கலைஞர் யார்?

கலைஞர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கின்றன. வரலாறு மறைக்கப்பட்டால் அல்லது அழிக்கப்பட்டால் ஒழிய கலைஞர் மீது இருக்கும் அத்தனையும் மறைந்து விடப்போவதில்லை. ஒரு அரசியல் தலைவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு வரலாறாய் நிற்கிறார் கலைஞர்.

இதோ கலைஞர் யார் எப்படிப்பட்டவர் என்பதினை அன்றே கண்ணதாசன் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

நன்றி : ஒரு ஊழியனின் குரல்

http://ramaniecuvellore.blogspot.in/2012/09/blog-post_3.html

கலைஞர் கருணாநிதியை
கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை.
கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம்
உள்ளூர மகிழ்ந்திருப்பார். 

கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்…

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்…

அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: