திருடர்களே பெரியவர்கள்

பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக் கள் என்று போலீஸார் திரட்டி இருக்கும் முதல் பட்டியல் அது!

‘பி.ஆர்.பி., மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்து விவரங்களை பக்காவாய்த் திரட்டி விட்டது போலீஸ். தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட பி.ஆர்.பி. மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிலங்கள் மட்டுமே 24 ஆயிரம் ஏக்கர்கள். பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மொத்தம் 4,723. மொத்த நிலத்தின் அளவு 6,680.68 ஏக்கர், இதுதவிர, பி.ஆர்.பி. பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 607; நிலத்தின் அளவு 5,579.27 ஏக்கர், பி.ஆர்.பி-யின் மனைவி செல்வி பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 4; நிலத்தின் அளவு 215.82 ஏக்கர், மகன் சுரேஷ்குமார் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 209; நிலத்தின் அளவு 2317.34 ஏக்கர், இன்னொரு மகன் செந்தில்குமார் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 18; நிலத்தின் அளவு 150.34 ஏக்கர், அக்காள் மகன் காந்தியின் பெயரில் உள்ள டாக்குமென்டுகள் 276; நிலத்தின் அளவு 5,477.79 ஏக்கர், அக்காள் மகன் முருகேசன் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 124; நிலத்தின் அளவு 915.51 ஏக்கர், அக்காள் மகன் அமரேசன் பெயரில் உள்ள டாக்கு மென்ட்கள் 66; நிலத்தின் அளவு 697.27 ஏக்கர், இன்னொரு அக்காள் மகன் தவச்செல்வன் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 11; நிலத்தின் அளவு 147.12 ஏக்கர், அக்காள் மகன் தெய்வேந்திரன் பெயரில் 2 டாக்குமென்ட்கள் நிலத்தின் அளவு 86,382 சதுர அடி, அக்காள் மகன் கணேசன் பெயரில் 67 டாக்குமென்ட்கள்; நிலத்தின் அளவு 536.46 ஏக்கர், அக்காள் மகன் ராஜா பெயரில் 32 டாக்குமென்ட்கள், நிலத்தின் அளவு 1261.29 ஏக்கர்’ என் கிறது அந்த அறிக்கை! (  நன்றி : ஜூனியர் விகடன் )

– பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிச்சாமிக்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதை. சமூகத்திலும் சரி, உயர் மட்டத்திலும் சரி. கைதாகும் வரை அவருக்கு எல்லாமும் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. ஒரு திருடனுக்கு சமூகம் எப்போது மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டதோ அன்றைக்கே சமூகத்தின் எண்ணம் சீரழிந்து போய் விட்டது என்கிறது உண்மை.  ஒரு செண்ட் நிலம் வாங்க நேர்மையான முறையில் உழைப்பவன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

வீடு வாங்கவும், கார் வாங்கவும் தங்கள் அருமை புத்திரர்களை பலி கொடுத்து, இறுதியில் ஏமாந்து நிற்கும் லட்சோப லட்ச பெற்றோர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

திருடர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும், ஏமாற்றுக்காரர்களுக்கும், சுய நலவாதிகளுக்கும் இச்சமூகம் கொடுக்கும் அளப்பறிய மரியாதையை என்றைக்கு கொடுக்க மறுக்கிறதோ அன்றைக்கு மனிதர்களின் வாழ்வில் ஏற்றம் வரும்.

இவன் திருடன், இவன் ஊழல்வாதி, இவன் ஏமாற்றுக்காரன், இவன் சுய நலக்காரன் என்று அடையாளம் தெரிந்து வாழ முற்படும் வரை இப்படிப்பட்ட திருடர்களின் வாழ்க்கை பிரகாசமானதாய் தான் இருக்கும்.

குறிப்பு : பி.ஆர்.பியை நம் சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வருடம் சிறையில் கிடப்பார். பின்னர் மேலே இருக்கும் சொத்துக்களின் பட்டியலில் ஒன்று இரண்டு குறையலாம். செட்டில் ஆகி விடுவார். லாட்டரி மாஃபியாக்கும்பலின் கார்ட்டின் இன்றைக்கு சுகமாய்த்தானே இருக்கிறார். யாரால் என்ன செய்ய முடிந்தது அவரை.

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: