FDI vs Block Money

ஒக்ரோபர் 31, 2012

இன்றைய தினமணி தலையங்கத்தில் “ நிஜப் பிரதமர்” யார் என்று கேள்வி எழுப்பி இருந்தார் ஆசிரியர். ஆசிரியருக்கு இந்த விஷயம் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

பத்திரிக்கைகள் மட்டும் தனியாகவா இயங்குகின்றன ? அவைகளுக்கும் ஏதாவதொரு கார்பொரேட் கம்பெனியின் ஆதரவு இல்லையென்றால் ஒவ்வொரு பத்திரிக்கையும் நாலே நாளில் மூடு விழா கண்டு விடும்.

உண்மையான ஜன நாயகம் யாருக்கு இருக்கிறது என்றால் அது கோடீஸ்வர கம்பெனி முதலாளிகளுக்கு மட்டும் தான் என்பதை ஏன் படித்த மக்கள் கூட புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள் என்பது எனக்கு இதுகாறும் புரியவே இல்லை.

அனாதியில் பல பதிவுகளில் இந்தியா மட்டுமல்ல உலகமே கார்பொரேட் முதலாளியின் ஆசைப்படியும், அம்முதலாளிகளின் அடிப்பொடிகளான மாஃபியாக்கும்பல்களாலும் தான் ஆளப்படுகின்றன என்று மறைபொருளாய் எழுதி இருக்கிறோம்.

தினமணி ஆசிரியர் இப்போதுதான் கண்டுபிடித்தது போல தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார். வேடிக்கையாக இருக்கிறது.

ஃபாரின் இன்வெஸ்ட்மெண்ட் ஆக்ட் கருப்பு பணத்தை வொயிட் பணமாக மாற்றும் பெரிய முயற்சிக்காக உருவானது. இந்திய அரசுக்குத் தெரியாத மர்மமா இருக்கப் போகிறது. அவர்கள் என்ன முட்டாள்களா?

இந்தியாவை ஆள சில திருட்டு அரசியல்வாதிகளின் அல்லக்கை கம்பெனிகள் முயற்சிக்கின்றன. அதற்கு கள்ளத்தனமாக பெறப்பட்ட பணத்தை அஃபீசியலாக இந்தியா கொண்டு வந்து மேலும் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனமாக உருவாக்கி இந்தியாவை ஆள உருவாக்கப்பட்டதே “ எஃப்டிஐ”.

எஃப்டிஐ இந்தியாவிற்கு தேவையே இல்லை என்கிறார் பிரபல பொருளாதார எழுத்தாளர் திரு குருமூர்த்தி. அமெரிக்காவைப் போல இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றார்கள் என்றும் சொல்கிறார் அவர்.

வங்கிகளிலும், தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்களை “ஒன்றுக்குமே உதவாத, மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்களும், திருடர்களும்” விளையாடும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து, மக்களிடமிருந்து பணத்தை திருட முயலும் உத்தியே எஃப்டிஐ என்கிறார் அவர்.

பங்குச் சந்தை என்பது முழுவதுமான ஏமாற்று வேலை என்பதை அதில் முதலீடு செய்து தற்கொலை செய்து கொண்டவர்களும், ஏமாந்து போய் பணத்தை இழந்தவர்களும் அறிவார்கள். விஷயம் தெரிந்து விலகிக் கொண்டவர்கள் தப்பி விட்டார்கள்.

இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தியாவை சீரழிக்கிறது. மீண்டும் ஒரு சுதந்திரப் போர் “ சுதேசி” என்கிற கொள்கையோடு ஆரம்பிக்கப்படும். அப்போது மீண்டும் ஒரு பாரதப் போர் வெடிக்கத்தான் போகிறது. அப்போர் கார்பொரேட் கம்பெனிகளுக்கும் இந்தியாவை நேசிக்கும் உண்மையாளருக்குமிடையே நடக்கும். அரசியல்வாதிகள் அனைவரும் கம்பெனிகளுக்குள் முதலாளிகளாய் அமர்ந்திருப்பர்.

காலம் அனைவரையும் மாயையின் பிடியில் தள்ளி விட்டிருக்கிறது. தீயவர்களுக்கான காலமாய் இந்தியா தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது.

– அனாதி


தேமுதிக எம்எல்ஏக்களும் சுயநலமும்

ஒக்ரோபர் 31, 2012

சமீப காலமாக சில தேமுதிக எம் எல் ஏக்கள் அலப்பறை செய்து வருவது செய்தி தாள்களில் பரபரப்பாய் விவாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் இப்பிரச்சினை வரக்காரணம் “மின்வெட்டினை” திசை திருப்ப என்கிறார்கள் பலர்.  மின்வெட்டு மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினை. மின்வெட்டு நடக்கும் போது வெளியில் சொல்ல முடியாத அர்ச்சனைகளை அர்சிக்கின்றார்கள் மக்கள். மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் மக்களின் துயரத்தை அதிமுக அரசு கிஞ்சித்தும் கண்டு கொள்ளவே இல்லை. அதன் பலனை அவர்கள் அறுப்பார்கள்.

ஜெயலலிதா ஆட்சி வரலாற்றில் சில காங்கிரஸ்ஸார் ஒன்று சேர்ந்து ஜெயா காங்கிரஸ் என்று ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கேயிருக்கின்றார்கள் என்று பார்த்தோமென்றால் “பாவம்”.

தேமுதிக எம் எல் ஏக்களாக இருப்பதால் தான் இந்த அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது. அவர்கள் எம் எல் ஏக்களாக இல்லையென்றால் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்குமா? எம் எல் ஏ என்ற மூன்றெழுத்து இல்லையென்றால் அதிமுகவில் இவர்களை யார் அழைத்து வைத்து “அரப்பு” தேய்க்கப் போகின்றார்கள். இந்த உண்மை அவர்களுக்குத் தெரியாத ஒன்று அல்ல.

தேமுதிகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் அதிமுகவின் வலைதான் மேலே கண்ட நிகழ்ச்சிகள். இதன் பலன் என்னவாக இருக்கும்? அடுத்த தேர்தலில் அதிமுகவிற்கு ஒரு சீட்டுக் கூட கிடைக்காது.

அதிமுக விமர்சனங்களைக் கண்டு பயப்படுகிறது. இது தேவையே இல்லாத அச்சம். ஜன நாயக நாட்டில் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எவரும் சுத்த அரசியல் செய்ய முடியாது. அங்காங்கே சில தீயவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களால் தான் உலகமே இயங்கும். அதிமுகவின் இந்தச் செயல் அவர்களுக்கே தீங்காய் முடியப்போகிறது. பார்த்துக் கொண்டே இருங்கள்.

– பஞ்சு


இந்தியாவை ஆளும் ராபர்ட் வதேரா

ஒக்ரோபர் 17, 2012

(இந்தியாவின் ஐ ஏ எஸ் அதிகாரி அசோக் கெம்கா)

உங்களுக்கு அனாதி நண்பர்கள் சார்பாய் ஒரு சல்யூட் சார் !

21 வருடங்களில் 43 முறை பணி இடமாற்றம் செய்த அப்பழுக்கற்ற ஒரு ஐயேயெஸ் அதிகாரி அசோக் கேம்கா. பத்திரிக்கைகளில் வெளியான சோனியாவின் மருமகன், ப்ரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவிற்கும், டிஎல் எஃப்க்கும்மான வியாபார தொடர்புகளை விசாரிக்க அசோக் உத்தரவு போட்ட அடுத்த சில மணி நேரங்களில் அவரை வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டது ஹரியான மாநில அரசு.

(ஹரியானா முதலமைச்சர் திரு பூபேந்திர் சிங் ஹூடா அவர்கள்)

தனிப்பட்டவர்களின் பிசினஸ் பற்றி யாரும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்கள் மத்திய மந்திரிகள். காங்கிரஸ் கட்சியும் அலறிப்புடைத்து அறிக்கைகள் விட்டன. இப்படியான சூழலில் திரு அசோக் கேம்காவை ராபர்ட் வதேரா நில விற்பனை விபரங்களைப் பற்றி விசாரிகக் உத்தரவிட்டவுடன் மாநில அரசு வேற்று துறைக்கு தூக்கி அடித்திருக்கும் செயல் ராபர்ட் வதேரா ஆளுமை எந்தளவுக்கு இருக்கிறது என்ற உண்மையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கார்பொரெட் கம்பெனிகளுக்காகத்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது என்பதும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

(ராபர்ட் வதேரா – சோனியாவின் மருமகன்)

டிஎல் எஃப் – ராபர்ட் வதேராவின் இல்லீகல் பிசினஸ் டீல்களை விசாரித்தாலே நடவடிக்கை எடுக்கும் ஹரியானா அரசு ஓட்டுப் போட்ட மக்களுக்காக சேவை செய்யாமல் சோனியா காந்தியின் மருமகனுக்குச் சேவை செய்யும் பாங்கு மெச்சிட வேண்டிய ஒன்று.

மக்கள் விரோதிகள் நாட்டை ஆளுகின்றனர் என்றுச் சொல்லும் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஒவ்வொரு அறிக்கையும் காங்கிரஸ் கருங்காலிகள் பற்றி வெளிச்சமிடுகிறது. ஒரு அமைச்சர் சொல்கிறார் 70 லட்சமெல்லாம் ஒரு பணமா என்று. ஊனமுற்றவர்களின் காசைக் கூட ஊழல் செய்யும் ஒருவர் இந்தியாவின் சட்ட அமைச்சர். ஊனமுற்றவர்களைத் தெருவில் பார்த்தாலே மனசு இறங்கும். அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கூட ஊழல் செய்திருக்கும் மத்திய அமைச்சரைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வர முடியும். இப்படியும் ஒரு மனிதரா?

இதையும் மூடி மறைக்க உதார் விடும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி நாம் என்ன சொல்ல இருக்கிறது?  இந்த லட்சனத்தில் எந்த போலீஸ்காரன் இவரைப் பற்றி விசாரிக்க முடியும்? சிபிஐதான் விசாரிக்குமா?  சுப்ரீம் கோர்டுத்தான் இது பற்றி விசாரிக்க வேண்டும். உண்மை தெருவில் கிடக்கிறது. ஊழல் ஆட்சி செய்கிறது.

நல்ல அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யக்கூட அனுமதிக்காத ஊழல் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும், சாக்கடையில் நெளியும் புழுக்களை விட நாற்றமெடுக்கும் மனது கொண்ட அரசியல்வாதிகளை இந்திய மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

செய்தி இணைப்பு : http://www.firstpost.com/india/cry-ashok-khemka-and-drown-india-in-your-tears-493051.html?utm_source=frontpagepicks&utm_source=article_mumbai

– பஞ்சு


நிர்வாண உடையில் காந்தி !

ஒக்ரோபர் 15, 2012

அனாதி, வயிற்றில் அடிக்கின்றார்களே காங்கிரஸ்காரர்கள்? ஒன்றுமே சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பதவிச் சுகத்தை அனுபவிக்கிறாரே கருநாநிதி? – உங்களின் பதில் என்ன? – ஆனந்தன், சென்னை.

தலைப்பிற்காக வருந்துகிறேன். தமிழ் நாட்டுக்கு வந்த காந்தியார், மதுரை உழவனின் உடையைப் பார்த்து விட்டு கால்வாசி உடம்பை மறைக்கும் உடைய அணிய ஆரம்பித்தார் என்கிறது வரலாறு. ஆனால் இன்றைக்கு காந்தியார் இருந்திருந்திருந்தால் உடையேதும் இல்லாமல் நிர்வாணமாய்த்தான் இருந்திருப்பார்.

காங்கிரஸ் இந்திய மக்களை கொல்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஊழல் ஊழல் ஊழல், காங்கிரஸ் கட்சியின் கொள்கை இந்தியாவை வெளி நாட்டு முதலீட்டாளரிடம் அடகு வை, இந்திய மக்களின் பணத்தை வெளி நாட்டுக்காரன் கொள்ளை அடிக்க சட்டமியற்று என்பதுதான்.

வெளி நாட்டு முதலீட்டுக்காரன் இந்தியாவில் வந்து கொட்டி விட்டா போவான்? இந்த சிறிய விஷயம் கூட தெரியாதா அகில உலக மேதாவி நம் பாரத நிதிமந்திரிக்கு?

ஊழல் ஊழல் என்று எங்கு பார்த்தாலும் பேச்சாய் இருக்கிறதே அதை திசை திருப்பத்தான் பெட்ரோல் விலை ஏற்றம், சிலிண்டர் விலை ஏற்றம் மற்றும் இன்ன பிற ஏற்றங்கள் எல்லாம். நம் நிதி மந்திரிக்குத் தெரியாதா 900 ரூபாய்க்குச் சிலிண்டர் விற்றால் மக்களின் பாடு என்ன ஆகும் என்று?

பெட்ரோல், டீசல் விலை ஏறினால் விலை வாசி உயராது என்று அவர்களுக்குத் தெரியாதா? எல்லாம் தெரிந்து கொண்டுதான் இந்த வேலையைச் செய்கின்றார்கள்.

பாரதப் பிரதமர் இந்தியாவின் இடி அமீன், ஹிட்லர், போல் பட், முசோலினிக்கு அடுத்த வரிசைக்கு எப்போதே வந்து விட்டார். கொடுங்கோல் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை மேலும் மேலும் பிரச்சினையில் கொண்டு போய் தள்ளத்தான் போகின்றது. தன் அழிவைத் தானே தேடிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு அழிவுகாலம் ஆரம்பித்து விட்டது.

பெரியார் சொல்வார் “காங்கிரஸ் கருங்காலிகள்” என்று. அது உண்மைதான் என்கிறது தற்போது அவர்கள் நடத்தி வரும் ஆட்சியின் லட்சணம்.

திமுகவைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. நாளை திமுகவின் தலைவர் திருமதி கனிமொழி என்கிறது ஜோசியக் குருவி ஒன்று. ஆகையால் கருணா நிதியை நாம் விட்டு விடுவோம். அவர்களுக்காக ஆப்பை அவர்களே வைத்துக் கொள்வார்கள்.

தமிழகத்துக்குத் தேவை புதிய தலைமை. அது வைகோவாக இருப்பின் தமிழர்களின் வாழ்வு மலரும். இல்லையேல் கருகி விடும் !

– அனாதி


குயாநிதி குழகிரி கைது எப்போது?

ஒக்ரோபர் 14, 2012

மதுரையின் தஞ்சா நெஞ்சன் அவர்களின் அருமைப் புதல்வன் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்று தெரியாமல் போலீஸ் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது என்று எவராவது சொன்னால் நம்ப முடியுமா?

சாதாரணமானவர்கள் குற்றம் செய்தால் குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து உட்கார வைத்து விடுவார்கள். அவர்களாஇ காவல்துறை எப்படியெல்லாம் மிரட்டுவார்கள்? ஆனால் மலையை முழுங்கி ஏப்பம் விட்ட கூட்டத்தினரை விசாரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது காவல்துறை. சாமானியனுக்கு ஒரு சட்டம், மதுரை தஞ்சா நெஞ்சன் குடும்பத்தாருக்கு ஒரு சட்டமா? தஞ்சா நெஞ்சன் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகியா? நாட்டுக்கு உழைத்த ராணுவ வீரனா? ஏன் இந்தப் பாராபட்சம்?

சட்டமே உன் கண்ணுக்கு ஏழைகள் மட்டுமே தெரியுமா?

தஞ்சா நெஞ்சனின் மகனை கைது செய்ய போலீஸ் ஒரே ஒரு உத்தரவு போட்டால் போதும். அலறி அடித்துக் கொண்டு வந்து விடுவான்கள்.

அது என்ன உத்தரவு?

“அன்கவுண்டர்”

மதுரையை மீட்ட தமிழக அரசு என்ன செய்யப் போகின்றது? பொறுத்திருந்து பார்ப்போம்.

– பஞ்சு


சுந்தரபாண்டியனும் தமிழக பெண்களும்

ஒக்ரோபர் 9, 2012

டிவி ஒன்றில் திறந்த வாய் மூடாத ஒரு லூசு காம்பியர், கூட பெண்களைப் பற்றியே கேள்விக் கேட்கும் ஒரு ஆண் லூசு ஒன்று. இத்துடன் சசிகுமார், லட்சுமிமேனன், சூரி.

எந்த டயலாக் பிடிக்கும்? அந்த சீன் எடுக்கும் போது எப்படி இருந்தது? என்றெல்லாம் அதிரி புதிரியான கேள்விகளைக் கேட்டு லூசுகள் இரண்டும் லூசுத்தனமாகவே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதோ கீழே இன்றைய இளம் பெண்கள் இந்த நடிகர்களிடம் கேட்ட கேள்விகளைப் பாருங்கள்.

1) எல்லா படத்திலும் எப்படி ஸ்மார்ட்டா இருக்கீங்க?
2) எப்போ தாடி இல்லாமல் நடிப்பீங்க?
3) அத்தை பொண்ணை மட்டுமா கலாய்ப்பீங்களா? எங்களை கலாய்க்க மாட்டீங்களா?
4) சசிக்குமாருக்கு பிடித்த சசிகுமார் யார்?
5) பாலா, அமீர், சமுத்திரகனி யார் படத்தில் நடிப்பது?
6) சார் ? உங்களுக்கு புரபோஸ் பன்ன தைரியம் இருக்கா சார்?
7) நீங்க சுமார் எத்தனை பரோட்டா சாப்பிடுவீங்க?
8) லட்சுமி மேனனுக்கு பிடித்த பாய்ஸ் கேரளா? தமிழ் நாடா?
9) உங்களுக்குப் பிடித்த இயக்குனர் சசிகுமாரா? பிரபாகரனா?
10) எந்த ஹீரோயின் உங்கள் கூட நடிக்க விரும்புவீர்கள்?

இது போல இன்னும் எண்ணற்ற கேள்விகளைக் கேட்டார்கள் வருங்கால அம்மாக்கள். பெண்களை இப்படி அழைப்பதை சிலர் எரிச்சலுடன் படிக்கலாம். இதைத் தவிர வேறு என்னவிதமான வாழ்க்கையை ஆணோ அல்லது பெண்ணோ வாழப்போகின்றார்கள். ஆண்கள் அப்பாக்கள் ஆவதும், பெண்கள் அம்மாக்கள் ஆவதும் தானே சிருஷ்டி கர்த்தாவின் நோக்கம்?

மிகப் பெரிய மால்களில் சென்று பாருங்கள். குண்டி பிதுங்கி, முலைகள் பிதுங்க நடக்கும் எதிர்கால அம்மாக்களின் உலாக்களை. இவர்கள் அம்மாக்கள் ஆன பிறகு கோர்ட்டின் வாசற்படிகளில் சென்று பாருங்கள். குத்தீட்டியாய் முலைகள் நிற்கும் டிசர்ட்டுகளைப் போட்டுக் கொண்டு டைவோர்ஸ் வாங்கிச் செல்கின்றார்கள்.

சினிமாவில் நடிக்கும் நடிகனும், நடிகையும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மேக்கப் போட்டுக் கொண்டு, வியர்த்து வழியாமல் இருக்க பேன், ஏசிக்களில் உட்கார்ந்து கொண்டு நடிக்கின்றார்கள். இவர்களைப் போலவே மனிதர்களும் வாழ வேண்டுமென்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

-பஞ்சு


%d bloggers like this: