எல்லையில்லாக் கடுப்பில் குஞ்சு

செப்ரெம்பர் 27, 2012

”கபோதிகள், நாசாமாய் போகின்றவன்கள், நாறப்பயல்கள், கம்மனாட்டிகள் அய்யோ அய்யோ என் வயிறு எரிகிறது” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தான் குஞ்சு.

இந்தக் குஞ்சுப் பயல் எதுக்கு இப்படி புலம்புகின்றான் என்று எனக்குத் தெரிந்தாலும் மேட்டர் என்னவென்று புரியவில்லை.

”ஹோட்டலுக்கு வரவில்லை” என்று புலம்பித்தள்ளினான் அனாதி. ”திடீர் திடீரென்று லீவு போடுறாண்டா குஞ்சு” என்று அனாதி எரிச்சல் பட்டான். ”இதுக்குத்தாண்டா நண்பர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை” என்று வேறு சொல்லி தலையில் அடித்துக் கொண்டான்.

குஞ்சுக்கு போனைப் போட்டால், மேலே இருக்கும் முதல் வரியை விடாமல்  உச்சரித்துக் கொண்டே இருக்கின்றான். என்ன கருமம்டா இதுன்னு தெரியவில்லை.

ஒரு மெசேஜ் போட்டேன். அதற்கு அவனின் ஒரே ஒரு வார்த்தை பதில் மெசேஜ் என்ன தெரியுமா?

HINA 

 

எரிச்சலில் போனைப் போட்டு “ஏண்டா இது உனக்கே அதிகமா தெரியவில்லை? “ என்றேன்.

“போடா போடா லூசு பஞ்சு, நான் ஆம்பளைடா, வேறென்னடா தகுதி வேணும்னு?” கேட்டான்.

இன்னும் புரியாதவர்கள் கீழே இருக்கும் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். குஞ்சு ஓவரா போறான் பார்த்தீர்களா? குஞ்சு எதுக்கு வயித்தெரிச்சல் படுகின்றான் என்று பாருங்கள் நண்பர்களே?

– பஞ்சு


திருடர்களே பெரியவர்கள்

செப்ரெம்பர் 27, 2012

பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக் கள் என்று போலீஸார் திரட்டி இருக்கும் முதல் பட்டியல் அது!

‘பி.ஆர்.பி., மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்து விவரங்களை பக்காவாய்த் திரட்டி விட்டது போலீஸ். தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட பி.ஆர்.பி. மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிலங்கள் மட்டுமே 24 ஆயிரம் ஏக்கர்கள். பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மொத்தம் 4,723. மொத்த நிலத்தின் அளவு 6,680.68 ஏக்கர், இதுதவிர, பி.ஆர்.பி. பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 607; நிலத்தின் அளவு 5,579.27 ஏக்கர், பி.ஆர்.பி-யின் மனைவி செல்வி பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 4; நிலத்தின் அளவு 215.82 ஏக்கர், மகன் சுரேஷ்குமார் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 209; நிலத்தின் அளவு 2317.34 ஏக்கர், இன்னொரு மகன் செந்தில்குமார் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 18; நிலத்தின் அளவு 150.34 ஏக்கர், அக்காள் மகன் காந்தியின் பெயரில் உள்ள டாக்குமென்டுகள் 276; நிலத்தின் அளவு 5,477.79 ஏக்கர், அக்காள் மகன் முருகேசன் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 124; நிலத்தின் அளவு 915.51 ஏக்கர், அக்காள் மகன் அமரேசன் பெயரில் உள்ள டாக்கு மென்ட்கள் 66; நிலத்தின் அளவு 697.27 ஏக்கர், இன்னொரு அக்காள் மகன் தவச்செல்வன் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 11; நிலத்தின் அளவு 147.12 ஏக்கர், அக்காள் மகன் தெய்வேந்திரன் பெயரில் 2 டாக்குமென்ட்கள் நிலத்தின் அளவு 86,382 சதுர அடி, அக்காள் மகன் கணேசன் பெயரில் 67 டாக்குமென்ட்கள்; நிலத்தின் அளவு 536.46 ஏக்கர், அக்காள் மகன் ராஜா பெயரில் 32 டாக்குமென்ட்கள், நிலத்தின் அளவு 1261.29 ஏக்கர்’ என் கிறது அந்த அறிக்கை! (  நன்றி : ஜூனியர் விகடன் )

– பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிச்சாமிக்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதை. சமூகத்திலும் சரி, உயர் மட்டத்திலும் சரி. கைதாகும் வரை அவருக்கு எல்லாமும் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. ஒரு திருடனுக்கு சமூகம் எப்போது மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டதோ அன்றைக்கே சமூகத்தின் எண்ணம் சீரழிந்து போய் விட்டது என்கிறது உண்மை.  ஒரு செண்ட் நிலம் வாங்க நேர்மையான முறையில் உழைப்பவன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

வீடு வாங்கவும், கார் வாங்கவும் தங்கள் அருமை புத்திரர்களை பலி கொடுத்து, இறுதியில் ஏமாந்து நிற்கும் லட்சோப லட்ச பெற்றோர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

திருடர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும், ஏமாற்றுக்காரர்களுக்கும், சுய நலவாதிகளுக்கும் இச்சமூகம் கொடுக்கும் அளப்பறிய மரியாதையை என்றைக்கு கொடுக்க மறுக்கிறதோ அன்றைக்கு மனிதர்களின் வாழ்வில் ஏற்றம் வரும்.

இவன் திருடன், இவன் ஊழல்வாதி, இவன் ஏமாற்றுக்காரன், இவன் சுய நலக்காரன் என்று அடையாளம் தெரிந்து வாழ முற்படும் வரை இப்படிப்பட்ட திருடர்களின் வாழ்க்கை பிரகாசமானதாய் தான் இருக்கும்.

குறிப்பு : பி.ஆர்.பியை நம் சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வருடம் சிறையில் கிடப்பார். பின்னர் மேலே இருக்கும் சொத்துக்களின் பட்டியலில் ஒன்று இரண்டு குறையலாம். செட்டில் ஆகி விடுவார். லாட்டரி மாஃபியாக்கும்பலின் கார்ட்டின் இன்றைக்கு சுகமாய்த்தானே இருக்கிறார். யாரால் என்ன செய்ய முடிந்தது அவரை.

– பஞ்சு


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம்

செப்ரெம்பர் 25, 2012

அன்பின் அனாதிக்கு,

மூன்றே மாதத்தில் கரண்ட் கொடுக்கிறேன் என்றுச் சொன்னதால் தான் பெண்களாகிய எங்களின் ஓட்டினை இரட்டை இலைக்கு குத்து குத்துன்னு குத்தினோம். நம்பிக்கை மோசடி செய்திருக்கிறது அதிமுக. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஓட்டுக் கூட பெண்களிடமிருந்து அதிமுகவிற்கு விழவே விழாது. என்னைப் போன்ற குடும்பப் பெண்களை துயரத்திலும், துன்பத்திலும் ஆழ்த்தி இருக்கிறது அதிமுக அரசு. சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம். எங்களூரில் 12 மணி நேரம் பவர் இல்லை. எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாது. குழந்தைகளுக்கு சாப்பாடு செய்வது எப்படி? கணவருக்கு உதவுவது எப்படி?

பெண்களின் வயித்தெரிச்சல் அதிமுக அரசை சும்மா விடாது. எனது இக்கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிடவும். என் கடிதத்திற்கு உங்களின் பதில் என்னவென்று எழுதவும்.

பூரணி

பூரணி,

உங்கள் கடிதம் பப்ளிஷ் ஆகி விட்டது. ஆட்சிமுறை சரியில்லை என்று விகடனில் செய்தி போட்டிருக்கின்றார்கள்.  மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அது ஒரு துயரம். அது போதாது என்று சென்னைக்கு மட்டும் பவர் கட்டிலிருந்து விலக்கு அளித்திருப்பது பிற மாவட்ட மக்களின் எரிச்சலுக்கு அதிமுக அரசு ஆளாகி இருக்கிறது என்பது உண்மைதான். பெண்களின் சாபத்தை அதிமுக அரசு பெற்றிருக்கிறது என்பதும் உண்மையே.

நாடாளுமன்றத்திற்கு டிவெண்டி டிவெண்டி என்றார்கள். இப்படியே இன்னும் சில நாட்கள் சென்றால் ஒன்று கூட கிடைக்காது என்று மாறி விடும்.

மக்களை வாட்டும் மின்வெட்டு, அதிமுகவை நாடாளுமன்றத்திலிருந்து துரத்தி அடித்து விடும் வலிமை கொண்டது.

– அனாதி


எடுபடாத அஹிம்சை

செப்ரெம்பர் 20, 2012

ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் மின்வெட்டைச் சரிசெய்வோம் என்றார் முதல்வர். இது வரைக்கும் சரியாகவில்லை. இடையில் “காற்று” வந்து சற்று ஆறுதல் தந்தது. அதுவும் இப்போது குறைய தமிழக மக்கள் இரவுகளில் தூக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள், தொழில் முடங்கிக் கிடக்கிறது, டீசல் விலை அதிகரித்து விட்டதால் ஜென்செட் பயன்படுத்தினாலும் லாபம் பார்க்க முடியவில்லை, இதற்கிடையில் வீட்டு உபயோகச் சிலிண்டரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விட்டது. போதாதற்கு வெளி நாட்டுக்காரன் சில்லறை விற்பனைக்கடைகளைத் தொடங்கப் போகின்றான். என்ன நடக்குமோ தெரியவில்லை. எப்படித்தான் வாழ்வது என்றும் புரியவில்லை என்று மேற்கு மாவட்டங்களில் இருந்து வந்த இரு நண்பர்களை ஹோட்டலில் சந்திக்க நேர்ந்த போது அவ்ர்கள் புலம்பியது கண்டு மனது வேதனைப்பட்டது.

கருநாநிதி ஆட்சி செய்த 10 வருடங்களை எந்த வித மின் திட்டமும் இன்றி பல வெளி நாட்டுக் கம்பெனிகளை இந்தியாவிற்குள் அனுமதித்து விட்டு, மக்களுக்குக் கொடுக்க வேண்டிய மின்சாரத்தை இவர்களுக்குக் கொடுத்து இல்லாத மின்வெட்டை உருவாக்கி மக்களை சீரழித்து வந்திருக்கிறார் என்று கோபப்பட்டார் நண்பர்.

ஆட்சியாளர்களிடம் மக்கள் சிந்தனை இல்லை என்றால் இப்படித்தான் ஆகும் என்றார் மற்றொரு நண்பர்.

மக்களை வாட்டி, வதைக்கும் இந்த அரசுகள் அப்படி என்ன தான் பெரிதாகச் சாதிக்கப்போகின்றன என்பது புரியவில்லை.

தியாகத்திற்கு பெயர்போன சிங் இனத்தில் தோன்றி இன்றி இந்திய மக்களை கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் மாபெரும் இந்தியாவின் பாரதப் பிரதமரை நினைத்தால் இந்திய மக்களின் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியும் ஒரு பிரதமர். அதையும் சகித்துக் கொள்ளும் இந்திய மக்கள். எதுவரை செல்லும் இந்தச் சகிப்புத் தன்மை என்றுதான் எனக்குப் புரியவே இல்லை.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராய் “மக்கள் போராட்டம்” நடக்கிறது. கேரளாவில் முல்லைப் பெரியார் அணைக்கு எதிராய் “மக்கள் போராட்டம்” நடக்கிறது. எந்த அரசியல் கட்சியும் போராட்டம் செய்யவில்லை. இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடினால் மட்டுமே விடிவு வரும்.

அஹிம்சை போராட்டத்தினால் விளையப்போவது எதுவுமே இல்லை என்று இதுகாறும் பல்வேறு காலகட்டங்களில் நடந்து வந்த போராட்டங்கள் பதில் சொல்கின்றன.

போராட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். சட்ட விரோதமற்ற, மக்களுக்கு பாதிப்பற்ற புதிய வகை போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். அதைச் செயல்படுத்தி ஆளும் ஆட்சியாளர்களுக்கு கிலியைக் கிளப்ப வேண்டும். இல்லையென்றால் நாளை தனி மனித வீட்டுக்குள்ளும் அரசியல்வாதிகள் வந்து பாயைப் போட்டு கூடவே படுத்துக் கொள்வார்கள். அவர்களின் பின்னே வெளி நாட்டு முதலீட்டாளர்களும் வந்து அங்கு நடப்பதைப் படம் பிடித்து பிசினஸ் செய்வார்கள்.

மக்களுக்காகத்தான் ஜன நாயகமும், சட்டமுமே தவிர நம்மை ஆளும் அரசியல்வாதிகளுக்கு அல்ல !

– அனாதி


ஜக்கி வாசுதேவ் செக்ஸ் சாமியாரா?

செப்ரெம்பர் 17, 2012

என்ன சொல்ல ? ஒரு கோவை நண்பர் அனுப்பி இருந்த “ நெற்றிக்கண்” பத்திரிக்கையின் புகைப்படக்காப்பியை படித்துப் பாருங்கள்.

குஞ்சாமணி குதித்துக் கொண்டிருக்கிறான். சாமியாராக போக வேண்டுமாம். லைசென்ஸோடு லீலைகள் செய்யலாம் எவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்கிறான். நித்தியானந்தா, பிரேமானந்தா வகையறாக்கள் மாட்டியதைச் சொன்னால் அது அவர்கள் விதி, நான் ஏன் மாட்டப் போகிறேன்? என்று சிரிக்கின்றான்.

விரைவில் உங்களின் பிரிய குஞ்சாமணி ஏதாவதொரு ஆஸிரமத்தில் சமூக சேவையை ஆற்றக்கூடும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து ஏதாவதொரு டிவியில் இலவச ப்ளூஃபிலிமும் பார்க்க கிடைக்கலாம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

இனி நெற்றிக்கண் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்காக. இச்செய்திக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்புமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் மறுப்பு அறிக்கையும் வெளியிடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– அனாதி


கூடங்குளம் அணு உலை கொடுமையின் உச்சம்

செப்ரெம்பர் 11, 2012

மனித சமூகம் என்பது கொடுத்தும் பெறுவதும் ஆன பரிமாறுதல்களில் தான் இயங்கும். குழந்தை தன் பெற்றோரிடம் பெறும், குழந்தை வளர்ந்து பெரியவரான பின், தன் பெற்றோருக்கு தான் பெற்றதைத் திரும்ப கொடுக்கும்.

மனித வாழ்வின் அடிப்படையே இதுதான். தான் வாழும் சமூகம் நன்றாக இருந்தால் தான் மனித குலம் தழைத்து, சீரும் சிறப்புமாய் வாழ முடியும். தன் சமூகத்திற்கே கேடு செய்ய நினைக்கும் நம்பிக்கைத் துரோகிகள் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் முதன்மையானவர்கள் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும், பணப் பித்து பிடித்தலையும் கார்பொரேட் முதலாளிகளும்தான்.

இம்மூவர்களால் தான் உலக மக்கள் மாபெரும், சொல்லொண்ணாத் துன்பங்களில் அமிழ்த்தப்படுகின்றார்கள்.

நேற்று இரவு புதிய தலைமுறையில் நேர்படப்பேசுவில் பேசிய அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் பேசியது சுத்தமான மக்கள் விரோத, பாசிசத்தன்மை வாய்ந்த, திமிர்த்தனமும், தடித்தனமும் நிரம்பிய எகத்தாளப் பேச்சு.

கூடங்குளம் அணு உலைக் கழிவை என்ன செய்யப்போகின்றார்கள் என்று கேளுங்கள். அதைப் புதைக்க என்ன செலவு ஆகும்? அணுக்கழிவுகளை இவரின் வீட்டின் அடியில் புதைத்து வைத்துக் கொள்வாரா? அல்லது அதன் மேலே படுத்து தூங்குவாரா? இப்படியும் ஒரு மனிதரா என்று அவர் பேசப்பேச ரத்தம் கொதித்தது. உலகமே அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அணுவினால் ஆக்கத்தை விட அழிவே அதிகம் என்பது படித்த அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் எதை இவர் மறுக்கப் போகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகள் மாற்றத்த்துக்கு உரியன மிஸ்டர் பொன்ராஜ். அது முற்றிலும் உண்மையான அறிவு அல்ல.

கல்பாக்கம் மக்கள் இன்று நோயில் செத்துக் கொண்டிருக்கின்றார்களே அதற்கு என்ன சொல்வீர்கள்? இப்படியும் ஒரு மனித குல விரோத பேச்சினைப் பேசி நீங்கள் என்ன சாதிக்கப் போகின்றீர்கள். உங்களுக்கு மட்டும் இறைவன் 1000 வருட வாழ்க்கையா கொடுக்கப் போகின்றான். மனித சமூகத்திற்கு உதவி செய்ய வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் கூட இருக்கலாம் அல்லவா?

அணு உலை பாதுகாப்பானது என்கின்றீர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் அணு உலைக்குள்ளே போய் உட்கார்ந்து கொள்வீர்களா? இல்லை உங்களின் அறிஞர் விஞ்ஞானி அப்துல்கலாம் கூடங்குளத்தில் குடியேறுவாரா? அணு உலை பாதுகாப்பானது என்றுச் சொல்லும் பேர்வழிகள் கூடங்குளத்தில் குடியேறுங்களேன். அப்படிக் குடியேறி மக்களின் சந்தேகத்தைப் போக்குங்களேன் பார்ப்போம். யாரும் அப்பக்கமாய் என்றைக்கும் போக மாட்டீர்கள்.

பயத்துடன் இருக்கும் மக்கள் போராடினால் அது சட்டவிரோதமா? மக்கள் நல் வாழ்க்கை வாழத்தான் சட்டம் இருக்கிறதே ஒழிய அவர்கள் அழிக்கப்பட அல்ல.

இப்படித்தான் ஹிட்லர் பேசினான், இப்படித்தான் முசோலினி பேசினான், இப்படித்தான் இடி அமீன் பேசினான். இவரும் இப்படித்தான் பேசுகிறார்.

இதோ அந்த மகானுபாவன் !

– பஞ்சு


கிக் ஏத்தும் சதா போதையில் குஞ்சு (18+)

செப்ரெம்பர் 6, 2012

சதா என்றாலே கிக். கிக் என்றாலே சதா ! விஜய் மல்லய்யாவின் போதை சமாச்சாரங்கள் எல்லாம் சதாவிடம் எடுபடவே படாது. அப்படி ஒரு முழு போதை தரும் பாட்டில் சதா ! இதோ உங்களுக்காக உங்கள் குஞ்சு உங்களுக்கு கொடுக்கும் சதா பாட்டில் !

– குஷியுடன் குஞ்சு


%d bloggers like this: