன் குடும்பத்தோடு குதூகலமாய் வாழ்வான் அல்லவா? அதை ஏன் நீங்கள் செய்ய மாட்டேன் என்கின்றீர்கள்?

பிராண்டட் பெயர் போட்ட சட்டை கிழியாதா? பிராண்டட் பெயர் போட்ட பேண்ட் நூறு வருடம் உழைக்குமா?

நண்பர்களே ! இன்னும் என்னென்னவோ சொல்ல விரும்புகிறேன். பதிவு அதை உங்களுக்குச் சொல்லும் !

சிந்தியுங்கள் !

– அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: