கூடங்குளம் அணு உலை கொடுமையின் உச்சம்

மனித சமூகம் என்பது கொடுத்தும் பெறுவதும் ஆன பரிமாறுதல்களில் தான் இயங்கும். குழந்தை தன் பெற்றோரிடம் பெறும், குழந்தை வளர்ந்து பெரியவரான பின், தன் பெற்றோருக்கு தான் பெற்றதைத் திரும்ப கொடுக்கும்.

மனித வாழ்வின் அடிப்படையே இதுதான். தான் வாழும் சமூகம் நன்றாக இருந்தால் தான் மனித குலம் தழைத்து, சீரும் சிறப்புமாய் வாழ முடியும். தன் சமூகத்திற்கே கேடு செய்ய நினைக்கும் நம்பிக்கைத் துரோகிகள் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் முதன்மையானவர்கள் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும், பணப் பித்து பிடித்தலையும் கார்பொரேட் முதலாளிகளும்தான்.

இம்மூவர்களால் தான் உலக மக்கள் மாபெரும், சொல்லொண்ணாத் துன்பங்களில் அமிழ்த்தப்படுகின்றார்கள்.

நேற்று இரவு புதிய தலைமுறையில் நேர்படப்பேசுவில் பேசிய அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் பேசியது சுத்தமான மக்கள் விரோத, பாசிசத்தன்மை வாய்ந்த, திமிர்த்தனமும், தடித்தனமும் நிரம்பிய எகத்தாளப் பேச்சு.

கூடங்குளம் அணு உலைக் கழிவை என்ன செய்யப்போகின்றார்கள் என்று கேளுங்கள். அதைப் புதைக்க என்ன செலவு ஆகும்? அணுக்கழிவுகளை இவரின் வீட்டின் அடியில் புதைத்து வைத்துக் கொள்வாரா? அல்லது அதன் மேலே படுத்து தூங்குவாரா? இப்படியும் ஒரு மனிதரா என்று அவர் பேசப்பேச ரத்தம் கொதித்தது. உலகமே அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அணுவினால் ஆக்கத்தை விட அழிவே அதிகம் என்பது படித்த அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் எதை இவர் மறுக்கப் போகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகள் மாற்றத்த்துக்கு உரியன மிஸ்டர் பொன்ராஜ். அது முற்றிலும் உண்மையான அறிவு அல்ல.

கல்பாக்கம் மக்கள் இன்று நோயில் செத்துக் கொண்டிருக்கின்றார்களே அதற்கு என்ன சொல்வீர்கள்? இப்படியும் ஒரு மனித குல விரோத பேச்சினைப் பேசி நீங்கள் என்ன சாதிக்கப் போகின்றீர்கள். உங்களுக்கு மட்டும் இறைவன் 1000 வருட வாழ்க்கையா கொடுக்கப் போகின்றான். மனித சமூகத்திற்கு உதவி செய்ய வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் கூட இருக்கலாம் அல்லவா?

அணு உலை பாதுகாப்பானது என்கின்றீர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் அணு உலைக்குள்ளே போய் உட்கார்ந்து கொள்வீர்களா? இல்லை உங்களின் அறிஞர் விஞ்ஞானி அப்துல்கலாம் கூடங்குளத்தில் குடியேறுவாரா? அணு உலை பாதுகாப்பானது என்றுச் சொல்லும் பேர்வழிகள் கூடங்குளத்தில் குடியேறுங்களேன். அப்படிக் குடியேறி மக்களின் சந்தேகத்தைப் போக்குங்களேன் பார்ப்போம். யாரும் அப்பக்கமாய் என்றைக்கும் போக மாட்டீர்கள்.

பயத்துடன் இருக்கும் மக்கள் போராடினால் அது சட்டவிரோதமா? மக்கள் நல் வாழ்க்கை வாழத்தான் சட்டம் இருக்கிறதே ஒழிய அவர்கள் அழிக்கப்பட அல்ல.

இப்படித்தான் ஹிட்லர் பேசினான், இப்படித்தான் முசோலினி பேசினான், இப்படித்தான் இடி அமீன் பேசினான். இவரும் இப்படித்தான் பேசுகிறார்.

இதோ அந்த மகானுபாவன் !

– பஞ்சு

One Response to கூடங்குளம் அணு உலை கொடுமையின் உச்சம்

  1. palanikumar சொல்கிறார்:

    also manmohan and sonia with their families reside there and prove it is harmless.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: