காமெடி பீஸ்

பொது வெளியில் டாக்டர் சீனிவாசனை அசிங்கப்படுத்திய கோபி நாத், நீயா நானா நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவியின் அக்கிரமங்களை விரிவாக எழுதி கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தனி மனித சுதந்திரத்தைப் பேணும் அமெரிக்கர்கள் நிச்சயம் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுப்பார்கள். எங்களது நண்பர்கள் மூலமும் இந்த நிகழ்வுகள் பற்றிய அறிக்கை ஒன்றினை அவர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

E-mail: investor@newscorp.com

டாக்டர் சீனிவாசன் தயாரித்த, தயாரிக்கும் பல படங்களினால் பல சினிமாக் குடும்பங்களின் அடுப்பு எரியும். வயிறாற சாப்பிடுவார்கள். மிஸ்டர் அதிமேதாவி, மண்டைக்கனம் பிடித்த கோபி நாத் அவர்களால் எத்தனை குடும்பங்கள் பிழைத்தன? நாலு பேருக்கு சோறு போடத் துப்பில்லாத “சில” எல்லாம் பிறரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

கமல்ஹாசன், ரஜினிகாந்தி(இது எப்படி இருக்கு?), விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்றோரின் நடிப்புக்கும் டாக்டர் சீனிவாசன் நடிப்புக்கும் என்ன வித்தியாசம் கண்டாரோ கோபி நாத்?. நல்ல இயக்குனர்களின் கைவண்ணத்தில் பேசக்கூடிய நடிகராக சீனிவாசன் வர முடியும் என்கிற போது, இதில் என்ன போலிக் கவுரவம் கண்டார் கோபி நாத்.

கோடிக்கணக்கில் காசு போட்டு கார் வாங்கி வைத்திருப்போர் அனைவருமே போலிக் கவுரவத்திற்காகத்தானே வைத்திருக்கிறார்கள். இல்லையென்று சொல்வாரா இந்த மண்டைக்கனம் பிடித்த கோபி நாத்.

கைக்காசைப் போட்டு தியேட்டர்களில் ரசிக கண்மணிகள் போர்வையில் பேனர் கட்டும் நடிகர்களிடம் போலிக் கவுரவம் பற்றி பேசத் தைரியம் இருக்கிறதா கோபிக்கு?

வெட்டவெளியில் அம்மணமாய் நிற்கின்றார் இந்தக் கோபி. – பஞ்சு

3 Responses to காமெடி பீஸ்

 1. Suganitha சொல்கிறார்:

  ungalukku Gopi mela enna kovam sir!!!!!!

 2. Udhayan சொல்கிறார்:

  மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்…
  எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
  தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
  கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது…
  ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
  பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
  குறைந்துவிடவில்லை…

  சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை…
  படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை…
  விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
  சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை…

  நான் அவர் படமும் பார்த்தது இல்லை..
  ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்…
  தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்…

  மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்…
  தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..

 3. bandhu சொல்கிறார்:

  நூற்றுக்கு நூறு சரி! வெறும் வாயில் வண்டி ஓட்டும் கோபியை விட பவர் ஸ்டார் எவ்வளவோ மேல் ! இதே பவர் ஸ்டாரின் படம் பெரிய அளவு வெற்றி பெற்று விட்டால், நாயை போல் குழைவார் இந்த கோபி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: