இந்தியாவை ஆளும் ராபர்ட் வதேரா

(இந்தியாவின் ஐ ஏ எஸ் அதிகாரி அசோக் கெம்கா)

உங்களுக்கு அனாதி நண்பர்கள் சார்பாய் ஒரு சல்யூட் சார் !

21 வருடங்களில் 43 முறை பணி இடமாற்றம் செய்த அப்பழுக்கற்ற ஒரு ஐயேயெஸ் அதிகாரி அசோக் கேம்கா. பத்திரிக்கைகளில் வெளியான சோனியாவின் மருமகன், ப்ரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவிற்கும், டிஎல் எஃப்க்கும்மான வியாபார தொடர்புகளை விசாரிக்க அசோக் உத்தரவு போட்ட அடுத்த சில மணி நேரங்களில் அவரை வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டது ஹரியான மாநில அரசு.

(ஹரியானா முதலமைச்சர் திரு பூபேந்திர் சிங் ஹூடா அவர்கள்)

தனிப்பட்டவர்களின் பிசினஸ் பற்றி யாரும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்கள் மத்திய மந்திரிகள். காங்கிரஸ் கட்சியும் அலறிப்புடைத்து அறிக்கைகள் விட்டன. இப்படியான சூழலில் திரு அசோக் கேம்காவை ராபர்ட் வதேரா நில விற்பனை விபரங்களைப் பற்றி விசாரிகக் உத்தரவிட்டவுடன் மாநில அரசு வேற்று துறைக்கு தூக்கி அடித்திருக்கும் செயல் ராபர்ட் வதேரா ஆளுமை எந்தளவுக்கு இருக்கிறது என்ற உண்மையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கார்பொரெட் கம்பெனிகளுக்காகத்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது என்பதும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

(ராபர்ட் வதேரா – சோனியாவின் மருமகன்)

டிஎல் எஃப் – ராபர்ட் வதேராவின் இல்லீகல் பிசினஸ் டீல்களை விசாரித்தாலே நடவடிக்கை எடுக்கும் ஹரியானா அரசு ஓட்டுப் போட்ட மக்களுக்காக சேவை செய்யாமல் சோனியா காந்தியின் மருமகனுக்குச் சேவை செய்யும் பாங்கு மெச்சிட வேண்டிய ஒன்று.

மக்கள் விரோதிகள் நாட்டை ஆளுகின்றனர் என்றுச் சொல்லும் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஒவ்வொரு அறிக்கையும் காங்கிரஸ் கருங்காலிகள் பற்றி வெளிச்சமிடுகிறது. ஒரு அமைச்சர் சொல்கிறார் 70 லட்சமெல்லாம் ஒரு பணமா என்று. ஊனமுற்றவர்களின் காசைக் கூட ஊழல் செய்யும் ஒருவர் இந்தியாவின் சட்ட அமைச்சர். ஊனமுற்றவர்களைத் தெருவில் பார்த்தாலே மனசு இறங்கும். அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கூட ஊழல் செய்திருக்கும் மத்திய அமைச்சரைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வர முடியும். இப்படியும் ஒரு மனிதரா?

இதையும் மூடி மறைக்க உதார் விடும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி நாம் என்ன சொல்ல இருக்கிறது?  இந்த லட்சனத்தில் எந்த போலீஸ்காரன் இவரைப் பற்றி விசாரிக்க முடியும்? சிபிஐதான் விசாரிக்குமா?  சுப்ரீம் கோர்டுத்தான் இது பற்றி விசாரிக்க வேண்டும். உண்மை தெருவில் கிடக்கிறது. ஊழல் ஆட்சி செய்கிறது.

நல்ல அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யக்கூட அனுமதிக்காத ஊழல் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும், சாக்கடையில் நெளியும் புழுக்களை விட நாற்றமெடுக்கும் மனது கொண்ட அரசியல்வாதிகளை இந்திய மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

செய்தி இணைப்பு : http://www.firstpost.com/india/cry-ashok-khemka-and-drown-india-in-your-tears-493051.html?utm_source=frontpagepicks&utm_source=article_mumbai

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: