குஞ்சுவிற்கு ஏற்பட்ட சந்தேகம்

சமீபத்தில் பிரசன்னா, சினேகா திருமணத்தையும், தமிழன் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமணத்தையும் இல்லாத ஒன்றையும் இருப்பதாகக் காட்டி அலப்பறை செய்யும் விஜய் டிவியில் கண்டு களித்தேன்.

நன்றி மறந்தவர்கள் என்றால் இந்தச் சினிமாக்காரர்களைத் தவிர வேறு எவரையும் கை காட்டி விட முடியாது. தன் மகள் கல்யாணத்திற்கு ரசிகர்களுக்கு விருந்து போடுவேன் என்று அலப்பறை செய்த ரஜினி முதல் உதாரணம்.இதுவரையிலும் அவர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.  தான் வாழும் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்பார்கள். ஆனால் ரஜினி ஏகப்பட்ட இளம் வாலிபர்களின் நுரையீரலை பொசுக்கி அவர்களைச் சாவின் படுகுழியில் தள்ள சிகரெட் கம்பெனிக்கு வியாபார உத்தியாய் செயல்பட்டு ஸ்டைல் என்ற பெயரில் ஏமாற்றினார்.

கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் ரசிகனை தூசி அளவுக்கு கூட மதிக்காதவர்கள் சினிமாக்காரர்கள் என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழ் பதிவுலகில் படம் வெளிவந்த உடனே சென்று படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலரைப் பற்றி வேதனைதான் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவின் தாக்கத்தால் உலகத்திற்கே முன்னுதாரணமாய் விளங்கிய தமிழன் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நன்கு படித்து, உண்மைகளை அலச தெரிந்தவர்களே இக்காரியங்களைச் செய்யும் போது மனதில் எரிச்சல் தான் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கவனிக்க : எங்களது “எந்திரன் திரைப்படத்தின் விமர்சனத்தை”

சிரஞ்சீவி காரு மகனுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டியின் பேத்தியை மணமுடிக்கின்றார்கள். ரஜினியின் மகள்கள் திருமணத்தையும் பற்றியும் ஒரு பார்வையை மனதுக்குள் ஓட்டி விடுங்கள். ஜாதி, மதம் என்பதெல்லாம் பணம் இருக்கும் இடத்தில் இருக்கவில்லை என்பதையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இடத்தில் பணம் பணம். சொர்க்கலோகம் போல ஜோடனை செய்திருந்தார்கள். பணமிருக்கிறது என்பதற்காகத்தானே இத்தனை அலப்பறைகளைச் செய்கின்றார்கள். நான் கேட்கின்றேன்,

இப்படியெல்லாம் திருமணம் செய்த பிறகு மேட்டர் நடக்கும் தானே? அப்போது இவர்கள் வேறு என்ன வித்தியாசத்தைக் காட்டப் போகின்றார்கள்? மேலே, கீழே இரண்டு என்று மொத்தமாய் மூன்று ஓட்டைகளும், ஒரே ஒரு பயலும் தானே இருக்கும்? காசு இருக்கிறதே என்பதற்காக வேறு என்ன டிபரண்ட்டை இவர்களால் செய்ய முடியும்? அப்படி ஏதேனும் டிபரண்ட் இந்த குஞ்சுக்கு தெரியாமல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

– குஞ்சாமணி

6 Responses to குஞ்சுவிற்கு ஏற்பட்ட சந்தேகம்

 1. Aanand Kanthasamy P சொல்கிறார்:

  குஞ்சு சொல்லவந்ததை முழுதாக சொல்லாமல் சந்தேகம் 3 க்கு 1 என்று எழுதியுள்ளது,3 க்கு 3 என்று முடிபீர்களோ?

 2. Pathma Nathan சொல்கிறார்:

  //அப்படி ஏதேனும் டிபரண்ட் இந்த குஞ்சுக்கு தெரியாமல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.// குஞ்சிக்கே சந்தேகமா…? செத்தாண்டா சேகரு.

 3. Pathma Nathan சொல்கிறார்:

  கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் ரசிகனை தூசி அளவுக்கு கூட மதிக்காதவர்கள் சினிமாக்காரர்கள் என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழ் பதிவுலகில் படம் வெளிவந்த உடனே சென்று படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலரைப் பற்றி வேதனைதான் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவின் தாக்கத்தால் உலகத்திற்கே முன்னுதாரணமாய் விளங்கிய தமிழன் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நன்கு படித்து, உண்மைகளை அலச தெரிந்தவர்களே இக்காரியங்களைச் செய்யும் போது மனதில் எரிச்சல் தான் ஏற்படுகிறது.

 4. devadass சொல்கிறார்:

  தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.ரஜினி,பிரதாப் ரெட்டி,சிரஞ்சீவி,விஜய் டிவி,முதலிரவு என அனைத்தையும் அவியலாக்கி இருப்பதால் தங்களுடைய பதிவில் எதை புரிந்து,தெரிந்து எடுத்துக்கொள்வது?
  வாழ்க வளமுடன்.
  snr.DeVaDaSs

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: