அரசியல்கட்சியின் பெண் பிரச்சாரகர் கடிதம்

அனாதி அவர்களுக்கு,

சில நாட்களுக்கு முன்பு தான் உங்களது பிளாக்கை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து படித்துக் கொண்டே வருகிறேன். அள்ள அள்ள குறையாத சுரங்கமாய் சுய எள்ளல், தங்களையே கதாபாத்திரமாக்கி தங்களையே கிண்டல் செய்து கொள்ளும் பதிவுகள் என்று இதுவரை படிக்காத கோணங்களில் எழுதிச் செல்லும் உங்களின் பாங்கு என்னை மேன்மேலும் கவர்ந்து கொண்டே செல்கின்றன.

நீங்கள் எப்படி இருப்பீர்கள், உங்கள் ஹோட்டல் எங்கு இருக்கிறது என்றெல்லாம் அறிந்து கொள்ள மாபெரும் ஆசை கிளர்ந்து நிற்கின்றது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் எங்கேனும் இருக்கிறதா என்று யோசித்தால் சிறிய ஆயாசம் மேலெழும்புகிறது. இருப்பினும் என்றாவது ஒரு நாள் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

ஒரு பிரபல கட்சியின் கொள்கைப் பிரச்சாரக் குழுவின் பிரதான பேச்சாளராய் இருந்து வருகிறேன். ஒவ்வொரு கூட்டத்திற்கு குறிப்பிட்ட அளவில் கட்டணம், போக்குவரத்து இன்னபிறவும் கிடைத்தாலும், நான் அந்த வருமானத்தை மட்டுமே நம்பி இல்லாமல் மேலதிக வருமானம் பார்ப்பேன். அவ்வாறு கிடைத்த பணத்தில் கோடிக் கணக்கில் பணமும், தோட்டங்களும், வீடுகளும் இருக்கின்றன.

பணமிருந்தால் போதும் உலகம் உன் பின்னால் ஓடி வரும் என்று எனக்குப் போதிக்கப்பட்டது. பணத்திற்காக என் உடலை நான் கடையாக்கினேன். கடையில் விற்பனை படு ஜோர். இந்த வயதிலும் என் மீது அதீத பிரியம் கொண்டவர்கள் இருக்கின்றதை நினைத்துப் பார்த்தால், கிழவி ஆகும் வரையிலும் எனக்கு மார்க்கெட் இருக்கும்.  நான் சேர்ந்திருக்கும் கட்சியில் கிழவர்கள் தான் அதிகம். அவர்களிடையே எனக்கு மார்க்கெட் கூடிக் கொண்டே தான் போகின்றதே ஒழிய குறைந்த பாடில்லை. பணம் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கடையில் வியாபாரம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. என் கடையின் பெயர் என்ன தெரியுமா? “ கொள்கை பரப்பு பேச்சாளர்”.

தனியாக படுத்து தூங்கி நீண்ட நாட்கள் ஆகின்றன. மனம் “கரன்சி கட்டுகளின் வாசனைக்காக” ஏங்குகிறது. ஒரு கட்டு குறைவானால் கூட அடுத்த தடவை இன்னும் அதிகம் சேர்க்க மனது துடிக்கிறது. எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் என் அடிமனதுக்குள் எழும் “பரிகாசச் சிரிப்பு” என்னை தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறது. அந்த பரிகாசத்திற்கு நீங்கள் சொல்லும் ஆதரவான பதில் என்ன என்று அறியத் துடிக்கிறேன்.

– தேவகி

தேவகி, உங்கள் பிரச்சினை விரைவில் சரியாகி விடும். ஒவ்வொரு காலகட்டத்தில் மனிதர்களுக்கு ஒவ்வொரு விஷயங்களின் மீது பிடிப்பு அதிகமாகும். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி விடும். உங்களுக்கும் அதே போல நடக்கும். அதுவரை உங்களின் பிரச்சாரகர் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். விதியின் வேலை மிகவும் ரகசியமானது, மர்மமானது. அதன் விளைவுகள் வரும் போது அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான். தப்பிக்கும் வழியே இல்லை. வாழ்த்துக்கள்

– அனாதி

One Response to அரசியல்கட்சியின் பெண் பிரச்சாரகர் கடிதம்

  1. ma du சொல்கிறார்:

    well said

    by ma du

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: