ஊத்திக் கொண்ட சகுனி திகிலில் பிரபல நடிகர்கள்

சகுனி படமெப்படி இருக்கிறது என்று விசாரித்தால் கதை வேறுமாதிரியாக இருக்கிறது. படம் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் என்னென்னவோ ஒட்டுகள் பிட்டுகள் என்று சேர்த்து பிரித்து ஒட்டி வெட்டி வேலை செய்திருக்கின்றார்கள். இதற்குள் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் முட்டிக் கொண்டது என்று வேறு கிசுகிசுகின்றார்கள். இப்படி வெட்டி ஒட்டி கதையை கோடம்பாக்கம் சொல்லி வந்தாலும் ஏதோ ஒரு ஸ்டார் வேல்யூ நம்பிக்கையில் படத்தை வாங்கிய வி நியோகஸ்தர்களுக்கு கையை மட்டும் கடிக்காமல் அடி மடியையும் சேர்த்துக் கடித்து விட்டதாம் “சகுனி”. ஆக இது வரையிலும் ஸ்டார் வேல்யூ பார்த்து படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சகுனி வேலை நடந்து விட்டதாம்.

சிவகுமாரை கொண்டு போய் பாலைவனத்தில் விட்டாலும் அவர் பிழைத்துக் கொள்வார் என்பார்கள் அவரின் பல நண்பர்கள். அவரின் குடும்ப பிரபலங்கள் அதாவது பிறந்ததனாலே பிரபலமானவர்கள் சூர்யாவும், கார்த்தியும். கார்த்தியின் கதையோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அக்கட பூமி வெங்கட் போலவே சூர்யா ஆடுவதைப் போலவே ஆடிக் கொண்டிருக்கும் இந்த தம்பியின் ஆரம்பப் படத்தின் கதை பஞ்சாயத்து கோடம்பாக்கத்தில் சிரிப்பாய் சிரித்தது. அமீருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துதான் ஹீரோ சான்ஸே பிடித்தாராம் சிவகுமார்.இப்படிப்பட்ட வரலாறு கொண்ட ஹீரோவின் சகுனி, ஊத்திக் கொண்டதைக் கோடம்பாக்கம் கிசுகிசுவாய் ரகசிக்கிறது. ஆனால் டிவியிலோ படம் ஆகா ஓகோ என்று பல் இளித்துக் கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். பொய் பேசினால் பிரபலமாகலாம் என்கிற தத்துவத்தை நீங்கள் பிரிந்து கொள்ள வேண்டும்.

கதை இப்படி இருக்க,

துப்பாக்கி பட ஹீரோ அடிவயிற்றில் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறதாம். ஏதாவது செய்து நம்ம படத்தை ஹிட்டாக்கிடனும்னு துடிப்பா துடிக்கிறார். பிறந்த நாளுக்கு மோதிரமெல்லாம் கொடுத்தார்(சுத்த தங்கமாங்கனா அந்த மோதிரமெல்லாம்?). இருந்தும் என்ன செய்ய விதி சும்மா விடுமா?

பிரபல கதா நாயகர்களெல்லாம் கதா நாயகிகளுடன் டிஸ்கஸ்ஸினில் இருக்கின்றார்கள். நல்ல கதை நல்ல கதை என்று அலைகின்றார்கள். துப்பாக்கி ஹீரோவிடம் கதை சொன்னால் ,அவரின் அப்பா அதை வெட்டி ஒட்டி படமெடுத்து விடுவார் என்ற கிலியினாலே கில்லி வீட்டுப்பக்கம் ஒருத்தரும் எட்டிப் பார்ப்பது இல்லையாம்.

ஏய் நானும் ரவுடிதான்னு சொல்லிக் கிட்டு திரிகிற சிலபல உதவிகளும், வேலையில்லாமல் குசு பிடித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களும் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்களாம்.

இனி ஒரே அடியில் ஊரையே கொளுத்துவோம்கிற டயலாக்குகள் எல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

சகுனி தன் வேலையைக் காட்ட, காசை கொடுத்து ஆப்பை வாங்கிச் சொருகி இருக்கிறார்கள் சில விநியோகஸ்தர்கள்.

இனியும் தொடரும் சில செய்திகள்

– குஞ்சாமணி

One Response to ஊத்திக் கொண்ட சகுனி திகிலில் பிரபல நடிகர்கள்

  1. jai சொல்கிறார்:

    ajiththukku allu illai. netchayamaga billa flop than….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: