காமெடி பீஸ்

மே 30, 2012

பொது வெளியில் டாக்டர் சீனிவாசனை அசிங்கப்படுத்திய கோபி நாத், நீயா நானா நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவியின் அக்கிரமங்களை விரிவாக எழுதி கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தனி மனித சுதந்திரத்தைப் பேணும் அமெரிக்கர்கள் நிச்சயம் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுப்பார்கள். எங்களது நண்பர்கள் மூலமும் இந்த நிகழ்வுகள் பற்றிய அறிக்கை ஒன்றினை அவர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

E-mail: investor@newscorp.com

டாக்டர் சீனிவாசன் தயாரித்த, தயாரிக்கும் பல படங்களினால் பல சினிமாக் குடும்பங்களின் அடுப்பு எரியும். வயிறாற சாப்பிடுவார்கள். மிஸ்டர் அதிமேதாவி, மண்டைக்கனம் பிடித்த கோபி நாத் அவர்களால் எத்தனை குடும்பங்கள் பிழைத்தன? நாலு பேருக்கு சோறு போடத் துப்பில்லாத “சில” எல்லாம் பிறரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

கமல்ஹாசன், ரஜினிகாந்தி(இது எப்படி இருக்கு?), விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்றோரின் நடிப்புக்கும் டாக்டர் சீனிவாசன் நடிப்புக்கும் என்ன வித்தியாசம் கண்டாரோ கோபி நாத்?. நல்ல இயக்குனர்களின் கைவண்ணத்தில் பேசக்கூடிய நடிகராக சீனிவாசன் வர முடியும் என்கிற போது, இதில் என்ன போலிக் கவுரவம் கண்டார் கோபி நாத்.

கோடிக்கணக்கில் காசு போட்டு கார் வாங்கி வைத்திருப்போர் அனைவருமே போலிக் கவுரவத்திற்காகத்தானே வைத்திருக்கிறார்கள். இல்லையென்று சொல்வாரா இந்த மண்டைக்கனம் பிடித்த கோபி நாத்.

கைக்காசைப் போட்டு தியேட்டர்களில் ரசிக கண்மணிகள் போர்வையில் பேனர் கட்டும் நடிகர்களிடம் போலிக் கவுரவம் பற்றி பேசத் தைரியம் இருக்கிறதா கோபிக்கு?

வெட்டவெளியில் அம்மணமாய் நிற்கின்றார் இந்தக் கோபி. – பஞ்சு


ரொம்ப நல்லவர் யாரு?

மே 27, 2012

இந்த உலகத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே அரிது என்கிறார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. இதோ ரொம்ப ரொம்ப நல்லவர் ஒருவரைப் பாருங்கள். – அனாதி


நித்தியானந்தா மதுரை ஆதீனம் பற்றி

மே 23, 2012

சார்,

நித்தியானந்தா, மதுரை ஆதீனம் பற்றி உங்களின் கருத்து என்ன? வித்தியாசமான பார்வையில் பதிலை எதிர்பார்க்கிறேன்.- கல்பனா

கல்பனா, கேள்விக்கு நன்றி.

முதலில் தற்போது இருக்கும் மதுரை ஆதீனம் திரு அருணகிரி நாதர் பற்றிப் பார்க்கலாம். தற்போது இருக்கும் அருணாசலம் என்கிற ஆதீனம் ஆரம்பகாலத்தில் திமுகவின் இளைஞரணியில் ஏதோ ஒரு பதவியில் இருந்தார். திமுக ஆட்சிக் காலத்தில் சட்ட அமைச்சர் எஸ்.மாதவன் திட்டமிடலில், ஆதீனங்களுக்குள் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால் நன்மை என்பதால் இவர் ஏதோ ஒரு பதவியில் மதுரை ஆதீனத்திற்குள் சென்றார். அதைத் தொடர்ந்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று, திமுக கட்சியின் ஆதரவில் தற்போதைய 292 ஆதீனமான அருணகிரி பதவியில் அமர்ந்தார். ஆக இவரின் நியமனமே கட்சியின் ஆதரவோடு உருவாக்கப்பட்டதால் இவர் ஆதீனத்திற்கு பொறுத்தமில்லாதவர் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல ஏகப்பட்ட சினிமா விழாக்களில், அரசியல் களங்களில் மேடைகளில் நேரத்திற்கு தக்கவாறு இவர் பேசிக் கொண்டிருந்தார். அதை இவ்வுலகம் கண்டிருக்கிறது. தகுதியற்ற ஒருவர்  ஆன்மீகப் பதவிக்கு வந்தால் என்னென்ன செய்வாரோ அதையெல்லாம் இவர் செய்து கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றது அக்மார்க் ஆன்மீக கார்ப்பொரேட் கம்பெனி விஷயமாகத்தான் பார்க்க வேண்டும்.

ஆன்மீக பிசினஸ் செய்யும் நித்தியானந்தா ஒரு சிறந்த நிர்வாகி. இவருக்கும் மதுரை ஆதீனத்திற்கும் எந்த வித சம்பந்தமும் ஆன்மீக ரீதியில் இல்லவே இல்லை. மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட சொத்துக்களாய் மாற்றி அதை வைத்து மேலும் மேலும் பெரிய கார்ப்பொரேட் ஆன்மீக நிறுவனத்தை உருவாக்க முனைகிறார் நித்தியானந்தா. இவருக்கு மக்கள் மீதெல்லாம் அன்பும் இல்லை, அபிமானமும் இல்லை. நித்தியானந்தாவைச் சந்திக்க வேண்டுமெனில் ஒன்று அவர் பணக்காரராக இருக்க வேண்டும், இல்லை அவர் சமூகத்தின் பிரபலமானவராக இருத்தல் வேண்டும். சாதாரண மக்களும் சந்திக்கலாம்.சாதாரண மக்கள் பொதுத்தொண்டு, சேவை என்கிற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்டு காசில்லாத வேலைக்காரர்களாக ஆக்கப்படுவார்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஆன்மீக மடங்களிலும், மத்களிலும், ஆதீனங்களிலும், ஆசிரமங்களிலும் இதைத்தான் செய்து வருகின்றார்கள்.

ரஞ்சிதாவால் நித்தியானந்தா பிரச்சினை ஆனது பெரிய அரசியல் மர்மம். பாலியல் வழக்கு பற்றி ஒரே ஒரு வார்த்தை என்னவென்றால் ஆணும் பெண்ணும் ஓரிடத்தில் இருந்தால் பாலியல் எண்ணங்கள் வராமல் என்ன செய்யும்? நூறாண்டுகாலம் தவம் இயற்றியவர்களே பெண்ணின் மடியில் விழுந்த வரலாற்றுக் கதைகளைக் கொண்டது இந்து மதம். காமத்தின் முன்னால் நித்தியானந்தாவின் யோகமும்,தவமும் தூசு. ரஞ்சிதாவிற்கும் நித்தியாந்தாவிற்கு உடலுறவு இருந்தால் யாருக்கு என்ன பிரச்சினை என்று எனக்குப் புரியவே இல்லை. அது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. இவர் மீதான பாலியல் வழக்கு கோர்ட்டில் நிற்கவே நிற்காது. ஏனென்றால் வழக்குத் தொடுத்தவர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்கிறபோது பொதுவாய் தண்டனை கொடுக்க இந்திய அரசியல் சட்ட விதிகளில் இடம் இல்லை.

காலத்தின் போக்கில் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பெரிய தலைவர்கள் எல்லாம் காணாமலே போய் விடுவர். அதே போல பலரின் வயிற்றெரிச்சலில் விழும் நித்தியானந்தாவும், யாருக்கும் உபயோகமே படாத ஆதீனமும் கால வெள்ளத்தின் போக்கில் அழிந்து போகும் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

கல்பனா, இது போன்ற ஆன்மீக அரசியல்வியாதிகள் பற்றியோ, மடங்களைப் பற்றியோ சாதாரண மக்களான நாம் பேசுவதால் நன்மை ஏதும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை.

– அனாதி


ஏன் எதற்கு இப்படியெல்லாம்?

மே 22, 2012

கேள்வி : அனாதி அவர்களுக்கு,அதிமுக ஆட்சியின் ஒரு வருட ஆட்சியைப் பற்றிய உங்களின் அவதானிப்பு என்ன? என்பதை எழுதுவீர்களா? -மகி,காரைக்குடி

பதில் : அன்பு மகி, ஒரே ஒரு கேள்வி காரணமாய் விகடன் மதன் இன்று விகடகவி மதனாக மாறி கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனை புத்திசாலித்தனமிருந்தும் என்ன பிரயோசனம்? அதிகாரத்தின் முன்னே வளையாத எலும்புகளும் வளைந்து விடுகின்றனவே. இப்படியான சூழலில் ஏன் எதற்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்கின்றீர்கள் என்று புரியவில்லை.

மக்களின் பணத்தில் 20 கோடி ரூபாய் செலவழித்திருக்கின்றார்கள். நூறாண்டு சொல்லும் ஓராண்டுச் சாதனை என்று பஞ்ச் வேறு. ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் மின்வெட்டினை சரி செய்கிறேன் என்றார்கள். ஒரு வருடம் ஆகி விட்டது, இன்னும் சரியாகவில்லை. இது ஒன்றே போதும் அதிமுக ஆட்சியின் சாதனையை விளக்குவதற்கு. சட்டசபை நடவடிக்கை பற்றி விவரிக்க விரும்பவில்லை என்றாலும்  கூட ஒரு விஷயம் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். அதிமுக்கியமான அசந்தர்ப்பமான நேரங்களில் மட்டுமே விவாதம் இன்றி மசோதா நிறைவேற விதி 110 பயன்படுத்துவார்கள். அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் மசோதா பற்றி அவைக்குச் சொல்வார்கள். ஆனால் இப்போது நடப்பது என்ன? சட்டசபை ஜனநாயகம் கேள்விக்குறியாய் நிற்கிறது. வேறொன்றினையும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் சட்டம் ஒழுங்கு சரிப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் ஏகபோக ஆதிக்கம் குறைந்திருக்கிறது. அவ்வகையில் நல்ல ஆட்சி என்று சொல்லலாம்.

– அனாதி


ஒரு பெண்ணும் ஒரு கோடியும்

மே 20, 2012

விஜய் டிவியில் கையில் ஒரு கோடி புரமோ பார்த்தேன். அச்சு அசல் ஒரு அட்டகாசமான பெண் ஒன்று பேசிக் கொண்டிருந்தது. சூர்யாவிடம் சொல்கிறாள் ”கனவில் மட்டும் தான் ஆடிக் கொண்டிருக்கிறேன், நான் எப்பொழுது உங்களுடன் ஆடுவது?”. உடனே சூர்யா அவருடன் ஆட்டம் போடுகின்றார்.

இவள் தான் நவீன பெண்மணி !

சினிமாக்காரனுடன், சினிமாக்காரியுடன் ஆடுவது தான் வாழ்க்கையின் நோக்கம் என்கின்ற இளைய தலைமுறை மாறும் வரை, தமிழகம் உருப்படப் போவதே இல்லை.

உங்களுக்குத் தெரியுமா? மிஸ் த்ரிஷா 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்து இருக்கின்றாராம். இப்போது ஒன்னே கால் கோடிக்கு பென்ஸ் கார் வாங்கி இருக்கின்றாராம்.

எப்படி இது சாத்தியம் என்று நினைத்துப் பாருங்கள்.

நாம் நம்மை இழந்து கொண்டிருக்கிறோம். நம் உழைப்பில் பலர் சுகமாய் வாழ்கின்றார்கள். நம் குடும்பமோ அல்லற்படுகிறது.

– அனாதி


FEFSI – தமிழ் சினிமா சீரழிவின் காரணகர்த்தா

மே 18, 2012

தமிழ் சினிமா உலகிற்கே முன்னுதாரமான ஒன்று. அப்படிப்பட்ட சினிமாவில் பெஃப்சி என்ற தொழிலாளர் அமைப்பு நடத்தி வரும் சட்ட விரோத, ஜன நாயக விரோத நடவடிக்கைகளை அட்வகேட் சிவா அவர்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அனாதி இணைய தளத்தின் வாசகர் ஒருவரின் அன்பு கோரிக்கைக்காக அந்த வெள்ளை அறிக்கை இங்கு வெளியிடப்படுகிறது. சினிமாவை ரசிப்போர் அனைவரும் படித்து விட்டு, இப்படியும் இருக்குமா என்று நிச்சயம் அதிர்ந்து போவீர்கள் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

ஃப்ளிப்புக்கை அப்லோட் செய்ய இயலாத காரணத்தால் பிக்சராக தரப்படுகிறது.

– அனாதி

குறிப்பு : ஃபெப்சி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பக்கம் நியாயமானதை எழுதினால் எந்த வித வெட்டும் ஒட்டும் இன்றி அதையும் வெளியிடுவோம்.

படத்தின் மீது கிளிக் செய்து பிக்காசோவில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் முழு அறிக்கையையும் படித்துக் கொள்ளலாம்.


ரசனையில் ஒளிந்திருக்கும் ரகசியம்

மே 15, 2012

அவர் ஒரு பிரபல இயக்குனர். மனைவியும் சினிமாவைச் சேர்ந்தவர். வெளியுலகில் அவருக்கு இருக்கும் பெயரும், புகழும் சொல்லித் தான் தெரிய வேண்டுவதில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் எப்பேர்ப்பட்ட நடிகரானாலும் சரி, கையது கொண்டு மெய் பொத்தி நிற்பர். நடிகைகள் எல்லாரும் அரண்டு போய் அமைதியாய் கிடப்பர். அமைதியின் டெரர் என்று அழைக்கப்பட்ட அந்த இயக்குனரின் பட ஷூட்டிங்கிற்கு எனது நண்பி ஒருத்தி அழைப்பின் பேரில் (இயக்குனரின் அனுமதியுடன் தான்) சென்றிருந்தேன். என்னுடன் குஞ்சாமணி ட்ரைவர் கோலத்தில் வந்தான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பின்னே அஜித் குமாருக்கும் சவால் விடும் அழகோடு கன்னத்தில் குழியுடன், வொயிட் டிஷர்ட்டில், டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்டுடன் நின்றிருந்த உங்களின் பிரிய குஞ்சாமணியை பார்த்தாலே பார்க்கும் இளம் பெண்களின் இதயம் ஆசிட் வீசியது போல பொசுங்க ஆரம்பிக்குமே, யூனிட் ஆட்கள் எல்லாம் எம்மாத்திரம்? அசந்து போய் நின்றார்கள்.

தோழி என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இயக்குனர் அருகில் வந்து இரண்டு இரண்டு வார்த்தைகளில் வரவேற்றார். என் பின்னாலே ஒரு கண்ணை மட்டும் காட்டியவாறு, பம்மிக் கொண்டு நின்றான் குஞ்சாமணி. அது அவனின் ஸ்டைல். இம்ப்ரஸ் செய்கின்றானாம். தோழி என்னைக் கவனிப்பதை விட்டு விட்டு, குஞ்சாமணியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

‘அனாதி, சார் யாரு?’

‘சாரோட ட்ரைவர்’ என்றான் முந்திக் கொண்டு

அவனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. படுபாவி நம்மை பயன்படுத்திக் கொண்டானே என்று சிரித்துக் கொண்டேன். கண்ணுக்குத் தெரியாத தூசி கிடைக்கட்டுமே, சீனப் பெருஞ்சுவரையே கட்டி விடுவான் இந்த குஞ்சு.

தோழி, அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள். குஞ்சு பெண்களின் கண்களுக்குள் பார்ப்பான். குறுகுறுவென பார்வை. இதழ் கடையோரத்தில் புன் சிரிப்பொன்று தவழும். கற்புக்கரசியானாலும் ஒரு கணம் சிலிர்த்து விடுவார்கள். நான் பலமுறை அவன் கண்களைச் சந்தித்து அரண்டு போய் இருக்கிறேன். அவன் ஏதோ தியானமெல்லாம் செய்கின்றானாம் என்று பஞ்சு சொன்னான். என்னவோ தெரியவில்லை.

அவனை முன்னிட்டு ஹோட்டலில் அழகிகளின் கூட்டம் வருவதால் நான் அவனின் பர்ஷனல் விஷயங்களில் தலையிடுவதில்லை. அதை விரும்புவதும் இல்லை.

இரண்டு முறை இயக்குனர் அருகில் வந்து ஏதோ சொல்லிச் சென்றார். ஷூட்டிங்கில் கொடுக்கும் ஷூஸ் கன்றாவியாக இருந்தது. நான் முகம் சுழிப்பதைக் கண்ட குஞ்சு, ஓடோடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

அதற்குள் தோழி குஞ்சுவுடன் ஒட்டிக் கொண்ட மாதிரி அவனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அது மட்டுமா அவளின் நண்பிகளில் சிலரும் குஞ்சுவோடு கடலை போட்டுக் கொண்டிருந்தனர். வேட்டை மன்னன் ஆரம்பித்து விட்டான். அவன் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அனுபவிக்கட்டும். சமூகத்தில் கல்யாணத்துக்கு முன்பு வரையான வாழ்க்கைகள் எதுவும் புரட்டிப் பார்க்கப்படுவதில்லை. முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர்கள் அதிகமாகி விட்டனர். கோர்ட்டுகளில் விவாகரத்துக்கள் எண்ணிக்கை கூடுவது பெண்களின் சுதந்திரத்தையும், ஆண்களின் சுதந்திரத்தையும் வெளிக் கொண்டு வருகின்றன. இருக்கட்டும் சந்தோஷமாய்.

தோழியைச் சந்தித்து விட்டு, ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது காரை ஓட்டிக் கொண்டிருந்த குஞ்சு, ’அனாதி உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்கின்றாயா?’ என்றான்

’சொல்லுடா !’

’உன் தோழியிடம் கறந்த மேட்டர் டா !’

’ம்…!’

’இயக்குனர் இருக்காரே அவருக்கு டிவி நாடகம் தான் பிடிக்குமாம்’

’ஏனாம்?’

’அவரின் பெண்டாட்டி பதினைந்தாயிரத்திற்கும் மேலே கொடுப்பாராம். உன் தோழி பணத்தோடு சான்ஸையும் பிடித்து விட்டாளாம்’

‘அட, இப்படி ஒரு ரசனையா?’

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அல்லவா இயக்குனர் நடந்து கொள்கிறார். இயக்குனரின் படங்களில் ஹை கிளாஸ் நடிகைகளின் குத்து டான்ஸ் இருப்பது நினைவில் நிழலாடியது. பூனை என்றாலே கள்ளம் தானே? நண்பர்களே !

ஹோட்டல் வாசலில் கார் நின்றது

– அனாதி


%d bloggers like this: