அனாதி தளத்தின் விசிட்டர்ஸ்

ஓகஸ்ட் 25, 2012

(மேலே இருக்கும் படத்தில் தின, மாத ஹிட்ஸ் விபரம். படத்தினை கிளிக் செய்து தெளிவாக பார்த்துக் கொள்ளுங்கள் )

ஒரு நண்பர் பின்னூட்டத்தில் கேட்டிருந்த கேள்விக்காக வேர்ட்பிரஸ் தானாகவே திரட்டும் ஸ்டேட்டிஸ்டிக் விபரம் மேலே. பின்னூட்டம் இட்ட நண்பரே இப்போது நம்புகின்றீர்களா? உங்களிடம் பொய் சொல்லி அதன் மூலம் நாங்கள் ஏதும் நன்மை பெறவோ புகழ் பெறவோ நாங்கள் விரும்புவது இல்லை. எங்களது தளத்தின் பெயர் “வெளிச்சத்தில்”.  தேவையற்ற வயித்தெரிச்சல் கமெண்டுகளைப் போட்டு, உடம்பினைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஓகே ! சந்தேகம் தீர்ந்ததா?

– குஞ்சு


கும்மி அடிக்க தோதான நடிகை

ஓகஸ்ட் 20, 2012

சினிமாவை சில வில்லங்கமான பேர்வழிகளுடன் உட்கார்ந்து பார்த்தால் அவர்கள் அடிக்கும் கமெண்டுகள் இருக்கின்றனவே அவைகளை எல்லாம் எழுத முடியாது. கூசும்.

சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

1) அட மாப்ளே என்னாடா இந்த ஆட்டு ஆட்டுறா, கழண்டு கீழே விழுந்துடப் போகுதுடா

2) அடங்கொய்யாலே என்னமா ஆடுது அதுக இரண்டும்

3) மாப்ளே கழுத்துக்கும் கீழே எப்பத்தாண்டா தடவுவானுக இவனுக

இதற்கும் மேலே பச்சையாகத்தான் கமெண்டுகளைப் பேசுவார்கள். கண்ணியமிக்க அனேக பெண்கள் எங்களது பிளாக்கைப் படிப்பதினாலே அதையெல்லாம் சென்சார் செய்து விட்டான் பெண்களுக்கு நிரம்பப் பிடித்த இந்தக் குஞ்சு.

என்ன வாசக நண்பிகளே! என்னை அதாவது உங்களின் பிரிய குஞ்சை உங்களுக்குப் பிடிக்கும் தானே? பின்னூட்டம் போடாதீர்கள். ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.

ஆண்ட்ரியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அம்மணியின் அழகு அப்படி. அந்தப் படுபாவி அனிருத் ஆண்ட்ரியாவை ஆட்டயப் போட நிற்கின்றான். அதென்னவோ தெரியவில்லை, குஞ்சு ரசிக்கும் நடிகைகளை எவனாது வந்து ஆட்டயப் போட்டு தடவிட்டு போகிறான்கள். ராஸ்கல்ஸ்.

சரி இப்போது ஒரு மேட்டரை உங்களுக்குச் சொல்ல வேண்டும். நான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி மீது எனக்கு கொஞ்சம் பொறாமைதான்.

ஏனென்றால் திரு திரு துறு துறு படத்தில் நடித்த ரூப மஞ்சரி (மலையாள மல்லுக்குட்டி) எனக்கு நிரம்பப் பிடித்த ஒரு இளம் பிஞ்சு நடிகை. இப்படத்தில் சும்மா தளதளன்னு இருப்பார். அவர் மீது எனக்கொரு கண் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இவரின் வாயே ! அடச்சே அதெல்லாம் எதற்கு ? ரொம்ப செக்ஸியா எழுத வருகிறது கர்மம்.

கும்மி அடிக்கனும்னா இதப் போல குட்டிகளோடு கும்மி விளையாட்டு விளையாடனும். அப்படிப்பட்ட ஒரு ரகளையான நடிகைதான் இந்த ரூப மஞ்சரி ! இதோ அவரின் ஸ்டில் சில உங்களுக்காக !

– குஷியுடன், கும்மாளத்துடன் உங்களின் குஞ்சாமணி


கலைஞரின் வாழ்க்கை குறிப்பு

ஓகஸ்ட் 18, 2012

விடிகாலையில் போன் அழைத்தது. யாரென்று பார்த்தால் நண்பர்.

“டேய் சப்ளையரு, ஆர் பி ராஜ நாயஹம் எழுத ஆரம்பித்திருக்கிறார்” என்றார் நண்பர். ( என் பெயரைச் சொல்லுவதில் உனக்கு என்னடா அவ்வளவு காண்டு? சப்ளையர் சப்ளையருன்னு காய்ச்சி எடுக்கிறாயே நீ – இது எனது நண்பருக்கு )

”அட ! அப்படியா?”

இப்பதிவு எழுதக் காரணம் ஆர்பிராஜநாயஹம் அவர்கள் மட்டுமே ! சுவாரசியமான எழுத்துக்கும், ஏகப்பட்ட சரக்குக்கும் சொந்தக்காரர் அவர் ஒருவர் தான் இருக்கிறார்.

ஆர்பிரா எழுத வந்து விட்டால் எழுத்துலகில் ஒருத்தன் கூட தான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள். ஓடியே போவார்கள். எழுத்து என்ன பிராந்திக் கடையில் கிடைக்கும் சரக்கா? சரக்கு அடிக்கிறதைப் பற்றி எழுதியே “ஏய் நானும் ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிட்டு திரிவதற்கு”.

ஆர்பிரா சார் ! முதலில் உங்களுக்கு ஒரு சலாம்

கலைஞரின் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவினைப் படித்தேன். இதோ அதற்கான இணைப்பு கீழே. கலைஞர் தன் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டார். அதன் முழு உண்மையும் கீழே இருக்கிறது.

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_02.html

அன்பு நண்பர்களே எனது தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர் வருகின்றீர்கள். அப்படியே ஆர்பி. ராஜநாயஹம் சார் தளத்திற்கும் சென்று படித்து விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் பெட்டகமாய் கொட்டும் அவரின் எழுத்தை வாசிப்பது மட்டுமின்றி பின்னூட்டமும் இட்டு அவரை மேலும் மேலும் எழுத தூண்டுங்கள். அதன் பலன் கிடைப்பது நமக்கு மட்டுமே !

– அனாதி


டெசோ மாநாடு சொல்லும் அரசியல்

ஓகஸ்ட் 12, 2012

மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து திமுக நடத்தும் (ஒரு மாநிலக் கட்சி, உலம மகா ஊழல் செய்து காங்கிரஸ்ஸிடம் வகையாக சிக்கிக் கொண்டிருக்கும் அய்யோ பாவம் கட்சி) மாநாட்டிற்கு “ஈழம்” என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று கடிதம் வந்திருக்கிறது.

இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. சாணக்கியத்தனத்தின் உச்சகட்டம் என்பது இந்த நிகழ்வுதான். இதற்கான திட்டமிடலை செய்தவர் வேறு யாராக இருக்க முடியும்?

வழக்கம் போல பொய் மூட்டைகளை அவிழ்ப்பது போல, கடிதம் வந்த உடனே தமிழர் ஆதரவு தலைவர்கள் எல்லோரும் கருத்துக்களை அவிழ்த்தார்கள்.திமுகதான்  ஈழத்திற்காக, ஈழ மக்களுக்காக போராடுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்.  திமுக தான் நினைத்தை நடத்தி விட்டது.

மறுபடியும் மத்திய அரசு ஈழம் வார்த்தையை பயன்படுத்தலாம் அதுவும் சில பல கண்டிஷன்களோடு என்று மறு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதற்கும் சில சொரிந்து விடும் கட்சித் தலைவர்கள் ஆக்ரோஷமாய் அறிக்கைகளை விடுவார்கள்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்பது  இந்த நிகழ்வினை அவர்கள் கையாளும் போக்கில் தெரிகிறது. டெசோ  நடக்கக் கூடாது அதை ஆளும் அரசு தடுக்க வேண்டுமென்று தான் திமுக நினைத்தது. அதை சரியாகச் செய்கின்றார்கள்.

திமுக கூட்டும் கூட்டத்தில் ஈழம் என்றச் சொல் பயன்படுத்தினால் என்ன பெரிதாக பலன் விளைந்திடப் போகின்றது? ஒன்றுமே இல்லை. திமுக கூட்டும் கூட்டத்தினால் ராஜபக்‌ஷேவிற்கு என்ன ஆகி விடப் போகின்றது? ஒன்றும் இல்லை. மானம், மரியாதை, சொரணை இருக்கும் எந்த ஈழத் தமிழனாவது திமுக கூட்டும் கூட்டத்திற்குப் போவானா? நிச்சயம் போக மாட்டான்? ஆக திமுக ஒரு நாடகத்தை நடத்த முயன்று அதில் சரியாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நாடகத்தில் தோற்றுப் போனவர்கள் அதிமுகவும், காங்கிரஸ்ஸும்.

இனி வரும் காலத்தில் திமுகவின் அறிக்கை சொல்லும் “ ஈழம் “ என்றச் சொல்லை பயன்படுத்தக்கூடாது என்றது காங்கிரஸ், மாநாட்டை நடத்த விடவில்லை அதிமுக ஆக இவர்கள் இருவரும் தமிழின விரோதிகள் என்று.

லட்சக் கணக்கில் கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக தன் உடலை ஆயுதமாக்கிக் கொடுத்தான் ஒரு தமிழன். அத்தமிழனின் உடலை ஆயுதமாக்கி தமிழகமே பொங்கியது. ஒவ்வொரு மாணவனும் தெருவில் இறங்கிப் போராடினான். அன்றைக்கு ஆட்சியிலிருந்த திமுக அப்போராட்டத்தை நசுக்கி அழித்து விட்டது. மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் ( காலையில் செம கட்டு கட்டி விட்டு வந்திருந்தாலும் சொல்வதற்கில்லை) இருந்து ஏதோ ஈழத்தமிழர்களுக்காக திமுக தலைவர் பசியோடு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று மக்களை ஏமாற்றி ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு மாநாடு நடத்துகிறாராம். பொங்கி எழுந்த தமிழ் சமூகத்தை நாடகம் போட்டு, ஏமாற்றி விட்டு இன்றைக்கு மாநாடு நடத்துகிறாராம் இவர். அதை மத்திய அரசும், மாநில அரசும் தடுக்குமாம்.

ஹிட்லர் யூதர்களை வெறுப்பதாய்ச் சொல்லி கொன்றான். அவன் நல்லவன். நேருக்கு நேராய் எதிர்ப்பவன் நேர்மையானவன். அவன் கொண்ட கொள்கைக்கு அவன் சண்டையிடுகிறான். ஆனால் இவர்?????

காலம் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது.  காலத்தின் சுழலில் இவர்கள் காணாமல் போய்விடப் போகும் நேரத்தின் அறிகுறிகள் ஒவ்வொன்றாய் தென்படுகிறது. திருடன் என்றைக்கும் திருடிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா?

ஈழம் என்ற சொல்லை வைத்தும், ஈழத்தமிழர்களிம் பிணங்களின் மீது அரசியல் நடத்தியவர்களை எல்லாம் நாம் தலைவர் என்று அழைக்கின்றோம் அல்லவா?

– பஞ்சு


குஞ்சுவிற்கு ஏற்பட்ட சந்தேகம்

ஓகஸ்ட் 6, 2012

சமீபத்தில் பிரசன்னா, சினேகா திருமணத்தையும், தமிழன் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமணத்தையும் இல்லாத ஒன்றையும் இருப்பதாகக் காட்டி அலப்பறை செய்யும் விஜய் டிவியில் கண்டு களித்தேன்.

நன்றி மறந்தவர்கள் என்றால் இந்தச் சினிமாக்காரர்களைத் தவிர வேறு எவரையும் கை காட்டி விட முடியாது. தன் மகள் கல்யாணத்திற்கு ரசிகர்களுக்கு விருந்து போடுவேன் என்று அலப்பறை செய்த ரஜினி முதல் உதாரணம்.இதுவரையிலும் அவர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.  தான் வாழும் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்பார்கள். ஆனால் ரஜினி ஏகப்பட்ட இளம் வாலிபர்களின் நுரையீரலை பொசுக்கி அவர்களைச் சாவின் படுகுழியில் தள்ள சிகரெட் கம்பெனிக்கு வியாபார உத்தியாய் செயல்பட்டு ஸ்டைல் என்ற பெயரில் ஏமாற்றினார்.

கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் ரசிகனை தூசி அளவுக்கு கூட மதிக்காதவர்கள் சினிமாக்காரர்கள் என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழ் பதிவுலகில் படம் வெளிவந்த உடனே சென்று படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலரைப் பற்றி வேதனைதான் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவின் தாக்கத்தால் உலகத்திற்கே முன்னுதாரணமாய் விளங்கிய தமிழன் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நன்கு படித்து, உண்மைகளை அலச தெரிந்தவர்களே இக்காரியங்களைச் செய்யும் போது மனதில் எரிச்சல் தான் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கவனிக்க : எங்களது “எந்திரன் திரைப்படத்தின் விமர்சனத்தை”

சிரஞ்சீவி காரு மகனுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டியின் பேத்தியை மணமுடிக்கின்றார்கள். ரஜினியின் மகள்கள் திருமணத்தையும் பற்றியும் ஒரு பார்வையை மனதுக்குள் ஓட்டி விடுங்கள். ஜாதி, மதம் என்பதெல்லாம் பணம் இருக்கும் இடத்தில் இருக்கவில்லை என்பதையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இடத்தில் பணம் பணம். சொர்க்கலோகம் போல ஜோடனை செய்திருந்தார்கள். பணமிருக்கிறது என்பதற்காகத்தானே இத்தனை அலப்பறைகளைச் செய்கின்றார்கள். நான் கேட்கின்றேன்,

இப்படியெல்லாம் திருமணம் செய்த பிறகு மேட்டர் நடக்கும் தானே? அப்போது இவர்கள் வேறு என்ன வித்தியாசத்தைக் காட்டப் போகின்றார்கள்? மேலே, கீழே இரண்டு என்று மொத்தமாய் மூன்று ஓட்டைகளும், ஒரே ஒரு பயலும் தானே இருக்கும்? காசு இருக்கிறதே என்பதற்காக வேறு என்ன டிபரண்ட்டை இவர்களால் செய்ய முடியும்? அப்படி ஏதேனும் டிபரண்ட் இந்த குஞ்சுக்கு தெரியாமல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

– குஞ்சாமணி


%d bloggers like this: